சாமி ஆடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்

Advertisement

சாமி ஆடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் சாமி ஆடுவது போல் கனவு கண்டால் என்ன பலன் ( sami aaduvathu pol kanavu kandal) என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம். பொதுவாக ஆழ்ந்த உறக்கத்திற்கு செல்லும் போது ஏற்படுவது தான் கனவு. இந்த கனவானது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியாக வரும். இதில் அதிகாலையில் காண கூடிய கனவு பலிக்கும் என்று கூறுவார்கள். அதனால் அதிகாலையில் கனவு ஏதும் காணுதல் அதற்கான பலனை காலையில் எழுந்ததும் கேட்டு தெரிந்து கொள்வோம்.

இந்த கனவு வருவதே நமக்கு ஏற்படும் நன்மை பற்றும் தீமைகளை முன்கூட்டியே தெரிவிப்பதற்கு வருகிறது என்று நம் முன்னோர்கள் கூறுகிறார்கள். நம் பதிவில் பல்வேறு வகையான கனவுகளுக்கு என்னென்ன பலன்கள் என்று பதிவிட்டுள்ளோம். அந்த வகையில் இன்றைய பதிவில் சாமி ஆடுவது போல கனவு கண்டால் என்ன பலன் என்று தெரிந்து கொள்வோம்.

சாமி ஆடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்:

sami aaduvathu pol kanavu kandal

நீங்கள் சாமி ஆடுவது போல் கனவு கண்டால் எதிர்காலத்தில் இந்த பணிகள் எல்லாம் செய்ய வேண்டும் என்று நினைப்பீர்கள் அல்லவா.@ அவற்றை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளை எடுப்பீர்கள் என்பதை உணர்த்துகிறது.

நீங்கள் எதாவது ஓரி செயல் செய்ய வேண்டும் என்று திட்டம் ஏதும் போட்டு வைத்திருந்தால் அவை நிறைவேற்றுவதற்கு அதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும் என்பதை உணர்த்துவதற்கு இந்த கனவு வருகிறது.

இந்த கனவு நல்ல கனவாக தான் இருக்கிறது, தொழில் சம்மந்தப்பட்ட விஷயங்களுக்காக வருகிறது.

பாம்பு கனவில் வந்தால் என்ன பலன் 

கோவிலுக்கு பால் குடம் எடுப்பது போலவும், அதனை பாதியிலே நிறுத்துவது போல கனவு கண்டால்:

நீங்கள் கோவிலுக்கு பால் குடம் எடுத்து அதனை பாதியிலே நிறுத்துவது போல கனவு கண்டால் நீங்கள் செய்கின்ற தொழில் அல்லது வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதற்கு சில காலங்கள் ஆகும்.

கருப்புசாமி கனவில் வந்தால்:

கருப்புசாமி கடவுள் காவல் தெய்வமாக இருக்கிறார். இவரை நீங்கள் கனவில் கண்டால் உங்களை எச்சரிக்கை செய்வதற்கு வருகிறார்.

சொத்து மற்றும் தொழில் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்பதற்காக உங்கள் கனவில் வருகிறார். மேலும் நீங்கள் நம்பிக்கையாக இருந்தவர் உங்களின் முதுகில் குத்த போகிறார் அதனால் நீங்கள் எந்த விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டும் என்பதை குறிக்கிறார்.

 

கனவில் கடவுள் வந்தால் என்ன பலன் 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement