வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

சனி அமாவாசை 2025 | வாழ்வில் பண கஷ்டங்கள் நீங்கி செல்வம் பெறுக சில எளிய பரிகாரங்கள்..!

Updated On: March 28, 2025 3:03 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

Sani Amavasai Sirapugal

சனி பெயர்ச்சி மார்ச் மாதம் 29 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அன்று சனி அமாவாசை மற்றும் சூரிய கிரகணம் சேர்ந்து வருவது அறிய விஷயமாக இருக்கிறது. சனி பெயர்ச்சி, சனி அமாவாசை மற்றும் சூரிய கிரகணம் மூன்றும் சேர்ந்து வருவதால் இந்த நாள் அவ்வளவு விஷேசமான நாளாக இருக்கிறது. இந்த நாளில் நீங்கள் சில பரிகாரங்களை செய்து வந்தால் உங்கள் வாழ்வில் இருக்கும் கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி உங்களுக்கு நற்பலன்கள் கிடைக்கும். எனவே இன்றைய பதிவில் சனி அமாவாசை அன்று என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம் வாருங்கள்.

Saturn Transit To Shukra Foot Good Luck To These Zodiac Signs In Tamil

சனி அமாவாசை:

முன்னோர்களின் வழிபாட்டு நாளான அமாவாசை இந்த மாதம் மார்ச் 29 ஆம் தேதி சனி கிழமையில் வருகிறது. அதுமட்டுமில்லாமல் சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். மேலும் அன்று சூரிய கிரகணம் ஏற்படுவதும் ந்த ஆண்டின் அறிய விஷயமாக கருதப்படுகிறது.

சனி அமாவாசை தினத்தில் செய்யப்படும், தர்ப்பணங்களும் தானங்களும், முன்னோர்களின் ஆசி பெற உதவும். மேலும் இந்த நாளில் நீங்கள் சில குறிப்பிட்ட பரிகாரங்களை செய்து வந்தால் உங்கள் வாழ்வில் இருக்கும் கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி செல்வ வளம் மற்றும் மகிழ்ச்சி உண்டாகும்.

சனி அமாவாசை பரிகாரங்கள்:

செல்வம் பெறுக என்ன செய்ய வேண்டும்:

சனி அமாவாசையில் சனி பாகவனின் அருளை பெறுவதற்கு இந்த நாளில் கருப்பு எள், நல்லெண்ணெய் தீபம் ஏற்றி சனி பகவானை வழிபட வேண்டும். “ஓம் ஷாம் சனாய்ச்சராய நமஹ” என்ற மந்திரத்தை 108 முறை கூறி வழிபட வேண்டும். சனி பாகவனின் அருள் இருந்தால் நம் வாழ்வில் இருக்கும் துன்பங்களில் இருந்து விடுபட்டு மகிழ்ச்சியான வாழ்வை பெற முடியும்.

சனி அமாவாசை நாளில், சனி பகவானை வழிபடுவதோடு, சுந்தரகாண்டம் மற்றும் ஹனுமான் சாலிசா பாராயணம் செய்வது மனதிற்கு சந்தோசத்தை கொடுக்கும், பித்ரு தோஷம் நீங்கும். சனிபகவானுக்கு பிடித்த, இரும்பு பாத்திரங்கள், எள், நல்லெண்ணெய், கருப்பு நிறத்தில் ஆனா ஆடைகள், குடை, செருப்பு ஆகியவற்றை தேவைப்பட்டவர்களுக்கு தானமாக வழங்குவது மிகவும் சிறப்பு.

தீப வழிபாடு:

சனி அமாவாசை அன்று அரச மரத்தடியில், வீட்டின் நிலைவாசலில் விளக்கேற்றுவது சனியின் ஆதிக்கத்தை குறைக்கும். மாலையில் சிவன் கோவிலுக்குச் சென்று விளக்கேற்றுவதும் வீட்டின் தெற்கு திசை நோக்கி விளக்கேற்றுவதும் முன்னோர்களின் ஆசியை பெறுவதற்கு வழிவகுக்கும்.

தானம் செய்யுங்கள்:

சனி அமாவாசையன்று சனி பகவானுக்கு விருப்பமான பொருட்களை ஏழைகளுக்கு தானம் செய்வது சனி பகவானுக்கு மகிழ்ச்சி தரும். கருப்பு உளுந்து, கருப்பு காலணி, கருப்பு நிற ஆடைகள், கருப்பு குடை, கருப்பு எள் ஆகியவற்றை தானம் செய்யலாம். இதனால் சனியின் அருள் கிடைக்கும். இது வீட்டில் உள்ள பிரச்சனைகள் அனைத்தையும் முடிவுக்கு கொண்டு வரும்.

முன்னோர்கள் தர்ப்பணம்:

புனித நதிகளில் நீராடி தர்ப்பணம் செய்வது, ஏழைகளுக்கு உணவு தானம் வழங்குவது, பசு, காகம், நாய்கள் ஆகியவற்றிற்கு உணவு கொடுப்பது ஆகியன முன்னோர்களை மகிழ்விக்கும். இது சனியின் தீய விளைவுகளில் இருந்து விடுபட நிவாரணம் தரும்.

திருநள்ளாற்றில் மார்ச் 29 ஆம் தேதி சனி பெயர்ச்சி இல்லையா

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement

Prabha R

நான் உங்கள் பிரபா. நான் Business, Banking, News, Schemes, தொழிநுட்பம் என இத்தகைய பிரிவில் அன்றாடம் நடக்கும் பதிவுகளையும், நமக்கு தெரியாத பல பயனுள்ள தகவலையும் தமிழில் Pothunalam.com இணையத்தளத்தின் வாயிலாக பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now