கஷ்டங்களை போக்கும் சனிபகவானின் கவச வரிகள் | Sani Kavasam in Tamil

Advertisement

Sani Kavasam in Tamil | சனி பகவான் கவசம் 

ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்களில் மிகவும் முக்கியமானவர் என்று கருத்தபடுவது சனிபகவான் தான். அதேபோல் நீதி நாயகனாக விளங்குபவர் சனி பகவான். எனவே தான் எந்த ஒரு கிரகத்திற்கும் கிடைக்காத ஈஸ்வர பட்டம் சனீஸ்வரனுக்கு கிடைத்தது. பொதுவாக சனி பகவான் துன்பத்தை மட்டும் தான் அளிப்பர் என்று கூறுவார்கள். ஆனால் அது உண்மையல்ல அவர் தன் வேலையை சரியாக, ஞாயமாக, நேர்மையாக செய்பவருக்கு யாரும் எதிர்பாராத நன்மைகளை செய்யக் கூடியவர்.

சனீஸ்வரன் துன்பம் தரக் கூடிய ஏழரை சனி காலம், சனி தசை நடக்கும் காலம், அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி நடக்கும் போது எவ்வளவு அதிகமான துன்பத்தை அளிக்கின்றாறோ அதேஅளவுக்கு அவர் நமது ஜாதகத்தில் நல்லநிலையில் இருந்தால் நமக்கு நாம் எதிர்பார்க்காத பல நன்மைகளை செய்வார். ஆனால் அதற்கு நாம் அவரின் முழு ஆசீர்வாதத்தையும் பெற்றிருக்க வேண்டும். அதற்கு நாம் அவரின் போற்றிகள், துதிகள், மந்திரங்கள் மற்றும் கவசங்களை கூறி மனமார அவருக்கு பூஜை செய்ய வேண்டும். அதனால் தான் இன்று கஷ்டங்களை போக்கும் சனிபகவானின் கவச வரிகளை பதிவிட்டுளோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து சனிபகவானின் ஆசிர்வாதத்தை முழுமையாக பெற்றுக்கொள்ளுங்கள்.

சனி பகவான் வழிபடும் முறை மற்றும் பரிகாரங்கள்

Sani Kavasam Lyrics in Tamil:

Sani Kavasam Lyrics in Tamil

கருநிறக் காகம் ஏறி
காசினி தன்னை காக்கும்
ஒரு பெரும் கிரகமான
ஒப்பற்ற சனியே! உந்தன்
அருள் கேட்டு வணங்குகின்றேன்
ஆதரித் தெம்மை காப்பாய்!
பொருளோடு பொன்னை அள்ளி
பூவுலகில் எமக்குத் தாராய்! – (1)

ஏழரை சனியாய் வந்தும்.
எட்டினில் இடம் பிடித்தும்.
கோளாறு நான்கில் தந்தும்.
கொண்டதோர் கண்ட கத்தில்
ஏழினில் நின்ற போதும்
இன்னல்கள் தாரா வண்ணம்
ஞாலட்தில் எம்மைக் காக்க
நம்பியே தொழுகின்றேன் நான்! – (2)

பன்னிறு ராசி கட்கும்
பாரினில் நன்மை கிட்ட
எண்ணிய எண்ணம் எல்லாம்
ஈடேறி வழிகள் காட்ட
எண்ணெயில் குளிக்கும் நல்ல
ஈசனே உனைத்துதித்தேன்
புண்ணியம் எனக்கு தந்தே
புகழ்கூட்ட வேண்டும் நீயே! – (3)

கருப்பினில் ஆடை ஏற்றாய்!
காகத்தில் ஏறி நின்றாய்!
இரும்பினை உலோகமாக்கி
எள்தனில் பிரியம் வைத்தாய்!
அரும்பினில் நீல வண்ணம்
அணிவித்தால் மகிழ்ச்சி கொள்வாய்!
பெரும் பொருள் வழங்கும் ஈசா
பேரருள் தருக நீயே! – (4)

சனியெனும் கிழமை கொண்டாய்
சங்கடம் விலக வைப்பாய்
அணிதிகழ் அனுஷம் , பூசம்
ஆன்றதோர் உத்ரட்டாதி.
இனிதே உன் விண்மீ னாகும்
எழில் நீலா மனைவியாவாள்
பணியாக உனக்கு ஆண்டு
பத்தொன்போதென்று சொல்வார்! – (5)

குளிகனை மகனாய் பெற்றாய்!
குறைகளை அகல வைப்பாய்!
எழிலான சூரியன் உன்
இணையற்ற தந்தை யாவார்
விழிபார்த்து பிடித்து கொள்வாய்!
விநாயகர், அனுமன் தன்னை
தொழுதாலோ விலகிச் செல்வாய்
துணையாகி அருளை தாராய்! – (6)

அன்னதானத்தின் மீது
அளவிலா பிரியம் வைத்த
மன்னனே! சனியே! உன்னை
மனதார போற்றுகின்றோம்!
உன்னையே சரணடைந்தோம்!
உயர்வெல்லாம் எமக்குத்தந்தே.
மன்னர் போல் வாழ்வதற்கே
மணியான வழிவகுப்பாய்! – (7)

மந்தனாம் காரி , நீலா
மணியான மகர வாசா!
தந்ததோர் கவசம் கேட்டே
சனியென்னும் எங்கள் ஈசா
வந்திடும் துயரம் நீக்கு
வாழ்வினை வசந்தம் ஆக்கு!
எந்த நாள் வந்த போதும்
இனிய நாள் ஆக மாற்று! – (8)

சனிபகவான் கவச பாடல் வரிகள்   Pdf 

 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal 
Advertisement