அட்ரா சக்க சனி பெயர்ச்சியால் 2025 வரை அமோகமான வாழ்க்கை வாழப்போகும் ராசிக்காரர்கள்..!

Advertisement

Sani Peyarchi 2023 to 2025 Palangal

ஆன்மீகத்தை பொறுத்தவரை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்பு ஆனது இருக்கும். அப்படி பார்க்கையில் சனி பெயர்ச்சி, செவ்வாய் பெயர்ச்சி மற்றும் குரு பெயர்ச்சி என இத்தகைய பெயர்ச்சிகள் நடக்கும் போது ஒவ்வொருவருக்கும் எதிர்பார்ப்பு நிறைந்த பயம் ஆனது காணப்படும். ஏனென்றால் நம்முடைய ராசிக்கு இத்தகைய பெயர்ச்சி எப்படிப்பட்ட பலன்களை அளிக்கப்போகிறது என்ற குழப்பமானது இருந்து கொண்டே இருக்கும். இவ்வாறு எதிர்பார்த்து கொண்டிருப்பவர்களுக்கு ஏற்ற மாதிரியான ஒரு தகவலை தான் பார்க்கப்போகிறோம். அதாவது சனி பகவான் தற்போது கும்ப ராசியில் பெயர்ச்சி அடைந்து இருக்கிறார். அந்த வகையில் சனி பகவான் அடுத்த மாதம் நவம்பர் முதல் கும்ப ராசியிலேயே வக்ர நிலையை அடைய உள்ளார். அதுவும் 2025 வரை கும்ப ராசியிலேயே வக்ர நிலையை அடைய உள்ளார். இத்தகைய வக்ர நிலை காரணமாக 2023 முதல் 2025 வரை அதிர்ஷ்டத்தை பெற்று அமோகமாக வாழப்போகும் ராசிக்கார்கள் யாரென்று தான் பார்க்கப்போகிறோம்.

தீபாவளிக்கு முன் ராகு கேது பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிக்காரர்கள் 

சனி பெயர்ச்சி பலன்கள் 2023:

கும்ப ராசி:

கும்பம் ராசி

கும்ப ராசியில் சனி பகவான் தற்போது பெயர்ச்சி அடைந்து இருந்தாலும் கூட கும்ப ராசிக்கு அமோகமான பலன்களே சனி பகவான் அளிக்கிறார். இதுநாள் வரையிலும் நிலுவையில் இருந்த செயல்கள் அனைத்தும் நல்ல நிலையில் முடியும். மேலும் குடும்பத்தில் மகிழ்ச்சியும், ஒற்றுமையும் அதிகரிக்கும்.

பொருளாதார நிலையை பொறுத்தவரை முன்பை விட இனி வரும் காலங்களில் முன்னேற்றம் அதிகமாக காணப்படும். மேலும் தொழில் மற்றும் வியாபாரத்தில் வெற்றி அளிக்கும் விதமாக அமையும். மேலும் செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றியில் முடியும்.

துலாம் ராசி:

துலாம் ராசிசனி பகவானின் இத்தகைய பெயர்ச்சி காரணமாக துலாம் ராசிக்கார்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கிறது. மேலும் ஆரோக்கியம் முன்பை விட தற்போது அதிகரித்து காணப்படும்.

 

 

அதேபோல் பணியிடத்தில் பாராட்டுகள் மற்றும் புதிய வேலைவாய்ப்புகள் தேடி வரும் அதிர்ஷ்டம் இருக்கிறது. நீங்கள் நினைத்த செயல்கள் அனைத்தும் விரைவில் நடக்கும் பலன்களாகவும், அதில் வெற்றி கிடைக்கும் வாயிலாகவும் இருக்கிறது. நிதிநிலை நீங்கள் எதிர்பார்த்த மாதிரியானதாக அமையும்.

மிதுன ராசி:

மிதுன ராசி

மிதுன ராசியை பொறுத்தவரை தற்போது உள்ள நிலையானது முற்றிலும் வேறுபட்ட ஒன்றாக இருக்கும். முக்கியமாக பொருளாதார நிலையில் இருந்த கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி மகிழ்ச்சி அளிக்கும் விதமாக சனி பகவான் உங்களுக்கு பலனை தருகிறார்.

மேலும் குடும்பத்தில் உள்ளவர்களின் ரீதியாகவும், பிள்ளைகளின் வழியாகவும் சந்தோசமானது அதிகரித்து காணப்படும். அதேபோல் புதிய வீடு மற்றும் நிலம் வாங்கும் வாய்ப்புகளும் மிதுன ராசிக்காரர்களுக்கு அதிகமாக இருக்கிறது.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement