வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

சனி பகவானுக்கு பிடிக்காத இந்த செயல்களை செஞ்சு அவரின் தண்டனைக்கு ஆளாகாதீங்க..

Updated On: April 1, 2025 6:28 PM
Follow Us:
sani bagavanuku pidithathu
---Advertisement---
Advertisement

சனி பகவானுக்கு பிடிக்காத செயல்கள் 

நாம் செய்கின்ற செயலுக்கு ஏற்றது போல தான் நமக்கு நன்மையும், தீமையும் கிடைக்கும். ஒருவர் நன்மையே செய்தால் அவருக்கு நன்மையே நடக்கும். மற்றவர்களுக்கு தீமை செய்தால் அவருக்கு அதை விட, அதை விட அதிகமான தீமைகள் நடக்கும் என்று ஆன்மிகத்தில் கூறப்படுகிறதது. அது போல ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு செயல் பிடிக்காது, பிடிக்கும் என்று இருக்கிறது. கடவுளுக்கு பிடித்த செயல்களை செய்யும் போது நமக்கு பலனையும், அருளையும் அள்ளி தருவார். அதுவே அவருக்கு பிடிக்காத விஷயங்களை செய்யும் போது கெட்டது தான் நடக்கும்.

அதில் சனி பகவான் முக்கியமாக இருக்கிறார். இவருடைய பார்வையில் இருந்து நாம் தப்பிக்க முடியாது. அதனால் இவருக்கு பிடிக்காத செயல்களை செஞ்சு அவரின் தண்டனைக்கு ஆளாகாமல் இருக்க அவருக்கு என்னென்ன விஷயங்கள் பிடிக்காது என்று இந்த முழு பதிவை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

சனி பகவானுக்கு இவர்களை பிடிக்காது:

சனி பகவானுக்கு பிடிக்காத செயல்கள் 

சுத்தம் இல்லாத இடம் மற்றும் மனிதர்களை சனி பகவானுக்கு பிடிக்காது. அது போல குளித்துவிட்டு ஈரத்தோடு வீட்டுக்குள் செல்கிறவர்கள், ஒரு நாள் போட்ட உடையை மறுநாள் துவைக்காமல் அப்படியே போடுகிறவர்களை சனி பகவானுக்கு பிடிக்காது.

அடுத்ததாக சனி பகவானுக்கு இருள் சூழ்ந்த இடம் பிடிக்காது. அதனால் மாலை நேரத்தில் பூஜை அறையில் விளக்கேற்றி வையுங்கள். எப்போதும் கெட்ட வார்த்தைகள் பேசுவது, அழுது கொண்டே இருந்தால் சனி பகவானுக்கு பிடிக்காது. மண் ஆசை, பெண் ஆசை, பொன் ஆசை இருப்பவர்கள் சனி பகவானின் பார்வையிலிருந்து தப்பிக்க முடியாது. பெற்ற தாயை மதிக்காமல் இருப்பவர்கள், அடுத்தவர்களின் மனைவி மேல் ஆசைப்படுபவர்கள் சனி பகவான் வக்ர நிலையிலிருந்து தப்பித்து கொள்ள முடியாது.

எல்லாரும் தப்பு செய்கிறார்கள், அதனால் நானும் தப்பு செய்கிறேன் என்று மற்றவர்களை காரணம் காட்டுபவர்களை சனி பகவானுக்கு பிடிக்காது. நீ சரியாக இருந்தால் நானும் சரியாக இருப்பேன் என்பது தான் சனி பகவானின் கொள்கையாக இருக்கிறது. சனி பகவானை சரியான முறையில் வழிபட்டால் அருளை அள்ளித்தருவார். அதுவே அவரை கோபப்படுத்தினால் தண்டனை பெருசா இருக்கும். 

சனி பகவான் பற்றிய ஆன்மீக தகவல்கள்

சனி பகவானுக்கு பிடித்தது:

ஓம் நமசிவாய என்ற மந்திரத்தை உச்சரிப்பவர்களை சனி பகவானுக்கு ரொம்ப பிடிக்குமாம்.

பிரதோஷ வழிபாடு செய்கிறவர்களை சனி பகவான் நேசிப்பார். சத்தியத்தை காப்பற்றுவர்களை சனி பகவானுக்கு ரொம்ப பிடிக்குமாம்.

தன்னுடைய முன்னோர்களுக்கு வழிபாடு மற்றும் காகத்திற்கு உணவு வழங்குவது சிம்னி பகவானுக்கு பிடித்த விஷயமாக இருக்கிறது.

கண் இல்லாதவர்களுக்கு உதவுவது, ஊனமுற்றவர்களுக்கு உதவுவது, துப்புரவு தொழிலார்களுக்கு உதவுவது, ஆதரவற்றவர்களுக்கு உதவுவது போன்ற செயல்களை செய்பவர்களை சனி பகவான் அருள் கிடைக்கும்.

உங்களுக்கு ஒரு சந்தேகம் வரும் இந்த செயல்களை செய்து விட்டு வேறு எந்த பாவ செயலை செய்தாலும் சனி பகவான் மன்னித்துவிடுவாரா என்று கேட்டால் இல்லை. நீங்க செய்ய கூடிய தொண்டு ஆனது எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்ய கூடியதாக இருக்க வேண்டும். அது போல நான் பாவத்தை செய்து விட்டு அதற்கான பரிகாரமாக மற்றவர்களுக்கு உதவி செய்து கொள்கிறேன் என்றால் அவர்களை சனி பகவான் காக்க மாட்டார்.

சனி பகவானுக்கு பிடித்த விஷயத்தை செய்து, பிடிக்காத விஷயத்தை செய்யாமல் அவரின் அருளை முழுமையாக பெறுங்கள்.

இதுபோன்று ஆன்மீக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள் 
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now