Sai Baba Gayatri Mantra in Tamil
பெரும்பாலான வீடுகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் விளக்கேற்றி வழிபடுவார்கள். இதில் விளக்கேற்றி பூஜை செய்யும் போது அந்தந்த கடவுளுக்கு உரிய பாடல்களை பாடுவார்கள். இதன் மூலமா அவர்களின் அருள் கிடைப்பதாக நம்பப்படுகிறது. அது போல் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கடவுளை பிடிக்கும். சாய் பாபாவை பலருக்கும் பிடித்தமான கடவுளாக இருக்கிறார். இவரை வணங்கினால் நினைத்த காரியம் நடக்கும் என்று ஆன்மிகத்தில் கூறப்படுகிறது. வியாழன் கிழமையில் சாய் பாபாவிற்கு விரதம் இருந்து வழிபடுவார்கள். இன்றைய பதிவில் சாய் பாபா காயத்ரி மந்திரம் பற்றி காண்போம்.
சாய் பாபா காயத்ரி மந்திரம்:
ஓம் ஷிர்டி வாசாய வித்மஹே
சச்சிதானந்தாய தீமஹி
தன்னோ சாய் ப்ரசோதயாத்
எப்படி சொல்ல வேண்டும்:
தினமும் இந்த மந்திரத்தை 11 முறை அல்லது 33 அல்லது 108 முறை முறை உச்சரிக்க வேண்டும். இதனை தினமும் சொல்ல முடியாதவர்கள் சாய் பாபாவிற்கு உகந்த நாளான வியாழ கிழமையில் இந்த மந்திரத்தை உச்சரிக்கலாம். இந்த மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம் நீங்கள் நினைத்த காரியம் அனைத்தும் நடைபெறும். மேலும் சாய் பாபாவின் முழு அருள் கிடைக்கும்.
ஷீரடி சாயி பாபாவின் த்யான ஸ்லோகம்:
பத்ரி க்ராம ஸமத் புதம்
த்வாரகா மாயீ வாசினம்
பக்தா பீஷ்டம் இதம் தேவம்
ஸாயி நாதம் நமாமி.
ஷீரடி சாயி பாபாவின் மூல மந்திரம்:
“ஓம் ஸாயி ஸ்ரீ ஸாயி ஜெய ஜெய ஸாயி”.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal |