சங்கடங்களை தீர்க்கும் சனிபகவானின் காயத்ரி மந்திரம்..!

Advertisement

Sani Bhagavan Gayatri Mantra in Tamil

ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்களில் மிகவும் முக்கியமானவர் என்று கருத்தபடுவது சனிபகவான் தான். அதேபோல் நீதி நாயகனாக விளங்குபவர் சனி பகவான். எனவே தான் எந்த ஒரு கிரகத்திற்கும் கிடைக்காத ஈஸ்வர பட்டம் சனீஸ்வரனுக்கு கிடைத்தது. பொதுவாக சனி பகவான் துன்பத்தை மட்டும் தான் அளிப்பர் என்று கூறுவார்கள். ஆனால் அது உண்மையல்ல அவர் தன் வேலையை சரியாக, ஞாயமாக, நேர்மையாக செய்பவருக்கு யாரும் எதிர்பாராத நன்மைகளை செய்யக் கூடியவர். சனீஸ்வரன் துன்பம் தரக் கூடிய ஏழரை சனி காலம், சனி தசை நடக்கும் காலம், அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி நடக்கும் போது எவ்வளவு அதிகமான துன்பத்தை அளிக்கின்றாறோ அதே அளவுக்கு அவர் நமது ஜாதகத்தில் நல்லநிலையில் இருந்தால் நமக்கு நாம் எதிர்பார்க்காத பல நன்மைகளை செய்வார்.

ஆனால் அதற்கு நாம் அவரின் முழு ஆசீர்வாதத்தையும் பெற்றிருக்க வேண்டும். அதற்கு நாம் அவரின் போற்றிகள், துதிகள், மந்திரங்கள் மற்றும் கவசங்களை கூறி மனமார அவருக்கு பூஜை செய்ய வேண்டும். அதனால் தான் இன்று கஷ்டங்களை போக்கும் சனிபகவானின் காயத்ரி மந்திர வரிகளை பதிவிட்டுளோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து சனிபகவானின் ஆசிர்வாதத்தை முழுமையாக பெற்று கொள்ளுங்கள்.

கஷ்டங்களை போக்கும் சனிபகவானின் கவச வரிகள்

Sani Gayathri Manthiram in Tamil

Sani Gayathri Manthiram in Tamil

ஓம் காகத்வஜாய வித்மஹே கட்கஹஸ்தாய தீமஹி
தந்நோ மந்தஹ் ப்ரசோதயாத்!

ஓம் காகத்வஜாய வித்மஹே கட்கஹஸ்தாய தீமஹி
தந்நோ சனிஹ் ப்ரசோதயாத்!

ஓம் காகத்வஜாய வித்மஹே கட்கஹஸ்தாய தீமஹி
தந்நோ சனைச்சர ப்ரசோதயாத்!

ஓம் சனீஸ்வராய வித்மஹே சாயாபுத்ராய தீமஹி
தந்நோ சனிஹ் ப்ரசோதயாத்!

ஓம் சதுர்புஜாய வித்மஹே தண்டஹஸ்தாய தீமஹி
தந்நோ மந்தஹ் ப்ரசோதயாத்!

வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும் லட்சுமி குபேரர் மந்திரங்கள்

Sani Bhagavan Slokam in Tamil

நீலாஞ்ஜன ஸமாபாஸம் ரவிபுத்ரம் யமாக்ரஜம்
சாயா மார்த்தாண்ட ஸம்பூதம் தம் நமாமி ஸனைச்சரம்!

Sani Bhagavan Parihara Stotram in Tamil

சங்கடந் தீர்க்கும் சனி பகவானே
மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்!
சச்சரவின்றிச் சாகா நெறியில்
இச்சகம் வாழ இன்னருள் தா தா!!

ஹயக்ரீவ ஸ்தோத்திரம்

சனி வக்ரத்தால் 4 மாதங்களுக்கு இந்த ராசிக்காரர்களுக்கு பணமழை பொழிய போகின்றது

சனிபகவானின் காயத்ரி மந்திரம் Pdf 

 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal 

 

Advertisement