இந்த 2022-யின் நடைபெறும் சனி பெயர்ச்சியில் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்?
ஆன்மீக நண்பர்களுக்கு அன்பான வணக்கங்கள்.. 30 வருடங்களுக்கு பின் சனி பகவான்.. இந்த காலகட்டத்தில் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதை பற்றி தான் இந்த பதிவில் நாம் படித்து தெரிந்து கொள்ளப்போகிறோம். சரி வாங்க வரும் ஏப்ரல் 29 நடைபெறும் சனி பெயர்ச்சியினால் எந்த ராசிக்காரர்கள் கவனாக இருக்க வேண்டும் என்பதை பற்றி இப்பொழுது நாம் தெளிவாக படித்தறியலாம்.
சனி பெயர்ச்சி 2022 – Sani Peyarchi Palangal 2022:
ஜோதிடத்தில், சனி ஒரு முக்கியமான கிரகமாக கருதப்படுகிறது. சனி தேவனின் கோபத்திற்கு ஆளானால், வாழ்க்கையில் ஒன்றன் பின் ஒன்றாக கஷ்டங்கள் வரும் என்று நம்பப்படுகிறது.
சனி பகவான் ராசியை மாற்றும் போதெல்லாம், அது ஒரு நபரின் வாழ்க்கையை நேரடியாக பாதிக்கிறது. சனி தேவன் 29 ஏப்ரல் 2022 அன்று ராசியை மாற்றப் போகிறார். இந்த ராசி மாற்றத்தின் போது சனிபகவான் கும்ப ராசிக்குள் நுழைவார். சனி தேவன் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்த ராசியில் சஞ்சரிப்பார். எந்தெந்த ராசிக்காரர்களுக்கு இந்த சனி மாற்றம் சிறப்பாக அமையப் போகிறது என்பதை தெரிந்து கொள்வோம்.
ரிஷபம்:
sani peyarchi palangal 2022 – இந்த சனி பெயர்ச்சியினால் வேலை, வியாபாரத்தில் முன்னேற்றகரமானதாக இருக்கும். மேலும், கடினமாக உழைத்து வேலை தேடுபவர்கள், கடின உழைப்பின் பலனைப் பெறுவார்கள், ஏனென்றால் கடினமாக உழைப்பவர்களை சனி தேவன் என்றென்றும் கைவிடுவதில்லை. இருப்பினும், காதல் வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏற்படலாம் என்பதால் உங்கள் காதல் விஷயத்தில் கவனமாக இருப்பது மிகவும்நல்லது .
கடகம்:
சனியின் ராசி மாற்றத்தினால் கடக ராசிக்காரர்கள் சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இதனுடன், ஆரோக்கியம் மற்றும் திருமண வாழ்க்கையும் பாதிக்கப்படலாம். இது தவிர, பெயர்ச்சி காலத்தில் செலவுகளும் அதிகரிக்கும். எனவே, சிறப்பு கவனம் தேவை.
மீனம்:
sani peyarchi palangal 2022 – சனியின் ராசி மாற்றத்தால் மீனத்தில் ஏழரை நாட்டு சனி தொடங்கும். சனியின் இந்த சஞ்சாரம் சவால்கள் நிறைந்ததாக இருக்கும். கடனால் சிரமப்படுவீர்கள். எந்தவொரு துறையிலும் வெற்றி பெற, நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும். மன உளைச்சல் இருக்கலாம். மேலும், குழந்தையைப் பற்றிய கவலையும் இருக்கும். ஆரோக்கியத்திலும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக பணம் விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |