October 23 Sani Peyarchi
பொதுவாக ஆன்மீகத்தை பொறுத்தவரை கிரங்களின் மாற்றம் ஆனது எந்த ராசியில் மாறப்போகிறது என்பதற்கு அதிகப்படியான முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. அப்படி பார்க்கையில் சனி பெயர்ச்சியாக இருந்தாலும் சரி, சனி பகவான் வக்ர நிலையில் இருந்தாலும் சரி அதற்கான பலன்கள் என்பது வெவ்வேறு முறையில் தான் அமைகிறது. அதேபோல் சனி பகவான் பெயர்ச்சி அடையும் ராசியை விட சனி பகவான் பார்வையிடும் ராசிக்கு நல்ல பலன்கள் கிடைக்கும் என்று கூறுவார்கள். அந்த வகையில் சனி பகவான் தற்போது அக்டோபர் 15-ஆம் தேதி முதல் நட்சத்திர பெயர்ச்சி அடைந்து அதன் பிறகு நவம்பர் மாதம் 4-ஆம் தேதிக்கு பிறகு கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடைய உள்ளார். இந்த பெயர்ச்சியினால் எந்த ராசிக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்பதை பார்க்கலாம் வாங்க..!
தீபாவளிக்கு முன் ராகு கேது பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிக்காரர்கள்
சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள் 2023:
ரிஷப ராசி:
சனி நட்சத்திர பெயர்ச்சியை பொறுத்தவரை ரிஷப ராசிக்காரர்களுக்கு அமோகமான வாய்ப்புகளை அளிக்கும் விதமாக பலன்கள் அனைத்தும் அமையும். மேலும் பொருளாதார நிலை ஆனது சிறப்பான ஒன்றாக காணப்படும். அதேபோல் தொழில் மற்றும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் மற்றும் வளர்ச்சி ஆனது இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும் நிலையில் செயல்கள் காணப்படும்.
கன்னி ராசி:
கன்னி ராசி ராசிக்காரர்களுக்கு சனி பகவானின் இத்தகைய நட்சத்திர பெயர்ச்சி ஆனது மகிழ்ச்சி அளிக்கும் விதமாக பலன்கள் அனைத்தும் அமையும். அதேபோல் இதுநாள் வரையிலும் இல்லாத லாபமானது வியாபாரத்தில் இருக்கும். மேலும் வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு, பாராட்டுகள் என இவற்றை கிடைக்கும் வாய்ப்புகளும் உள்ளது.
மேஷ ராசி:
மேஷ ராசிக்காரர்களை பொறுத்தவரை ஆரோக்கியம் மற்றும் பொருளாதார நிலை என இவை இரண்டும் மேம்படும். அதேபோல் நீண்ட நாட்களாக இழுவையில் இருந்த பண பிரச்சனைகள் அனைத்தும் சுமுகமான நீங்கள் எதிர்பார்த்த அளவிற்கு காணப்படும். மேலும் மகிழ்ச்சி ஆனது உங்களுக்கும், குடும்பத்தில் உள்ளவர்களுக்கு நிலைத்து நிற்கும் ஒன்றாக காணப்படுகிறது.
மிதுன ராசி:
ராசியில் 3-வது ராசியாகிய மிதுன ராசிக்கார்களுக்கு சனி நட்சத்திர பெயர்ச்சி எதிர்பார்க்காத அளவிற்கு நல்ல பலன்களை அளிக்கும் விதமாக இருக்கிறது. மேலும் புதிய வீடு மற்றும் வாகனம் வாங்கும் வாய்ப்புகளும் அதிகமாக இருக்கிறது.
அதேபோல் நிதிநிலை எந்த விதமான பிரச்சனையும் இல்லாமல் சிறப்பானதாக காணப்படும். மேலும் தொழில் மற்றும் வியாபாரம் லாபம் அளிக்கும் விதமாக இருக்கும்.
தனுசு ராசி:
இந்த ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் ஒற்றுமை அதிகரித்து காணப்படும். மேலும் அலுவலகத்தில் உங்களுக்கான அங்கீகாரம் மற்றும் பாராட்டுகள், ஊதிய உயர்வு என இவை அனைத்தும் நல்ல முறையில் கிடைக்கும். மேலும் நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனைகள் அனைத்தும் விலகி மன அமைதி ஏற்படும். இந்த நேரத்தில் ஆன்மீக வழிபாடு ஆனது சிறப்பானதாக காணப்படும்.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |