வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

சண்டிகேஸ்வரரை எப்படி வணங்க வேண்டும் என்று தெரியுமா?

Updated On: February 6, 2025 10:18 AM
Follow Us:
---Advertisement---
Advertisement

Sandikeswarar Valipadum Murai In Tamil

சிவன் கோவிலில் உள்ள சண்டிகேஸ்வரர் யார் அவரை எப்படி வணங்க வேண்டும் என்பதை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். அனைத்து சிவன் கோவில்களிலும் சண்டிகேஸ்வரர் சன்னதி இருக்கும். ஏன் சிவன் கோவில்களில் சண்டிகேஸ்வரர் சன்னதி இருக்கிறது, சிவன் சண்டிகேஸ்வரருக்கு அளித்த பதவியை பற்றி இந்த பதிவில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

சண்டிகேஸ்வரர் சன்னதியில் அனைவரும் கை தட்டி வணங்குவர். ஏன் அவர் முன் கை தட்டி வணங்குகிறார்கள், சிலர் அவர் முன் கை தட்டினால் பாவம் என்றும் கூறுகிறார்கள். இதற்கான விளக்கத்தையும் இந்த பதிவில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

சிவன் கோவிலை எத்தனை முறை சுற்ற வேண்டும் தெரியுமா..?

சண்டிகேஸ்வரர் யார்?

சோழ நாட்டில் சேய்ஞ்ஞலூர் என்ற ஊரில் எச்சதத்தன் பவித்திரை ஆகிய தம்பதிகளுக்கு விசாரசருமன் என்ற மகன் பிறந்தார். விசராசருமனுக்கு பசுக்களை மேய்ப்பதே அவனுடைய வேலையாகும். பசுக்கள் மீது அவன் அளவு கடந்த பாசம் வைத்திருந்தார். விசாரசருமன் தினமும் பசுக்களை மேய்க்க செல்லும் போது, மண்ணால் ஒரு சிவலிங்கம் வடித்து தியானம் சித்து வழிபடுவது அவனுடைய வழக்கமாகும்.

இந்த மணல் சிவலிங்கத்தின் மீது மேய சென்ற பசுக்கள் தானாக பாலை சுரந்து அபிஷேகம் செய்யும். அதோடு வீடு திரும்பிய பிறகு எச்சதத்தன் பசுக்களிடம் இருந்து பாலை கறந்து வியாபாரம் செய்வார். மாலை நேரத்தில் பால் கறக்கும் எச்சதத்தன் பால் தினம் தினம் குறைந்து வருவதை அறிந்த அவர். பால் குறைவதை கண்டுபுடிக்க முயற்சி செய்தார்.

மறுநாள் விசாரசருமன் பசுக்களை மேய்க்க சென்ற போது எச்சதத்தன் மறைந்திருந்து அங்கு நடப்பதை கவனித்தார். பசுக்கள் தானாக பால் சுரந்து மணல் லிங்கம் மீது அபிஷேகம் செய்வதைப் பார்த்து கோபம் கொண்டு சிவலிங்கத்தை காலால் எட்டி உதைத்தார். இதனால் கோபமடைந்த விசாரசருமன் தான் கையிலிருந்த குச்சியை எச்சதத்தன் மீது எரிந்தான். அது கோடாரியாக மாறி அவரின் காலை காயப்படுத்தியது.

சிவன் சண்டிகேஸ்வரருக்கு அளித்த பதவி:

விசாரசருமன் சிவனின் மீது அளவு கடந்த பக்தியை வைத்திருந்ததனால், சிவன் மற்றும் பார்வதி விசாரசருமன் முன் தோன்றி எச்சதத்தன் காயத்தை மறையும்படி அருளினார். பின்னர் விசாரசருமனுக்கு சண்டிகேஸ்வரர் என்ற பெயரையும் சூட்டினார். மேலும் விசாரசருமன் சிவனுடைய சொத்துக்களை பாதுகாக்கும் பதவியையும் வழங்கினார்.

தனக்கு சூட்டப்படும் அனைத்து மாலை மற்றும் நைவேத்தியங்கள் சண்டிகேஸ்வரருக்கு சேரும் என அருளினார். அன்று முதல் சிவ பெருமானுக்கு செய்யும் நைவேத்தியம், சூட்டும் மாலைகள் சண்டிகேச பதவி செய்யும் விசாரசருமனனுக்கும் வழங்கப்படுகிறது. சிவபெருமானின் 63 நாயன்மார்களில் சண்டிகேஸ்வரரும் நாயனாராக இணைந்தார்.

சண்டிகேஸ்வரர் முன் கை தட்டலாமா?

ஒரு சிலர் சண்டிகேஸ்வரருக்கு காது கேட்காது என்று கூறி வருகிறாரகள் அது முற்றிலும் தவறு. சண்டிகேஸ்வரர் எப்பொழுதும் சிவ தியானத்தில் ஆழ்ந்திருப்பார். அவர் முன் கை தட்டி அவருடைய தியானத்தை கலைப்பது மாபெரும் பாவம்.

சண்டிகேஸ்வரர் சிவன் சொத்துக்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருப்பதால், நாம் சிவ தரிசனம் செய்த பிறகு சண்டிகேஸ்வரரை வணங்கும் பொழுது, மெதுவாக சத்தம் வராமல் கைகளை துடைத்து காண்பித்து, கோயில் சொத்து எதையும் நாம் எடுத்துச் செல்லவில்லை, எனக்கு சிவனின் அருள் மட்டும் வேண்டும் என சண்டிகேஸ்வரர் தியானம் கலையாமல் சொல்ல வேண்டும். சண்டிகேஸ்வரரை இப்படி வழிபடுவது தான் சரியான முறை ஆகும்.

சிவன் கோவிலுக்கு தானமாக கொடுக்க வேண்டிய பொருட்கள்

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement

Prabha R

நான் உங்கள் பிரபா. நான் Business, Banking, News, Schemes, தொழிநுட்பம் என இத்தகைய பிரிவில் அன்றாடம் நடக்கும் பதிவுகளையும், நமக்கு தெரியாத பல பயனுள்ள தகவலையும் தமிழில் Pothunalam.com இணையத்தளத்தின் வாயிலாக பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now