Sami Kumbidum Pothu Kanneer Vanthal Enna Palan
நாம் கடவுளை வணங்கும் போது அழுகின்ற பல நபர்களை பார்த்து இருப்போம். இன்னும் சிலருக்கு கோவிலுக்குள் சென்றவுடனே கண்ணீர் வந்து விடும். ஏன் கடவுளை வணக்கும் போதும் கோவிலுக்குள் செல்லும்போதும் அழுகை வருகிறது என்று என்றாவது நீங்கள் நினைத்து இருக்கிறீர்களா.? அப்படி யோசித்து இருந்தால் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். நமக்கு ஏதாவது ஒரு கஷ்டம் வந்தாலோ அல்லது மனதில் நிம்மதி இல்லையென்றாலும் நாம் கடவுளை நாடி தான் செல்வோம்.
அப்படி சில பேர் கோவிலுக்கு போகும்போது கடவுளை பார்த்தவுடன் கண்களில் கண்ணீர் வரும். அதுமட்டுமில்லாமல் ஒரு சிலர் நபர்கள் கதறி அதிக சத்தத்துடன் அழுவார்கள். ஏன் அப்படி செய்கிறார்கள் என்பதை பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
வீட்டில் நீல நிற சங்கு பூ அல்லது வெள்ளை நிற சங்கு பூ இருந்தால் என்ன பலன்?
சாமி கும்பிடும் போது கண்ணீர் வருவது ஏன்.? | Sami Kumbidum Pothu Kanneer Vanthal:
நம்மில் பலருக்கும் சாமி கும்பிடும்போது கண்ணீர் வரும். சிலருக்கு தாங்க முடியாத அளவிற்கு சாமியை பார்த்ததும் கண்களில் இருந்து தண்ணீர் வரும். ஒரு சிலருக்கு கோவிலுக்குள் அடி எடுத்த வைத்தவுடன் கண்ணீர் வரும்.
நீங்கள் கடவுளை பார்த்தவுடன் அல்லது கடவுளை வணங்கும்போது கண்களில் கண்ணீர் வருவதற்கு என்ன அர்த்தம் என்றால் கடவுள் உங்களிடம் ஏதோவொன்றை சொல்கிறார் என்று அர்த்தம். அதாவது, கடவுள் உங்களிடம் ஒரு குறிப்பை கொடுக்கிறார் என்று பொருள். நீங்கள் அதனை புரிந்துகொண்டால் அப்பிரச்சனை நீங்கி விடும்.
உங்கள் வேண்டுகோளை கடவுள் ஏற்றுக் கொண்டார் என்று பொருள், கண்களில் இருந்து கண்ணீர் வந்தால் உங்களது பிரார்த்தனை வெற்றிகரமாக முடிந்துவிட்டது. உங்களது கோரிக்கையை கடவுள் ஏற்றுக்கொண்டார். இனி எல்லா பிரச்சனையும் நீங்கி, உங்கள் ஆசைகள் நிறைவேறும் என்று நம்பப்படுகிறது.
நந்தி கனவில் வந்தால் என்ன பலன்
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |