இந்த வருடம் சனி பகவான் ராகுவின் நட்சத்திரத்தில் நுழைவதால் இந்த ராசிக்காரர்களுக்கு எல்லாம் இனி அதிஷ்டம் கொட்ட போகிறதாம்..!

Advertisement

சனி பெயர்ச்சி 2023

மனிதனாக பிறந்த அனைவருக்கும் ராசி மற்றும் நட்சத்திரம் ஆனது அவர் அவருடைய பெயர் மற்றும் பிறந்த தேதியினை பொறுத்து தான் மாறுபடுகிறது. அந்த வகையில் ஒவ்வொரு வருடமும் சனி பகவான் ஒவ்வொரு நட்சத்திரம் அல்லது ராசியில் பெயர்ச்சி அடைகிறார். அவ்வாறு பெயர்ச்சி அடைவதோடு மட்டும் இல்லாமல் ராசி மற்றும் நட்சத்திரங்களின் அடிப்படையில் அதற்கு ஏற்றவாறு பலன்களை அளிக்கும். அந்த வகையில் இந்த வருடம் சனி பகவான் ராகுவின் நட்சத்திரமான கும்ப ராசியில் உள்ள சதய நட்சத்திரத்தில் நுழைகிறார். ஆகாயல் இத்தகைய பெயர்ச்சியின் காரணமாக 4 ராசிகர்களுக்கு அதிர்ஷ்டம் பெருக போகிறது என்று ஆன்மீகத்தில் கூறப்படுகிறது. ஆகவே எது என்னென்ன ராசி மற்றும் அதில் உங்களுடைய ராசி இடம் பெற்றிருக்கிறதா என்று பதிவை தொடர்ந்து படித்து தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!

இதையும் படியுங்கள்⇒ ராகு கேது பெயர்ச்சி.. இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை தான்.. 

Sani Peyarchi 2023 in Tamil:

மேஷ ராசி:

மேஷ ராசி

ராசியில் முதல் ராசியான மேஷ ராசிக்காரர்களுக்கு இத்தகைய சனி பெயர்ச்சி காரணமாக எதிர்பாராத நல்ல மாற்றங்கள் வாழ்க்கையில் நடந்து முன்னேற்றம் அடைவதற்கான வாய்ப்புகள் உள்ளது என்று ஆன்மீகத்தில் கூறப்படுகிறது.

மேலும் தொழில் ரீதியாக வளர்ச்சி அதிகரிக்கும், கஷ்டங்கள் நீங்கும் மற்றும் வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

துலாம் ராசி:

துலாம் ராசி

ராசியில் 7-வது ராசியான துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த சனி பெயர்ச்சி காரணமாக அதிர்ஷ்டம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் இதுநாள் இருந்ததை விட நிதிநிலை சிறப்பாக காணப்படும்.

அதுபோல எடுத்த முயற்சியில் வெற்றி பெற வேண்டும் என்று தீர்மானத்தோடு செயல்படுவீர்கள்.

இந்த ராசிக்காரர்கள் எல்லாம் சனியின் நட்சத்திர பெயர்ச்சியில் கொஞ்சம் கவனமா இருக்கனுமாம்.. உங்களுடைய ராசி இதுல இருக்கானு தெரியுமா.. 

சிம்ம ராசி:

சிம்ம ராசி

சிம்ம ராசியின் 6-வது மற்றும் 7-வது ராசியில் சனி பகவான் பெயர்ச்சி அடைவதால் ரொம்ப நாட்களாக திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் ஆகிவிடும்.

அதுபோல வீட்டில் பண வரவு அதிகரித்து மகிழ்ச்சி நிலை காணப்படும். இதுநாள் வரையில் இருந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும் என்று ஜோதிடத்தில் சொல்லப்படுகிறது.

மிதுன ராசி:

மிதுன ராசி

 

ராசியில் மூன்றாவது ராசி என்றால் அது மிதுன ராசி தான். இத்தகைய மிதுன ராசியில் 8-வது மற்றும் 9-வது வீட்டில் சனி பகவான் சஞ்சரிப்பதால் இனி வரும் காலம் அதிர்ஷ்டம் காலமாக இருக்கும். 

இதோடு மட்டும் இல்லாமல் தொழிலில் முன்னேற்றம் காணப்படும். நிதிநிலையும் சிறப்பாக காணப்படும். ஆனால் எந்த செயலிலும் பொறுமை என்பது மிகவும் அவசியம் என்று ஆன்மீகத்தில் சொல்லப்படுகிறது.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement