வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

ருத்ராட்சம் அணிபவர்கள் இப்படி செய்தால் பாவமா..?

Updated On: April 10, 2024 3:43 PM
Follow Us:
Ruthratcham Aninthu Seiya Kudathavai
---Advertisement---
Advertisement

Ruthratcham Aninthu Seiya Kudathavai

பொதுநலம் பதிவின் ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்..! இன்று நம் ஆன்மீகம் பதிவின் வாயிலாக அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவலை பற்றி தான் பார்க்கப்போகின்றோம். அதாவது ருத்ராட்சம் அணிந்திருப்பவர்கள் என்னவெல்லாம் செய்ய கூடாது என்பதை பற்றி தான் பார்க்கப்போகின்றோம். பொதுவாக நம்மில் பலரும் ருத்ராட்சம் அணிந்து இருப்பார்கள்.

சரி பொதுவாக நம் அனைவருக்குமே ஒரு கேள்வி இருக்கும். அதாவது பெண்கள் ருத்ராட்சம் அணியலாமா..? என்ற கேள்வி நம்மில் பலருக்கும் இருக்கும். எனவே பெண்கள் ருத்ராட்சம் அணியலாமா..? அணிய கூடாதா என்பதை பற்றி தெரிந்து கொள்ள நினைத்தால் கீழ் இருக்கும் லிங்கை கிளிக் செய்து பார்க்கவும். ஓகே வாங்க பிரண்ட்ஸ்..! ருத்ராட்சம் அணிபவர்கள் செய்ய கூடாத செயல்கள் என்னவென்று இப்பதிவின் வாயிலாக அறிந்து கொள்ளலாம் வாங்க..!

பெண்கள் ருத்ராட்சம் அணியலாமா.. அப்படி அணிவதால் என்ன பலன் என்பதை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்

ருத்ராட்சம் அணிந்து செய்ய கூடாதவை:

ருத்ராட்சம் அணிந்து செய்ய கூடாதவை

பொதுவாக ருத்ராட்சமானது சிவபெருமானின் அம்சமாக இருக்கிறது. அதுபோல சிவபெருமானின் கண்ணில் இருந்து தான் ருத்ராட்சம் வந்ததாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. மேலும் நாம் ருத்ராட்சம் அணிவதால் அனைத்து விதமான நோய்களில் இருந்தும் விடுபடலாம் என்றும், இதனால் அனைத்து விதமான நன்மைகள் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல், ருத்ராட்சத்தில் இயற்கையாகவே நேர்மறையான எண்ணங்களை ஈர்க்கும் சக்தி அதிகமாக இருக்கிறது. அதனால் நாம் ருத்ராட்சம் அணியும் போது அது நம் மனதையும் உடலையும் தெளிவுபெற செய்கிறது. மேலும் அது மனதிற்கு நிம்மதியை தருகிறது.

சரி நம்மில் பலரும் எப்பொழுதும் ருத்ராட்சத்தை எல்லா நேரங்களிலும், எல்லா இடத்திற்கும் அணிந்து கொண்டு செல்கிறார்கள். ஆனால் இபப்டி செய்வது மிகவும் தவறான ஒரு விஷயமாகும். அதனால் ருத்ராட்சம் அணிந்திருக்கும் போது நாம் என்னவெல்லாம் செய்ய கூடாது என்று இப்போது காணலாம்.

ருத்ராட்சத்தின் மகிமைகள்

  • ருத்ராட்சம் சிவப்பு, மஞ்சள் மற்றும் வெள்ளை போன்ற நிறத்தில் உள்ள நூல்களில் மட்டுமே அணிய வேண்டும். கருப்பு நிற நூலில் ருத்ராட்சம் இருந்தால் அதை அணிய கூடாது.
  • படுக்கை அறையில் ருத்ராட்சம் அணிய கூடாது. அதாவது நீங்கள் தூங்கும் போது ருத்ராட்சம் அணிந்து தூங்கக்கூடாது. காரணம், தூங்கும் போது நம் உடலானது தூய்மையற்றதாகவும், செயலற்றதாகவும் இருக்கும். அதனால் தூங்கும் போது ருத்ராட்சம் அணியக்கூடாது.
  • ஒருவரின் இறுதி சடங்கிற்கு செல்லும் போது ருத்ராட்சம் அணிந்து செல்ல கூடாது. அதுபோல இறந்தவர்களை வைத்திருக்கும் இடத்திற்கும் ருத்ராட்சம் அணிந்து செல்வதை தவிர்க்க வேண்டும்.
  • அதுபோல ருத்ராட்சம் அணிந்தவர்கள் மது அருந்துவது, புகை பிடிப்பது போன்ற செயல்களை செய்ய கூடாது.
  • மேலும் ருத்ராட்சம் அணிந்து கொண்டு இறைச்சி சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அதுபோல இறைச்சி வெட்டும் அல்லது இறைச்சி விற்கும் இடத்திற்கும் செல்ல கூடாது.
  • அதுபோல ஒருவருக்கு குழந்தை பிறந்திருக்கிறது என்றால் அந்த வீட்டிற்கு ருத்ராட்சம் அணிந்து செல்ல கூடாது. காரணம், குழந்தை பிறந்த வீடு அசுத்தமாக கருதப்படுகிறது. அதனால் இதுபோன்ற இடங்களுக்கு ருத்ராட்சம் அணிந்து செல்ல கூடாது.

மேலும் ஒருவர் மேல்கூறிய விஷயங்களை ருத்ராட்சம் அணிந்து செய்தால், ருத்ராட்சத்தில் எந்த பயனும் இல்லாமல் இது சாதாரண மாலை போல ஆகிவிடும். மேலும் இது நாம் செய்யும் பாவமாகவும் பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்⇒ ஒரிஜினல் ருத்ராட்சம் கிடைக்கும் இடம்

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now