சனி அஸ்தமனம் 2025
பொதுவாக ஆன்மிகத்தில் நம்பிக்கை இருப்பவர்களுக்கு ஒவ்வொரு நாளும் என்ன பலன்கள் என்பதை பார்த்து விட்டு தான் அன்றைய நாளை தொடங்குவார்கள். அது போல ஒவ்வொரு பெயர்ச்சியும் ரொம்ப முக்கியமானது, ஒவ்வொரு கிரங்களும் ஒரு ராசியில் குறிப்பிட்ட காலத்திற்கு சஞ்சரிப்பார்கள். அப்படி சஞ்சரிக்கும் போது நன்மை மற்றும் தீமை என இரண்டுமே இருக்கும். அதில் சனி பகவான் முக்கியமாக கிரகமாக கருதப்படுகிறது. சனி பகவான் ஒரு ராசியில் நீண்ட நாட்கள் இருந்தால் எல்லா ரசிகளிலும் அதனுடைய பலன்கள் காணப்படும். அந்த வகையில் சனி பகவான் கும்ப ராசியில் பிப்ரவரி 22-ம் தேதி சஞ்சரிக்க உள்ளார். இந்த கும்ப அரசியில் 37 நாட்கள் அஸ்தமன நிலையில் சஞ்சரிக்கையுள்ளார். இந்த காலத்தில் சனி பகவான் பலவீனமாக காணப்படுவார். இதனால் நன்மைகள் நடந்தாலும் சில ராசிகளின் வாழ்க்கையில் ஏன் வாழ்கிறோம் என்ற நிலைக்கு தள்ளப்படுவார்கள். அவர்கள் யார் யாருன்னு தெரிஞ்சுப்போம்.
விருச்சிகம்:

சனி பகவான் விருச்சிக ராசியில் 4-வது வீட்டில் சஞ்சரிக்கயுள்ளார். இதனால் நீங்கள் எந்த செயல் செய்தாலும் அதனை கவனமாக செய்ய வேண்டும். அதிலும் நிலம், வீடு, சொத்து அல்லது விலை மதிப்புள்ள ஏதும் வாங்க நினைத்தாலும் அதனை ஒரு முறைக்கு பல முறை யோசித்து முடிவெடுக்க வேண்டும். இந்த நேரத்தில் உங்களின் ஆரோக்கியத்தில் பிரச்சனை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. மேலும் நீங்கள் வாகனங்கள் ஓட்டும் போது மெதுவாக செல்ல வேண்டும். ஏனென்றால் வாகனங்களில் செல்லும் போது அடிபடுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. வண்டியில் செல்லும் போது நாய்கள் வந்தால் ஜாக்கிரதையாக செல்ல வேண்டும். இதனாலும் கீழே விழுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. தொழில் அல்லது வியாபாரம், வேலை போன்றவற்றால் மன அழுத்தம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. இதனை நீங்கள் தவிர்ப்பதற்கு எதையும் லேசாக எடுத்து கொள்ள வேண்டும். உங்களின் உறவுகளால் உங்களுக்கு மன கஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் உறவுகளில் இடையில் சண்டை ஏற்பட வாய்ப்புள்ளது. அவ்வப்போது நெனெகல் விட்டு கொடுத்து செல்வது நல்லது.
164 வருடங்களுக்கு பிறகு 2025-யில் ராஜ வாழ்க்கை வாழ போகும் ராசிகள்.!
சிம்மம்:

சனி பகவான் சிம்ம ராசியில் 7-வது வீட்டில் அஸ்தமனமாகவுள்ளார். இதனால் நீங்கள் எல்லா விதத்திலும் பிரச்சனைகளை சந்நிதிக நேரிடும். அதில் முதலாவதாக வாழ்க்கை துணையிடம் சண்டை ஏற்படும். அவ்வப்போது நீங்கள் அவர்கள் பேச பேச எதிர்த்து பேசினால் சண்டை அதிகமாகும் தவிர குறையாது. அதனால் அவர்கள் பேசினாலும் நீங்கள் விட்டு கொடுத்து செல்ல வேண்டும். அடுத்ததாக உங்களின் உடப்பிறந்தவர்களால் பிரச்சனை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. இதனால் நீங்கள் பெரிதும் கவலை அடைவீர்கள். உங்களின் தொப்புள் கொடி உறவுகளிடம் பேசும் போது வார்த்தைகளில் கவனம் வேண்டும். நீங்கள் எந்த வார்த்தையை பேசினால் எதில் பிரச்சனையை ஆரம்பிக்கலாம் என்று காத்திருப்பார்கள். கம்பெனி அல்லது அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கு எந்த மூலையிலிருந்து பிரச்சனை வரும் என்று சொல்ல முடியாது. உங்க கூடவே இருக்கிறவன் கூட பிரச்சனையை கொடுக்கலாம். அதனால் நீங்கள் ரொம்ப கவனமாக இருக்க வேண்டும். வியாபாரம் அல்லது தொழில் செய்பவராக இருந்தால் எந்த முடிவுகள் எடுத்தாலும் அதனை ஒரு முறைக்கு பல முறை யோசித்து எடுப்பது நல்லது.
கடகம்:

கடக ராசியில் 8-வது வீட்டில் சஞ்சரித்துள்ளார். இதனால் உங்களுக்கு தொழில், வேலை, பணம் போன்றவற்றில் பிரச்சனையை சந்திக்க நேரிடும். நீங்கள் தொழில் செய்பவராக இருந்தால் புதிய முதலீடு ஏதும் செய்வதாக இருந்தால் அதனை ஆராய்ந்து முடிவெடுப்பது நல்லது. ஏனென்றால் நீங்கள் செய்யும் முதலீடு உங்களுக்கு பலனை கொடுக்காமல் இருக்கலாம். வெளியில் வேலை செய்பவராக இருந்தால் நீங்கள் என்ன தான் மாடு மாதிரி உழைத்தாலும் அதற்கேற்ற அங்கீகாரம் கிடைக்காது. இதனால் மன அழுத்தத்திற்கு ஆளாகுவீர்கள். குடும்பத்தில் பணம் வந்தாலும் அது எந்த பக்கம் போகுதுன்னு தெரியாமல் செலவுகள் வந்து கொண்டே இருக்கும். இதனால் என்னடா வாழ்க்கை என்று வெறுப்பீர்கள். மேலும் உங்களின் ஆரோக்கியத்தில் நிறைய பிரச்சனைகளை சந்திப்பீர்கள். இப்படி பிரச்சனை வரும் போது அதனை அலட்சியம் செய்யாமல் மருத்துவரிடம் காண்பித்து அதற்கான ஆலோசனை பெற வேண்டும். இல்லையென்றால் உடல் ஆரோக்கியத்தில் இருக்கும் சின்ன பிரச்சனை விபரீதமாக முடியும்.
| இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |













