சனி பெயர்ச்சி 2024
ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகங்களின் பெயர்ச்சி நிலையை பொறுத்தே 12 ராசிகளின் பலன்களும் கூறப்படுகிறது. ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தனது ராசியினை மாற்றிக்கொண்டே இருக்கும். இதனால் 12 ராசிகாரர்களின் வாழக்கையில் பல மாற்றங்கள் ஏற்படும். கிரகங்களின் ராசி மாற்றம் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு பலன்களை அளிக்கும். எனவே, அந்த வகையில் வாழ்க்கையில் மாற்றங்களை கொண்டு வரும் சனி 2024-ல் பதினோராம் வீட்டில் நுழைவதால் அனைத்து ராசிக்காரர்களும் பலன் அடைவார்கள். அதிலும் குறிப்பாக 3 ராசிக்காரர்களுக்கு அதிஷ்டம் காத்துக்கொண்டுள்ளது. அந்த அதிர்ஷ்டமான 3 ராசிக்காரர்கள் யார் என்பதை பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
சனி பெயர்ச்சியால் நன்மைகளை சந்திக்க போகும் ராசிகள்:
ரிஷபம்:
2024-ல் பதினோராம் வீட்டில் சனி பகவான் நுழைவதால் ரிஷிப ராசிக்கு இந்தசனி பெயர்ச்சி அதிர்ஷ்டத்தை அள்ளிதர போகிறது. ரிஷிப ராசியில் சனி செல்வ வீட்டில் அமர்ந்து அதன் வீடாக இருக்கிறார். அதனால் இந்த ராசிக்காரர்கள் எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றி பெறுவார்கள். அதுபோல இந்த நேரத்தில் உங்களுக்கு பணவரவு அதிகாமாக இருக்கும். மேலும் வெளிநாடு செல்ல வேண்டும் என்று நினைப்பவர்களின் ஆசை நிறைவேறும்.
மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு சனி பகவானின் பெயர்ச்சி நல்ல பலன்களை தரப்போகிறது. மேஷ ராசிக்காரர்கள் ஜாதகத்தில் கேந்திர திரிகோண ராஜயோகத்தை தரும் நன்மையான இடத்தில் சனி பகவான் அமர்ந்துள்ளார். அதனால் இந்த ராசியில் பிறந்தவர்களின் தொழிலில் முன்னேற்றம் காணப்படும். பதவி உயர்வு ஏற்படும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது. அதுபோல உங்களுடைய பழைய முதலீடுகளில் இருந்து லாபம் கிடைக்கும். மேலும் 2024-ல் நீங்கள் எந்த புதிய வேலையை தொடங்கினாலும் அது வெற்றிபெறும்.
கன்னி:
சனி பகவான் பதினோராம் வீட்டில் சஞ்சரிப்பதால் கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு பல நன்மைகளை அள்ளித்தர போகிறது. உங்கள் ஜாதகத்தில் அதிர்ஷ்டம், மகிழ்ச்சியின் அதிபதியான சனி பகவான் அமர்ந்திருக்கிறார். எனவே, உங்கள் தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும். மேலும் பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்பு உண்டு. வேலை இல்லாதவர்களுக்கு அரசு வேலை வாய்ப்புகள் தேடிவரும். இந்த நேரத்தில் நீங்கள் தொடங்கும் அனைத்திலும் லாபம் கிடைக்கும்.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |