மஹா சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகரை வணங்கும்போது சொல்லவேண்டிய மந்திரம்.!

Advertisement

சங்கடஹர சதுர்த்தி மந்திரம் | Maha Sankatahara Chaturthi Mantra in Tamil

முழு முதல் கடவுள் விநாயகரை வழிபாடும் போது நமக்கு அனைத்து கஷ்டங்களும் தீர்ந்து வாழ்வில் வெற்றிப்பெறுவோம் என்பது நம்பிக்கை. நமக்கு அருள் வழங்கும் கடவுளை வணங்கும் போது முறைப்படி வணங்கினால் கோடி நன்மைகள் கிடைக்கும். நமது இஷ்ட தெய்வங்களை வணங்கும் போது மனதில் நிம்மதி பிறக்கும், அதுவும் மந்திரங்கள் கூறி வணங்கினால், தியானம் செய்தது போன்ற அமைதி உண்டாகும். தெய்வங்களுக்கே முதன்மை தெய்வமான விநாயகரை சங்கடஹர சதுர்த்தி அன்று வழிபாட பயன்படும் மந்திரங்கள் உங்களுக்காக..

சங்கடஹர சதுர்த்தி தின ஸ்லோகம் | Sankatahara cChaturthi Mantra in Tamil:

விநாயக பெருமானுக்கு உகந்த சங்கடஹர சதுர்த்தி தினம் அன்று விநாயகரை நினைத்து வழிபாடு செய்வது பல நன்மைகளை தரும். விநாயகருக்கு உகந்த இந்த மந்திரத்தை சொல்லி வந்தால் பல்வேறு நன்மைகளை பெறலாம்.

விநாயகர் ஸ்லோகம்:

“ஓம் தத் புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தன்னோ தந்தி : ப்ரசோதயாத்’

எனும் கணேச காயத்ரீ மந்திரத்தை பாடி கணபதியை வணங்கினால் கூடுதல் பலன் உண்டு.

தினமும் சொல்லக்கூடிய விநாயகர் மந்திரம் | Vinayagar Manthiram

கணபதி மந்திரம்:

‘ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லாம் கலௌம் கம் தோரண கணபதயே

சர்வகார்ய கர்த்தாய ஸகல சித்திகராய ஸர்வஜன வசீகரணாய

ருணாமோசன வல்லபாய ஹ்ரீம் கம் கணபதயே ஸ்வாஹா.’

சங்கடஹர சதுர்த்தி நாளில் இந்த மந்திரத்தை கூறி வணங்கினால் திருமண தடை அகலும், கடன் தொல்லை தீரும். இப்படி பல நன்மைகள் இந்த மந்திரத்தினை கூறுவதன் மூலம் கிடைக்கும்.

 சங்கடஹர சதுர்த்தி  தேதிகள் | Sankasthi Chaturthi 

விநாயகர் சகஸ்ரநாமம்:

“ஓம் கம் கணபதயே நம
வக்ரதுண்டாய ஹீம் ஓம்
நமோ ஹேரம்ப மதமோதித
மம சர்வ சங்கடம் நிவாரயே ஸ்வாஹா
ஓம் கம் க்ஷிப்ரப்ரசாதனாய நமஹ.”

நாம் விநாயகரை சதுர்த்தி அன்று வணங்கும் போது அருகம்புல்லால் அர்ச்சனை செய்த படி இந்த மந்திரங்களை சொல்லி வணங்கினால் விநாயகரின் அருள் மிக சிறப்பாக கிடைக்கும் என்பது ஐதீகம். மேலும் அவரை வணங்கி நெற்றியில் குட்டிக் கொண்டு தோப்புக்கரணம் போட்டு வர அறிவும், உடலும் வலுவடையும்.

சங்கடஹர சதுர்த்தி விரதம் இருப்பதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் எவ்வளவு தெரியுமா

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement