Sabarimalai Ayyapan Kovil
இன்றைய பதிவில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்பவர்கள் செய்ய வேண்டியவை என்பதை பற்றி பார்க்க போகிறோம்.ஐயப்பன் பக்தர்கள் கார்த்திகை மாதம் மாலை அணிந்து விரதம் இருந்து ஐயப்பனை வழிபடுவார்கள்.ஐயப்பன் வரலாறு என்ன என்பதை பற்றி இந்த பதிவில்பார்க்கலாம்.ஐயப்பன் பக்தர்கள் கடும் விரதம் இருந்து மாலை அணிந்து சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்வார்கள்.ஐயப்பன் சாமிக்கு முதல் தடவை மாலை அணிபவர்களை கன்னிசாமி என்று கூறுவார்கள்.
மேலும், மகிஷாசுரன் என்ற அரக்கன் கடும் தவம் இருந்து தன்னை யாரும் அழிக்க கூடாது என்ற வரம் பெற்றான்.முப்பெரும் தேவியர் சண்டிகாதேவி என்னும் அவதாரம் எடுத்து மகிஷாசுரனை வதம் செய்தனர். அந்த வகையில் மகிஷி என்ற அரக்கியின் கொடுமைகளில் ரிஷிகளை காப்பாற்ற சிவபெருமானும் விஷ்ணுவும் மோகினி அவதாரம் இணைத்து ஐயப்பனை படைத்தார். அந்த வகையில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்பவர்கள் செய்ய வேண்டியவை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க…..
ஐயப்பன் கோவில்:
மற்ற கோவில்கள் போல் இல்லாமல் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு என தனி கட்டுப்பாடு உள்ளது. வருடத்திற்கு சில நாட்கள் மட்டுமே தனி கட்டுப்பாடு உள்ளது. வருடத்தில் சில நாட்கள் மட்டுமே நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். ஆண்கள் யார் வேணாலும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்ல முடியும் என்றாலும் மாலை அணிந்து இடிமுடி கட்டி வரும் பக்தர்கள் மட்டுமே புனிதமான பதினெட்டாம் படி ஏறுவதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.எவ்வளவு எளிமையாக சபரிமலைக்கு சென்றாலும் பம்பை வரை மட்டுமே சபரிமலைக்கு செல்ல முடியும். பம்பையில் இருந்து சன்னிதானம் வரை 7 கீ.மீ பாதையாத்திரையாக மட்டுமே செல்ல முடியும். இப்படி கடுமையான விரதம், பல கட்டுப்பாடுகளை கடைபிடித்து சபரிமலை ஐயப்பா பக்தர்கள் யாத்திரை சென்றதற்கான முழு பலனை அடைவதற்கும் சில விதி முறைகள் உள்ளன.
ஐயப்ப விரதம் :
ஆண்டுதோறும் கார்த்திகை முதல் நாள் மாலை அணிந்து, 48 நாட்கள் விரதம் இருந்து சபரிமலை யாத்திரை சென்று, சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்வது வழக்கமாக உள்ளது. சுவாமி ஐயப்பனுக்கு மட்டுமே ஒரு மண்டலம் விரதம் இருந்து 41 நாட்கள் மற்றும் 48 நாட்கள் விரதம் இருக்கும் வழக்கம் உள்ளது.
சபரிமலை விரத காரணம்:
சபரிமலை செல்ல கடுமையான விரத விதிகளை கடைபிடிக்க வேண்டும். என்பதற்கு மற்றொரு காரணம் உண்டு. சபரிமலைக்கு மாலை அணியும் போது ஒரு குருசாமியின் கைகளால் மட்டுமே அணிய வேண்டும். அந்த குருசாமி அந்த துளசி மணி மாலையை கையில் வைத்து, அதற்குரிய மந்திரங்களை கூறி அதற்கு தெய்வ சக்தியை உண்டாக்கி அந்த மாலையை பக்தரின் கழுத்தில் அணிவிப்பார். அதனால் தான் மாலை அணிந்தவர்களை சுவாமி, ஐயப்பா பக்தர்கள் என்று மரியாதையாக அழைப்பார்.
சபரிமலை ஐயப்பன் பற்றிய வற்றலாற்று கதைகள்
சபரிமலை சென்றால் என்ன பலன் :
சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் மலைக்கு சென்று வந்த பலனையும் அடைவதற்கு ஒரு குறிப்பிட்ட விதிகளை கடைபிடிக்க வேண்டும். அதாவது சபரிமலைக்கு யாத்திரை செல்லும் பக்தர்கள் பல கோவில்களுக்கு சென்று விட்டு , பிறகு தான் சபரிமலைக்கு செல்கிறார்கள். அப்படி மற்ற கோவில்களுக்கு செல்லும்போது அமைதி, பொறுமை மற்றும் ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும். இறை சக்தியை அடைய வேண்டும். இறைவனின் அருளை பெற வேண்டும் என மாலை அணிந்து. விரதம் இருந்து மலைக்கு செல்பவர்கள் சபரிமலை மட்டுமின்றி அனைத்து கோவில்களிலும் அந்த பழக்கங்களை கடைபிடிக்க வேண்டும்.
| இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today useful information in tamil |











