Sami Kumbidum Pothu Thummal Vanthal
ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் சாமி கும்பிடும்போது தும்மல் வந்தால் என்ன பலன் என்பதை பின்வருமாறு விவரித்துளோம். பொதுவாக தும்மல் தும்மினாலே அபசசகுனம் என்று கூறப்படுகிறது. ஆனால், ஒரு ஒவ்வொரு சூழ்நிலைக்கு ஒரு அர்த்தம் கூறப்படுகிறது. நம் முன்னோர்கள் தும்மல் வந்தாலே அது கெட்ட சகுனம் என்று கூறவில்லை. ஒவ்வொரு இடத்திற்கும் ஒவ்வொரு சூழ்நிலையிலும் நாம் தும்மும் முறையை பொறுத்து பலன்கள் காணப்படும். அந்த வகையில் சாமி கும்பிடும்போது தும்மல் வந்தால் என்ன பலன் என்பதை இப்பதிவின் வாயிலாக படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
பெரும்பாலானவர்களுக்கு சாமி கும்பிடும்போதோ அல்லது சுப காரியங்கள் நடக்கும்போதோ அல்லது நல்ல விஷயங்கள் பற்றி பேசிக்கொண்டிருக்கும்போதோ தும்மல் வரும். அப்படி தும்மமினால் அது என்ன மாதிரியான பலன்களை நமக்கு அளிக்கும் என்பதை நாம் அனைவருக்குமே அறிந்து கொள்ள வேடனும்.
தும்மல் சகுனம் ஆண் மற்றும் பெண் தும்மினால் என்ன பலன்?
சாமி கும்பிடும்போது தும்மல் வந்தால் என்ன பலன்:
சாமி கும்பிடும்போது ஒரு முறை தும்மல் வந்தால் வாய் கொப்பளித்து தண்ணீர் குடித்து சிறிது நேரம் கழித்து தான் சாமி கும்பிட வேண்டும். ஒரு முறை தும்மல் வந்தால் மட்டுமே அசுபசகுனம் என்று கருத்தில் கொள்ள வேண்டும். ஒன்றிற்கு மேற்பட்ட முறை தும்மல் வந்தால் மங்களகரமானதாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
சிலர் இதை, கடவுள் உங்கள் வேண்டுதலை ஏற்றுக்கொண்டார் எனவும் கூறுகிறார்கள். அதாவது, உங்கள் மனதில் வேண்டிக்கொள்வது நிச்சயமாக நன்மை பயக்கும் என்பதை உணர்த்துகிறது என்று கூறுகிறார்கள்.
அதுமட்டுமில்லாமல் சாமி கும்பிடும் முன்போ அல்லது சாமி கும்பிடும் நேரத்தில் தும்மல் வந்தால் சிறிது நேரம் காத்திருந்து அதன் பிறகு தான் சாமி கும்பிட வேண்டும். மேலும், சாமி கும்பிடும்போது தும்மல் வர இருப்பின் அந்த இடத்தை விட்டு வெளியே வந்து தும்ம வேண்டும்.
சாமி கும்பிடும் போது கொட்டாவி வந்தால் என்ன பலன்..!
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |