வாஸ்து படி பூஜை அறை, படுக்கையறை, குளியல் அறை, சமையல் அறைகளுக்கான அளவுகள்..!

Advertisement

வாஸ்து அறை அளவுகள் – Room Size Vastu in Tamil

பொதுவாக வீடு என்றாலே பலவகையான அறைகள் இருக்கும். ஆக அதனை வாஸ்து சாஸ்திரம் படி சரியான அளவில் அமைத்தால் உங்கள் வீடு செல்வ செழிப்புடன் இருக்கும். மேலும் எதிர்மறை ஆற்றல்கள் உங்கள் வீட்டில் இருக்காது அதேபோல் நேர்மறை ஆற்றல்கள் உங்கள் வீட்டில் நிரம்பி வழியும். வீடு கட்டுவதற்கு முன்பு சரியான அளவில் சரியான அளவில் சரியன திசைகளுக்கு ஏற்றது போல் உங்கள் வீட்டின் திட்டமிட்டு அஸ்திவாரத்தை அமைக்க வேண்டும்.

வாஸ்து  சாஸ்திரத்தின் படி நாம் வீட்டை வடிவமைக்கும் போது அமைதியான சுமுகமான செல்வச்செழிப்பு கொண்ட வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை. சரி இங்கு வாஸ்து சாஸ்திர முறைப்படி எந்த அறைக்கு எந்த மூலை சிறந்தது படுக்கையறை முதல் உங்கள் சமையலறை மற்றும் பூஜை அறை வரை, வாஸ்து சாஸ்திரத்தின்படி சரியான அறை அளவு என்ன என்பது குறித்த தகவலை இங்கு பதிவு செய்துள்ளோம். அதனை படித்து பயன்பருங்கள்..

பூஜை அறை வாஸ்து அளவுகள் – Pooja Foom Vastu Size in Tamil:பூஜை அறை

பொதுவாக தெய்வ வழிபாடு மற்றும் பிராத்தனைக்கு வடகிழக்கு திசைக்கு சிறந்த திசை என்று வாஸ்து சாஸ்த்திரத்தில் கூறபடுகிறது. இதுமட்டும் இல்லாமல் பூஜை அறையை வடக்கு மூளை அல்லது கிழக்கு மூளை சிறந்ததாக பார்க்கப்படுகிறது. மேலும் பூஜை அறையை எந்த திசையில் வைக்கவேண்டும் என்பதில் எந்த ஒரு விருப்பமும் இல்லை என்றால் பூஜை அறையை மேற்கு பகுதியை பார்த்தபடியும் வைக்கலாம்.

தெற்கு பகுதியில் பூஜை அறை இருக்க கூடாது. பூஜை அறைக்கென்று தனித்துவமாக எந்த ஒரு அளவும் இல்லை. உங்கள் விருப்பத்திற்கேற்ற அளவில் பூஜை அறையை நீங்கள் அமைத்துக்கொள்ளலாம். இருப்பினும் பூஜை அறையில் படிக்கட்டுகள் அமைக்க முடியாது. ஜன்னல் மற்றும் கதவுகளை கிழக்கு அல்லது வடக்கு நோக்கி திறக்கும் படி அமைக்க வேண்டும்.

இதையும் கிளிக் செய்து பாருங்கள் 👇
மேற்கு பார்த்த வீடு வாஸ்து சாஸ்திரம்

படுக்கையறை வாஸ்து அளவு – Bedroom Size as per Vastu in Tamil 

படுக்கையறை

நமது வாழ்வின் ஒவ்வொரு நாளும் குடும்பத்திற்காக அயராது உழைத்து பாடுபட்டு வீடு திரும்பு ஓய்வு எடுக்கக்கூடிய ஒரு இடம் மற்றும் அந்நாளை முடிக்கும் இடம் தான் படுக்கை அறை. ஆக இந்த அறையை கிழக்கு திசையில் அமைப்பது மிகவும் சிறந்தது. அவ்வாறு அந்த திசையில் நீங்கள் படுக்கும் போது உங்கள் தலை தெற்கு நோக்கி வைப்பது சிறந்த செல்வம், செழிப்பு மற்றும் மகிழ்ச்சியைக் குறிக்கிறது. மேற்கு, புகழ், செழிப்பு, புகழ் ஆகியவற்றைக் குறிக்கிறது. இருப்பினும் தலை வடக்கு நோக்கி உறங்குவதை முற்றிலும் தவிர்க்கவும்.

இந்த படுக்கை அறைக்கு வாஸ்து சாஸ்திரப்படி சரியான அளவு 130 சதுர அடி அல்லது 12 சதுர மீட்டர் ஆகும். படுக்கையறையை வடமேற்கு திசையில் வைக்காதீர்கள். மேலும் இந்த படுக்கை அறைக்கு சிறந்த திசையாக , வடகிழக்கு அல்லது தெற்கு திசை சிறந்த திசையாக கூறபடுகிறது. ஏன் என்றால் காலையில் நேரடியாக சூரிய ஒளியைப் பெறுகிறது. தெற்கு திசை பெண்களின் அன்பு, வளர்ச்சி, மகிழ்ச்சி மற்றும் ஆரோக்கியத்தை தருகிறது.

பாத்ரூம் வாஸ்து அளவுகள் – Bedroom Vastu Size in Tamil:பாத்ரூம் வாஸ்து அளவுகள்

பொதுவாக வாஸ்து சாஸ்திரம் முறை படி குளியல் அறை என்று சொல்லப்படும் பாத்ரூம் அமைத்தற்கு சிறந்த இடம் எதுவென்றால் வடக்கு அல்லது வடமேற்கு. இந்த பாத்ரூம் அமைப்பதற்கான சரியான வாஸ்து அளவுகள் 40 முதல் 60 அடிக்கு இடையில் இருக்க வேண்டும். எதிர்மறை ஆற்றல்கள் குளியலறைக்கு அருகில் குவிந்திருப்பதைக் கருத்தில் கொண்டு, அதன் கதவை எப்போதும் மூடி வைத்திருப்பது அவசியம்.

இதையும் கிளிக் செய்து பாருங்கள் 👇
வாஸ்து நாட்கள் 2024

சமையலறை வாஸ்து அளவுகள் – Kitchen Size as per Vastu in Tamil:சமையலறை

வாஸ்து சாஸ்திரம் படி சமையல் அறை அமைப்பதற்கான சிறந்த திசை தென்கிழக்கு அல்லது வடகிழக்கு திசையாகும். ஜன்னல்கள், நிச்சயமாக, கிழக்கு எதிர்கொள்ள வேண்டும். சுற்றிச் செல்ல சமையலறை இடம் பறந்து விரிந்து காணப்பட வேண்டும்.

சமையலறை தென்கிழக்கு திசையில் அடுப்பு மற்றும் சமையல் கிழக்கு நோக்கி இருந்தால் அது அக்னி ஆகும். இந்த அமைப்பு உங்கள் குடும்பம் ஆரோக்கியமாக இருப்பதற்கு வழிவகுக்கும். இது தவிர வடமேற்கு திசை சமையலறைக்கு மற்றொரு சிறந்த இடம் ஆகும். வாஸ்து சாஸ்திரம் படி குறைந்தபட்ச சமையலறை அறை அளவு 85 சதுர அடி அல்லது 8 சதுர மீட்டர் இருக்க வேண்டும்.

ஹால் எவ்வளவு அளவில் இருக்க வேண்டும்? – Hall Size as per Vastu in Tamil

ஹால்

பொதுவாக அனைவரது வீட்டிலும் ஹாலில் தான் அனைவருமே ஒன்றுகூடி மகிழ்ச்சியாக பேசி மகிழ்வோம். வீட்டில் நடைபெறும் அனைத்து சுப காரியங்களையும் செய்வோம். அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ஹால் வாஸ்து சாஸ்திரம் படி வடக்கு மற்றும் கிழக்கு நோக்கி இருப்பது மிகவும் சிறந்தது. மேலும் இந்த ஹால் எவ்வளவு அளவில் இருக்க வேண்டும் என்றால் 170 சதுர அடி அல்லது 16 சதுர மீட்டர் இருப்பது மிகவும் சிறப்பு. மேலும் ஹாலினை அமைப்பதற்கு வடகிழக்கு மூலை (ஈஷான்ய மூலை) வாழ்க்கை அறைக்கு சிறந்த இடம் என்று வாஸ்து கூறுகிறது. இது சக்தி, ஆரோக்கியம் மற்றும் செழிப்பைக் கொண்டுவருகிறது.

இதையும் கிளிக் செய்து பாருங்கள் 👇
வடக்கு பார்த்த வீடு வாஸ்து சாஸ்திரம்

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement