சனியில் உருவாகும் ராஜயோத்தால் எந்த ராசிகளுக்கு நல்லது..

Advertisement

சனி பெயர்ச்சியால் உருவாகும் ராஜயோகம்

பொதுவாக தினமும் தங்களின் ராசிக்கான பலனை பார்ப்பார்கள். அதனை பார்த்து விட்டு தங்களின் ராசிக்கு என்ன உளதோ அதன்படி அன்றைய நாள் நடந்து கொள்வார்கள். சில பேர் தொலைக்காட்சியில் ஜோதிடர் கூறுவது, செய்தித்தாளில் உள்ள பலன்கள் போன்றவற்றை பார்ப்பார்கள். அது போல கிரகங்களின் மாற்றங்களையும் பார்த்து கொண்டே இருப்பார்கள். தற்போது சனி பகவான் கும்ப ராசியில் இருக்கிறார், 30 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கும்ப ராசியில் இருக்கும் சனி இந்த ஆண்டின் மிகப்பெரிய ராஜயோகத்தை உருவாக்கப் போகிறார். இந்த அரிய ராஜயோகம் ஐந்தாவது ஆண் ராஜயோகங்களில் ஒன்றாக கருதப்படுகிறது இந்த சஷ மகாபுருஷ ராஜயோகத்தில் சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பெறப்போகிறது.  எந்தெந்த ராசிகள் என்று இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம் வாங்க..

மகரம்:

சனியின் இந்த யோகமானது உங்களுக்கு ஏற்ற காலமாக இருக்கும் என்றே கூறலாம். வியாழன் நட்சத்திரத்தில் சனி இருப்பதால் உங்கள் வீட்டு வாசல் கதவை அதிர்ஷ்டம் வந்து தட்டபோகிறது. இந்த நேரத்தில் நேரத்தில் வீடு மற்றும் வாகனம் வாங்கி மகிழ்வீர்கள். நீங்கள் உயர்கல்வியை வெளியூர் சென்று படிக்க விரும்பினீர்கள் என்றால் இந்த காலம் உங்களுக்கு உகந்ததாக இருக்கும்.

கஜகேசரி யோகத்தால் திடீர் பலன்களை பெரும் ராசிகள் யார்..?

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த யோகம் மிகுந்த அதிர்ஷ்டத்தை கொடுக்க போகிறது. குடும்பத்தில் இருப்பவர்களுடன் நேரத்தை கழிப்பீர்கள். இதனால் குடும்பத்தில் இருப்பவர்களுடன் நல்லுறவு பராமரிக்கப்படும். நீதிமன்றத்தில் ஏதும் வழக்குகள் இருந்து அவை முடியாமல் இருந்தால் அவை முடிவுக்கு வரும். இதுவரை வேலை இல்லாமல் தவித்து கொண்டிருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும்.

கும்பம்:

கும்ப ராசிக்காரர்கள் இந்த நேரமானது சாதகமாக இருக்கும். நீங்கள் எந்த துறையில் வேலை பார்த்தாலும் அவை உங்களுக்கு சாதகமாக இருக்கும். மேலும் அதில் நீங்கள் வெற்றியை அடைவீர்கள். மன அழுத்தத்தில் இருந்தால் அதிலிருந்து விடுபட்டு மகிழ்ச்சியாக இருப்பீர்கள். சொந்தமாக சுயதொழில் செய்பவர்கள் லாபத்தை அடைவார்கள். இதனால் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும். உங்களின் காதல் வாழ்க்கை மற்றும் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement