சனி பிரதோஷத்தினால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரியுமா..?

Advertisement

Sani Pradosham Benefits 

ஆன்மீகத்தை பொறுத்தவரை அமாவாசை, பௌர்ணமி, கார்த்திகை, பிரதோஷம் மற்றும் சஷ்டி ஆகிய நாட்கள் மிகவும் சிறப்புமிக்க நாட்களாக கருதப்படுகிறது. அந்த வகையில் பார்த்தால் இவற்றை எல்லாம் விட சனி பிரதோஷம் ஆனது எண்ணற்ற நன்மைகளை கொண்டுள்ள ஒரு நாளாக கருதப்படுகிறது. இன்றளவுவிலும் கூட நிறைய நபர் பிரதோஷத்தன்று விரதம் இருந்து சிவபெருமானை வணங்கி வருகிறார்கள். இத்தகைய முறையில் ஆன்மீக வழிபாட்டினை செய்து வந்தாலும் கூட சனி பிரதோஷத்தின் சிறப்பு பற்றியும், அதில் உள்ள நன்மைகள் பற்றியும் சரியாக தெரிவது இல்லை. அதனால் இன்று சனி பிரதோஷம் என்றால் என்ன, அதனால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன என்பது பற்றியும் தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.

செல்வ செழிப்பை அதிகப்படுத்துவதற்கு 5 வெற்றிலை மட்டும் போதும்..

சனி பிரதோஷம் என்றால் என்ன..?

மாதம் தோறும் வரும் தேய்பிறை மற்றும் வளர்பிறை திரையோதசி நாட்களில் மாலை 4:30 PM முதல் 6:00 PM வரும் நேரத்தினை பிரதோஷ காலம் என்று கூறுவார்கள். இவ்வாறு கூறும் பட்சத்தில் இந்த மாலை நேரத்தில் அதுவும் சனிக்கிழமையில் தான் சிவ பெருமான் ஆலகால விஷத்தை உண்டு அகிலத்தை காத்ததாக கூறப்படுகிறது. இப்படிப்பட்ட  திரையோதசி நாட்கள் மற்ற கிழமைகளில் வராமல் சனிக் கிழமையில் மட்டும் வருவதே சனி மஹாப்பிரதோஷம் எனப்படும்.

அதேபோல் சனி பிரதோஷத்தின் அன்று சனி பெயர்ச்சி உள்ளவர்கள் சிவ பெருமானை வழிபடுவது மிகவும் நன்மைக்குரிய ஒன்றாக உள்ளது. மேலும் இத்தகைய நாட்களில் சிவ பெருமானுக்கு சனீஸ்வரன் மீது அதிகப்படியான செல்வாக்கு ஏற்படும் என்றும் கூறுவார்கள்.

சனி பிரதோஷ வழிபாடு:

சனி பிரதோஷம் என்றால் என்ன

சனி பிரதோஷத்தன்று காலையில் இருந்து மாலை நேரம் வரை எதுவும் சாப்பிடாமல் விரதம் இருக்க வேண்டும். அதன் பிறகு மாலை நேரங்களில் பிரதோஷ தரிசனம் செய்தால் நினைத்த காரியம் விரைவில் கைக்கூடும் என்பது ஒரு ஐதீகமாக உள்ளது.

அதேபோல் பிரதோஷ நாட்களின் போது ஒவ்வொரு விதமான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்வதன் மூலம் நமக்கு நிறைய நன்மைகள் கிடைத்து பாவங்கள் அனைத்தும் விலகும் என்றும் ஆன்மீகத்தில் சொல்லப்படுகிறது.

பிரதோஷ வழிபாடு நன்மைகள்:

பொருட்கள்  நன்மைகள் 
தயிர் நல்ல குழந்தையினை தரும்
நெய் வாழ்வில் மோட்சத்தினை அளிக்கும்
அரிசி மாவு கடன் தொல்லை நீங்கும்
தேங்காய் மகிழ்ச்சியினை அளிக்கும்
எலுமிச்சை மரணத்தின் மீதான பயத்தினை நீங்கச் செய்கிறது.
சர்க்கரை பகையினை நீங்கச் செய்யும்
தேன் இனிமைமிக்க குரல் வலத்தினை அளிக்கிறது
சந்தனம் லட்சுமி தேவியின் அருளை தரும்
பஞ்சாமிருதம் செல்வத்தை அளிக்கும்
சமையல் செய்த அரிசி கம்பீரமிக்க வாழ்க்கையினை அளிக்கிறது

 

வீட்டில் செல்வம் செழிக்க எளிமையான கல் உப்பு பரிகாரம்..

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement