Sani Peyarchi and Ragu Ketu Peyarchi Palangal in Tamil
நமது ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்களின் இயக்கத்தினால் தான் மனிதர்களின் வாழ்க்கை இயங்கி கொண்டிருக்கின்றது. அதிலும் குறிப்பாக இந்த சனி மற்றும் ராகு – கேது ஆகிய மூன்று கிரகங்களின் பெயர்ச்சி என்பது நமது வாழ்க்கையில் பலவகையான மாற்றங்களை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. இந்த மூன்று கிரகங்களும் ஒருவரின் ஜாதகத்தில் சரியாக இருந்தால் அவரின் வாழ்க்கை அமோகமாக இருக்கும் என்றும், மாறாக இந்த மூன்று கிரகங்களும் ஒருவரின் ஜாதகத்தில் சரியான நிலையில் இல்லை என்றால் அவர் தனது வாழ்க்கையில் மிகவும் கஷ்டங்களை அடைவர் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் சனி மற்றும் ராகு – கேது ஆகிய மூன்று கிரகங்களும் வக்ர பெயர்ச்சி அடைந்துள்ளன. இந்த பெயர்ச்சியால் ஒரு சில ராசிக்காரர்கள் 6 மாத காலத்திற்கு தங்களின் வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட போகிறார்கள். அந்த ராசிக்காரர்கள் யார் யார் என்றும் அவர்களுக்கு எந்த மாதிரியான பிரச்சனைகள் வந்து சேரும் என்பதை பற்றியும் இன்றைய பதிவில் விரிவாக காணலாம் வாங்க..
சனி, ராகு – கேது வக்ர பெயர்ச்சியால் வாழ்க்கையில் கஷ்டத்தை அனுபவிக்க போகும் 3 ராசிக்காரர்கள்:
கடக ராசி:
கடக ராசிக்காரர்களுக்கு இந்த சனி, ராகு – கேது வக்ர பெயர்ச்சியால் தங்களின் வாழ்க்கையில் இந்த 6 மாத காலகட்டத்திற்கு பலவகையான எதிர்மறையான பலன்களை அனுபவிப்பீர்கள்.
இந்த காலகட்டத்தில் உங்களின் மனஅழுத்தம் மற்றும் கவலைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்நேரங்களில் எதிர்பாராத பல செலவுகள் ஏற்படும். இதனால் உங்களுக்கு பொருளாதார பிரச்சனை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. உடல்நலத்தில் மிகுந்த கவனம் தேவை.
உங்க வீட்டில் என்றும் செல்வம் நிலைக்க இந்த ஒரு பொருள் போதும்
சிம்ம ராசி:
இந்த சனி, ராகு – கேது வக்ர பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்களின் வாழ்க்கையில் இதுவரை கண்டிடாத பல மோசமான விளைவுகளை சந்திப்பீர்கள். அதாவது இந்த காலகட்டத்தில் உங்களுக்கு அதிக அளவு நிதி சிக்கல்கள் ஏற்படும் வாய்ப்புள்ளது.
மேலும் தொழில் மற்றும் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் அவப்பெயர் உண்டாகும் வாய்ப்புள்ளது. அதனால் மிக மிக கவனமாக செயல்பட வேண்டும். மேலும் குடும்ப சுழலும் மோசமாக இருக்கும்.
விருச்சிக ராசி:
இந்த 6 மாத காலகட்டத்தில் விருச்சிக ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்காது. பலவகையான இழப்புகளை சந்திக்க நேரலாம். அதனால் நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் மிக மிக கவனமாக பார்த்து பார்த்து எடுத்து வைக்க வேண்டும்.
இந்த காலகட்டத்தில் தோல்விகளை சந்திக்க நேரிடும் என்பதால் புதிய தொழில் அல்லது திட்டங்களை தொடங்குவதை தவிர்க்க வேண்டும். ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் தேவை.
ஆண்டியையும் அரசனாக்கும் புத-ஆதித்ய யோகத்தால் அரசனாக போகும் ராசிக்காரர்கள் இவர்கள் தான்
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |