Sani Bhagavan Signs Bad Luck in Tamil
பொதுவாக ஆன்மீகத்தில் இந்த ஜென்மத்தில் செய்த பாவங்கள் அடுத்த ஜென்மத்திலோ அல்லது நம்முடைய முதியோர் வயதிலோ நம்மை சேரும் என்று கூறுவார்கள். ஆனால் சனி பகவானை பொறுத்தவரை எந்த விதமான பாரபட்சமும் இருக்காது. ஏனென்றால் நாம் என்ன செய்தமோ அதற்கு ஏற்றவாறே என்ன மாதிரியான பலன்களாக இருந்தாலும் வந்து சேரும் என்று கூறுவார்கள். அந்த வகையில் குறிப்பாக சனி பெயர்ச்சி நடந்தாலோ அல்லது வக்ர நிலையை அடைந்தாலோ அது ஒவ்வொரு ராசியினருக்கும் அச்சுறுத்தும் வகையில் இருக்கிறது. இவ்வாறு இருக்கும் பட்சத்தில் தற்போது ஆன்மீகம் ரீதியாக சனி பகவானின் ஆட்சியால் எந்தந்த ராசியினருக்கு தீமை விளைவிக்கும் வகையில் பலன்கள் இருக்கும் என்பதை பார்க்கலாம் வாங்க..!
கும்ப ராசியில் சனி பகவான் வக்ர நிலை பலன்கள்:
மேஷ ராசி:
மேஷ ராசியினருக்கு கும்ப ராசியின் வக்ர நிலை பலன்கள் ஆனது சற்று கவனமாக இருக்க வேண்டிய பலனாகவே இருக்கிறது. அந்த வகையில் வேலை செய்யும் இடம் முதல் செய்யும் தொழில் வரை அனைத்திலும் எச்சரிக்கையுடன் இருப்பது மிகவும் அவசியம். மேலும் வாகனங்களில் செல்லும் போதும் மிகவும் பாதுகாப்பு முக்கியம். அதேபோல் இத்தகைய சூழ்நிலைகளில் கோபங்களை தவிர்ப்பது நல்லது. ஏனென்றால் அப்போது தான் மன அமைதி ஆனது கிடைக்கும்.
கடக ராசி:
சனி பகவானின் வக்ர நிலை கடக ராசிக்காரர்களுக்கு சற்று சவாலான பலன்களே அளிக்கும் விதமாக உள்ளது. எதிலும் பொறுமை மற்றும் நிதானமானது மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது. மேலும் குடும்பத்தில் சிறு சிறு சிக்கல்கள் வந்து நீங்கும்.
அதேபோல் ஆரோக்கியம் ரீதியாக செலவுகளும் ஏற்படும். மற்றவர்களிடம் எப்போதும் பேசும் போது வீண் விவாதங்களை தவிர்த்து கொண்டு இருப்பது நல்லது.
36 வருடத்திற்கு பிறகு இந்த ராசிக்கு ராகு கேது பெயர்ச்சி மிகப்பெரிய மாற்றம்
மிதுன ராசி:
மிதுன ராசிக்காரர்கள் இத்தகைய நேரத்தில் உடல் நலத்தில் அதிக கவனம் செலுத்துவது அவசியம். அதேபோல் அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளும் முறையில் சூழல்கள் அமையும் வாய்ப்பும் உள்ளது.
மேலும் இத்தகைய நேரமானது சற்று சீரானதாக இருந்தாலும் உங்களுடைய திறமை ஆனது தொழில் மற்றும் வியாபாரத்தில் அதிகமாக வெளிப்படுவதற்கான நேரமும் இதில் உங்களுக்கு உள்ளது.
ரிஷப ராசி:
சனி பகவானின் வக்ர நிலை ரிஷப ராசிக்காரர்களை பொறுத்தவரை சிக்கலும், சவாலும் நிறைந்த நாளாகவே அமைகிறது. ஆகவே இப்படிப்பட்ட சூழலில் என்ன செய்ய வேண்டும் என்பதை சிந்தித்து செய்வது நல்லது.
மேலும் தொழில் மற்றும் வியாபாரத்தில் தற்போது உள்ள சுழலை விட நல்ல முனேற்றமானது இருக்கும். ஆனால் அதே சமயம் அதில் சற்று சிக்கல்களும், போட்டியும் அதிகமாக காணப்படும்.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |