Koviluku Sendral Ukkarndhuvitu Vara Karanam
மக்கள் ஆன்மீகத்தில் நிறைய முறைகளை பின் பற்றி வருவார்கள். அதில் சிலவற்றிற்கு ஏன் இதனை பின்பற்றுகிறோம் என தெரியாமல் நம் முன்னோர்கள் செய்தவை வைத்து அப்படியே பின்பற்றுவார்கள். நம் முன்னோர்கள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காரணம் வைத்து தான் செய்து இருப்பார்கள். அதே போல தான் கோவிலுக்கு சென்று விட்டு உடனே கிளம்பாமல் கொஞ்ச நேரம் அங்கே உக்கார்ந்துவிட்டு வர சொல்லுவார்கள் அது ஏன் ? என்ன காரணம் என்று இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம் வாங்க.
கோவிலில் சிறிது நேரம் அமர்ந்துவிட்டு வருவது ஏன் ?
உலகம் முழுவதும் நிறைய கோவில்கள் உள்ளன. தெய்வத்தின் தரிசனத்தை பெறுவதற்காக கோடிக்கணக்கானோர் கோவிலுக்கு சென்று கும்பிடுவது வழக்கம். அந்த வழக்கத்தோடு சாமி கும்பிட்ட பின் உடனே கிளம்பாமல் கொஞ்ச நேரம் கோவிலிலே அமர்ந்து அதன் பிறகு தான் செல்லவேண்டும்.
கோவிலுக்கு ஏன் செல்கிறோம் ? மக்கள் சந்தோசத்திற்கு கோவிலுக்கு செல்வதை விட தனது கஸ்டங்களும் பிரச்சனைகளும் சரியாக தான் கோவிலுக்கு செல்வார்கள். கோவிலில் சாமியை தரிசனம் செய்து விட்டு உங்கள் பிரச்சனைகளையும் சொல்லிவிட்டு உடனே கிளம்பினால் உங்களின் பிரச்சனை பற்றிய குழப்பம் உங்கள் மனதில் இருக்கும்.
வேண்டுதல் செய்து கொஞ்ச நேரம் உக்கார்ந்து தெய்வத்தை நினைத்தால் உங்கள் மனதில் குழப்பங்கள் விலகி மனம் தெளிவு பெரும். அங்கு ஒலிக்கும் கோவில் மணிகளின் ஒலி உங்கள் மனதில் நேர்மறை எண்ணங்களை கொடுக்கும்.
சிலர் பெருமாள் கோவிலுக்கு சென்று விட்டு உக்கார்ந்துவிட்டு வராமல் உடனே கிளம்பிவிடுவார்கள். காரணம் லக்ஷ்மி அங்கே தங்கிவிடும் என்று நினைத்து அமராமல் வீட்டுக்கு வந்துவிடுவார்கள். இது தவறான நம்பிக்கை. எந்த கோவிலுக்கு சென்று விட்டு வந்தாலும் சிறிது நேரம் அமர்ந்து விட்டு வருவது தான் சரி.
உங்கள் மன அமைதிக்குத் தான் கோவிலுக்கு செல்வீர்கள். அதனால் மனதில் இனி கோவிலுக்கு சென்று விட்டு எவ்வளவு வேலை இருந்தாலும் கொஞ்ச நேரம் அமர்ந்து மனதை அமைதி படித்தியபின் வீட்டுக்கு செல்லுங்கள்.
நோய் தீர்க்கும் தன்வந்திரி மந்திரம்
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |