130 நாட்கள் இந்த ராசிக்காரர்களுக்கு மனநிம்மதி..! சனி பெயர்ச்சியால் நல்ல பலன்கள் எந்த ராசிக்கு..!

Sani Peyarchi 2023 Palangal in Tamil

Sani Peyarchi 2023 Palangal in Tamil

ஜூன் 17 ஆம் தேதி முதல் சனி வக்கிரம் அடைகிறார். சனி பெயர்ச்சியால் யாருக்கு பாதிப்பு இதுவரை இருந்ததோ அவர்களுக்கு சில நன்மைகளும் யாருக்கு பாதிப்பு இல்லாமல் இருந்ததோ அவர்களுக்கு சில தீமைகளும் ஏற்பட உள்ளது. கும்ப ராசியில் பயணம் செய்யும் சனிபகவான் சுமார் 140 நாட்கள் வக்ர கதியில் சஞ்சரிப்பார். பின்னோக்கி நகர்ந்து சில நாட்கள் மகர ராசியில் பயணம் செய்யும் சனிபகவான் நவம்பர் மாதம் 4 ஆம் தேதி வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் எந்த ராசிக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம் வாங்க..!

Sani Peyarchi 2023 Palangal in Tamil

மீன ராசி:

மீனம் ராசி

சனி பகவான் மீன ராசியில் 12 ஆம் வீட்டில் பயணம் செய்கிறார். ஏழரை சனியில் விரைய சனி நடைபெறுகிறது. வக்கிரமடையும் காலத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். பணவரவு அதிகரிக்கும். கூடவே செலவுகளும் எட்டிப்பார்க்கும். விரைய செலவுகளை தவிர்த்து சுப செலவுகளாக மாற்றுங்கள். திருமணம் நடைபெறாதவர்களுக்கு திருமணம் நடைபெறும்.

கும்ப ராசி:

கும்ப ராசி

ஜென்ம சனியால் பல சோதனைகளை சந்தித்து இருப்பீர்கள். வழியில் இதுவரை இருந்து வந்த மனவருத்தங்கள் நீங்கும். வாகனம், சொத்துக்கள் வாங்குவீர்கள். மாணவர்களுக்கு நல்ல கல்லூரி, பல்கலைக்கழகங்களில் படிக்க வாய்ப்பு அமையும். பிள்ளைகளுக்கு திருமண சுபநிகழ்ச்சிகள் நடக்கும்.

புதன் ரிஷபத்தில் அமர்வதால் ஜூன் 7 முதல் கொட்டோகொட்டுனு கொட்டப்போகிறது  யாருக்கு தெரியுமா 

மகர ராசி:

மகர ராசி

தற்போது மகர ராசிக்கு ஏழரை சனி பாத சனியாக உள்ளது. தேவையற்ற செலவுகளை குறைக்கவும். அம்மாவின் உடல் நலனில் அக்கறை செலுத்துங்கள். மற்ற நபர்களின் குடும்ப வளர்ச்சியில் நீங்கள் தலையிட வேண்டாம். உங்களின் குடும்ப விஷயங்களை பற்றி மற்றவர்களிடம் சொல்லவேண்டாம். பணியில் அவசர பட்டு வெளியேற வேண்டாம்.

தனுசு ராசி:

தனுசு ராசி

இதுவரை உங்களுக்கு ஏற்பட்ட நஷ்டங்களுக்கு ஈடுகட்டும் விதமாக நன்மைகள் நடக்க போகிறது. இதுவரை வராமல் இருந்து வந்த பணம் கைக்கு வந்து சேரும். வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனமும் எச்சரிக்கையும் தேவை. இந்த காலம் காதலிப்பவர்களுக்கு கஷ்ட காலம் தான்.

விருச்சிகம் ராசி:

விருச்சிகம் ராசி

கடன் கொடுத்த பணம் வீட்டுக்கு திரும்பி வரும். கணவன் மனைவி உறவில் மகிழ்ச்சி உண்டாகும். பணப்புழக்கம் தாராளமாக இருக்கும். தடைபட்டு வந்த சுபகாரியங்கள் நடைபெறும். காதல் வாழ்க்கையில் மனதில் மகிழ்ச்சியும் உற்சாகமும் அதிகரிக்கும். சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகமும் உண்டு. அடுத்த நான்கு மாதங்கள் நிம்மதியாக இருப்பீர்கள்.

இந்த ராசிக்கார நண்பர்கள் ஜூன் 15 வரை பொறுத்துக் கொள்ளுங்கள் நல்ல காலம் தேடி வருகிறது 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்