ஸ்ரீ நரசிம்ஹர் ருண விமோசன ஸ்தோத்திரம்
பொதுவாக நமது மனது கஷ்டம் படும்போதெல்லாம் நமக்கு பிடித்த கடவுளிடம் சென்று கஸ்டங்களை சொல்லி புலம்புவோம். அப்படி புலம்பி அழுத பிறகு நமது கஷ்டங்கள் எல்லாம் சரியாகிவிட்டால் கடவுளுக்கு நன்றி சொல்வோம். அப்படி நன்றி சொல்லும் போது கடவுளுக்கு பிடித்த பலகாரங்கள் அல்லது மாலை போன்றவற்றை அணிவித்து வழிபடுவோம். அதோடு மட்டுமில்லாமல் கடவுளுக்கு உரிய ஸ்லோகம், மந்திரம் போன்றவற்றை கூறுவதாலும் நமக்கு நன்மைகள் கிடைக்கும். அந்த வகையில் இன்றைய பதிவில் ஸ்ரீ நரசிம்ஹர் ருண விமோசன ஸ்தோத்திரம் பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..
ஸ்ரீ நரசிம்ஹர் ருண விமோசன ஸ்தோத்திரம்:
தேவதாகார்ய ஸத்யர்த்தம் ஸபாஸ்தம்பம் ஸமுத்பம்
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மாஹாவீரம் நமாமி ருணமுக்தயே.
லக்ஷ்ம்யாலிங்கித வாமாங்கம் பக்தாநாம் வரதாயகம்
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மாஹாவீரம் நமாமி ருணமுக்தயே
ஆந்த்ரமாலாதரம் சங்க சக்ராப்ஜாயுத தாரிணம்
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மாஹாவீரம் நமாமி ருணமுக்தயே.
லீமரணாத் ஸர்வ பாபக்நம் கத்ருஜ விஷநாசநம்
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மாஹாவீரம் நமாமி ருணமுக்தயே.
ஸிம்ஹநாதேந மஹதா திகதந்தி பயநாசநம்
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மாஹாவீரம் நமாமி ருணமுக்தயே
ப்ரஹலாத வரதம் ஸ்ரீசம் தைத்யேச்வர விதாரிணம்
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மாஹாவீரம் நமாமி ருணமுக்தயே
க்ருரக்ரஹை பீடிதாநாம் பக்தாநாம் மபயப்ரதம்
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மாஹாவீரம் நமாமி ருணமுக்தயே
வேதவேதாந்த யஜ்ஞேசம் ப்ரஹ்மருத்ராதிவந்திதம்
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மாஹாவீரம் நமாமி ருணமுக்தயே.
யஇதம் படே நித்யம் ருணமோசந ஸம்ஜ்ஞ்தம்
அந்ருணீ ஜாயதே ஸத்யோ தநம் சீக்ரமவாப்நுயாத்
ருண விமோசன ஸ்தோத்திரம் சொல்வதால் கிடைக்கும் நன்மைகள்:
ஸ்ரீ நரசிம்ஹர் ருண விமோசன ஸ்தோத்திரம் சொல்வதால் நீங்கள் கடன் தொல்லையில் இருந்து விடுபடமுடியவில்லை என்று நினைத்தால் இந்த ஸ்தோத்திரத்தை சொல்வதால் கடன் பிரச்சனை தீரும்.
இந்த ஸ்தோத்திரத்தை நம்பிக்கையுடன் நரசிம்ம கடவுளுக்கு காலை மற்றும் மாலை ஏன் இரண்டு வேலையும் உச்சரித்து நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.
வாழ்க்கையில் நிம்மதியே இல்லை, மகிழ்ச்சியே இல்லை என்று கவலைப்படுபவர்கள் இந்த ஸ்தோத்திரத்தை சொல்வதன் மூலம் வாழ்க்கையில் நிம்மதியாக இருக்கலாம்.
சீரடி சாய்பாபாவின் அஷ்டோத்திரம்
சிவபெருமானின் பிரம்ம முராரி பாடல் வரிகள்
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal |