சனிப்பெயர்ச்சி 2025
ஆன்மிகத்தில் கிரக பெயர்ச்சி என்பது முக்க்கியமான ஒன்றாக இருக்கிறது. இந்த கிரக பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் படுகிறது. எல்லா ராசிகளுக்கும் கிரக பெயர்ச்சியால் நன்மைகள் இருந்தாலும் சில ராசிகளுக்கு மட்டும் தான் அதிக நன்மைகளை வழங்குகிறது. சனி பகவான் இந்த ஆண்டு ஜனவரி மாதம் கும்ப ராசியில் சஞ்சரித்தார். இவர் மார்ச் 29, 2025 வரை சனி இந்த ராசியில் இருப்பார். இத்தகைய சூழ்நிலையில், மார்ச் 2025 வரை, சில ராசிகளில் சனி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். அப்படி பாதிக்கப்படும் ராசிகள் என்று இந்த பதிவை முழுமையாக படித்து தெரிந்து கொள்ளவும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்கள் எந்த விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டும். அலுவலகம் அல்லது வெளியில் வேலை பார்ப்பவர்களுக்கு இந்த கால கட்டமானது அதிக மன அழுத்தத்தை கொடுக்கும். அதனை எல்லாம் சமாளித்து தான் வர வேண்டியிருக்கும்.
உடல் ஆரோக்கியத்தில் பிரச்சனை ஏற்படும், அதனால் அப்போது மனம் தளராமல் தைரியமாக இருக்க வேண்டும். சிறியதாக உடல் ஆரோக்கியத்தில் ஏதும் பிரச்சனை ஏற்பட்டாலும் அதனை அலட்சியம் செய்யாமல் உடனே பார்க்க வேண்டும். உங்கள் பெற்றோர்களை கவனமாக பார்த்து கொள்ள வேண்டும்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த காலம் கட்டமானது நன்மை மற்றும் தீமை என இரண்டுமே கலந்து காணப்படும். நீங்கள் நீண்ட காலமாக உங்கள் வாழ்க்கையில் இழப்பை மட்டும் தான் சந்திக்கிறீர்கள் என்றால் உங்களின் நிலைமை மாறும்.
உங்களின் பெற்றோர்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். திருமணம் ஆகாதவர்களுக்கு இந்த கால கட்டத்தில் வர்ணங்களை தீவிரமாக பார்க்க வேண்டும். முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும்.
இந்த ராசிக்காரர்களுக்கு கஜகேசரி ராஜயோகத்தால் பணமழை தான்
மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு 2025-ம் ஆண்டு வரைக்கும் உடல் ஆரோக்கியத்தில் பிரச்சனை ஏற்பட்டு கொண்டே இருக்கும். மேலும் நெனெகல் செய்ய கூடிய செயல்கள் அனைத்திலும் வெற்றியை பார்க்க முடியாது. தோல்வியே சந்திக்க நேரிடும்.
குடும்பத்தில் சண்டைகள் ஏற்படலாம். அதனால் அவ்வப்போது விட்டு கொடுத்து செல்ல வேண்டும். சண்டையினால் மன அழுத்தத்திற்கு ஆளாகுவீர்கள்.
கடகம்:
கடக ராசிக்காரர்கள் வரும் நாட்களில் மன அழுத்தத்திற்கு ஆளாகுவீர்கள். பணியிடத்தில் அதிக வேலை இருப்பதால் குறித்த நேரத்தில் வேலைகளை முடிக்க முடியாமல் கஷ்டப்படுவீர்கள்.
எந்த செயலையும் பொறுமையாக செய்ய வேண்டும், வீட்டில் உள்ளவர்களுடன் விட்டு கொடுத்து செல்ல வேண்டும்.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |