வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

சனி வக்ர பார்வையிலிருந்து தப்பிக்க இதை மட்டும் செய்தால் போதும்

Updated On: March 27, 2025 5:25 PM
Follow Us:
sani paarvaiyil irunthu thappikka pariharam
---Advertisement---
Advertisement

சனியின் வக்ர நிலையிலிருந்து தப்பிக்க

சனி பகவான் மார்ச் 29-ம் தேதி கும்ப ராசியிலிருந்து, மீன ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இதனால் எந்தெந்த ராசிகளுக்கு என்ன கொடுமைகள் செய்ய காத்திருக்கிறார் என்று யோசித்து கொண்டிருப்பீர்கள். அதுமட்டுமில்லாமல் சனியின் பார்வையிலிருந்து தப்பித்து கொள்ள வேண்டும் என்று தான் எல்லாருடைய எண்ணமாக இருக்கும். இதற்கு ஏதும் பரிகாரங்கள் இருக்கிறதா என்று தேடுபவர்களுக்கு இந்த பதவி பயனுள்ளதாக இருக்கும். சரி வாங்க பதிவினிள் செல்வோம்.

சனி வக்ர நிலை:

சனியின் வக்ர நிலையிலிருந்து தப்பிக்க 

இந்த ஆண்டு 2025-ல் சனி பகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இந்த ராசியிலே ஜூன் 3, 2027-ம் ஆண்டு வரை இருப்பார். அதன் பிறகு தான் மேஷத்திற்கு பெயர்ச்சி அடைவார்.இந்த காலமானது சிலராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுத்தாலும், சில ராசிகளுக்கு துன்பத்தை கொடுக்கும். அதனால் சனியின் வக்ர நிலையிலிருந்து தப்பித்து கொள்வதற்கான பரிகாரத்தை பற்றி கீழே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

சனி பகவான் வக்ர நிலையிலிருந்து தப்பிக்க பரிகாரம்:

சனியின் தோஷத்தை குறைக்க சனி பகவானை வழிபட வேண்டும்.  ஓம் ஷாம் சனிச்சாராய நமஹ என்ற சனிக்கு சாதகமாக இருக்கும் மந்திரத்தை கூறுங்கள். இந்த மந்திரத்தை கூறுவதால் நேர்மறை சூழ்நிலையை உறைவாக்க உதவுகிறது. எதிர்மறை எண்ணங்களை குறைப்பதற்கு சனி காயத்ரி மந்திரம்” அல்லது “சனி மகாமந்திரம்” என்ற மந்திரத்தை கூறுங்கள்.

ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமையில் சனி பகவானுக்கு எள் எண்ணெயில் விளக்கு ஏற்றுங்கள். இது போல செய்வதால் சனியினால் வரும் தீமையை குறைத்து கொள்ள முடியும்.

சனி பெயர்ச்சி இந்த ராசிக்காரர்களை வச்சி செய்ய போகிறது.! இதுல உங்க ராசி இருக்கானு பார்த்துட்டு அலார்ட்டா இருந்துக்கோங்க.!

சனி பகவானுக்கு ரொம்ப புடிச்ச விஷயம் தானம் மற்றும் உதவி செய்தல் , அதனால் நீங்கள் உங்களால் முடிந்த தானங்களை செய்யுங்கள். இதன் மூலம் சனி பகவானின் அருள் உங்களுக்கு கிடைக்கும்.

சனி பகவானுக்கு கருப்பு நிறம் பிடித்தமான ஒன்றாக இருக்கிறது. அதனால் சனி கிழமைகளில் கருப்பு நிற ஆடை அணியுங்கள். அதுமட்டுமில்லாமல் கருப்பு இரத்தின நகை அணிவது உங்களுக்கு வரும் துன்பத்தை எதிர்த்து போராடுவதற்கு உதவியாக இருக்கிறது.

சனிக்கிழமைகளில் விரதம் இருந்து சனி பகவானை வழிபடுங்கள். அதாவது அன்றைய தினம் சைவ உணவு அல்லது பால், பழம் மட்டுமே அருந்தி உணவை சாப்பிட வேண்டும்.

மேல் கூறியுள்ள பரிகாரங்களை செய்து சனி பகவான் அருளை பெற்று, அவரின் வக்ர நிலையிலிருந்து தப்பித்து கொள்ளுங்கள்.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now