சனி ராகு சேர்க்கை
சனி பகவான் ராகுவின் அதிபதியான சதய நட்சத்திரத்தை அடைந்துள்ளார். இவர் இதிலையே அக்டோபர் 17 வரை இருப்பார். ஆன்மிகத்தில் சனி பகவான் மிக முக்கியமாக கருதப்படுகிறது. ராகு பகவான் ஆபத்தான கிரகமாக இருக்கிறார். இந்த வரிசையில், சனி தேவன் ராகுவின் அதிபதியான சதய நட்சத்திரத்தை அடைந்தார். இந்த காலகட்டத்தில், சனி தேவன் அக்டோபர் 17 வரை சஞ்சரிக்கிறார். அப்படிப்பட்ட நிலையில் சனி, ராகு இணைவது இந்த 5 ராசிக்காரர்களின் வாழ்வில் ஏற்ற இறக்கத்தை ஏற்படுத்தும். மேலும், இந்த ராசிக்காரர்கள் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். அவை எந்தெந்த ராசிகள் என்று இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம்.
மீன ராசி:
சனி மற்றும் ராகுவின் சேர்க்கை மீனா ராசிக்காரர்களுக்கு கஷ்டத்தை ஏற்படுத்தும். உங்களின் துணையுடன் விட்டு கொடுத்து செல்ல வேண்டும். உங்கள் வீட்டில் உள்ள பொருட்களை கவனமாக பார்த்து கொள்ள வேண்டும். ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். சீக்கிரம் செரிமான அடைய கூடிய உணவுகளை உட்கொள்வது நல்லது.
கும்ப ராசி:
கும்ப ராசிக்காரர்களுக்கு சனி ராகு சேர்க்கை பல பிரச்சனைகளை வாழ்க்கையில் ஏற்படுத்தும். உடல் ஆரோக்கியத்தில் பிரச்சனையை ஏற்படுத்தும். மருத்துவ செலவிற்காக பணம் செலவு செய்ய வேண்டியிருக்கும். உங்களின் துணையுடன் சண்டை ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் இருவரும் பிரிவதற்கு கூட வாய்ப்புகள் இருக்கிறது. அதனால் சண்டையின் போது விட்டு கொடுத்து செல்வது நல்லது. அப்போது தான் உறவை தக்க வைத்து கொள்ள முடியும்.
2024-ல் ரிஷபத்தில் நுழையும் குருவால் இந்த ராசிக்காரர்களுக்கு இனி அமோகமான வாழ்க்கை தான்
விருச்சிக ராசி:
சனி மற்றும் ராகு சேர்க்கை விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஏற்றம்இறக்கம் நிறைந்ததாக இருக்கும். உங்களின் முன்னோர்களின் சொத்தில் ஏதும் பிரச்சனை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. பணத்தை பார்த்து செலவு செய்ய வேண்டும். அனாவசியமான செலவுகள் செய்வதை தவிர்க்க வேண்டும். நீங்கள் வெளியில் செல்லலும் போது கவனமாக சென்று வர வேண்டும். அது போல வாகனம் ஓட்டும் போது கவனமாக ஓட்ட வேண்டும்.
கன்னி ராசி:
சனி மற்றும் ராகு சேர்க்கை கன்னி ராசிக்காரர்களுக்கு ஆபத்தாக இருக்கிறது. வெளியில் கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும். நிதி சம்மந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக முடிவு எடுக்க வேண்டும். படிக்கும் மாணவர்கள் கல்வியில் கஷ்டங்களை சந்திக்க நேரிடும். இந்த நேரத்தில் நீங்கள் எந்த செயலை செய்தாலும் அதனை கவனமாக செய்ய வேண்டும்.
கடக ராசி:
கடக ராசிக்காரர்களுக்கு சனி பகவான் சதய நட்சத்திரத்தில் சஞ்சரிப்பது சாதகமாக இருக்காது. வாழ்க்கையானது ஏற்ற இறக்கத்துடன் காணப்படும். பண பற்றாக்குறை காணப்படும். இதனால் மன அழுத்தத்திற்கு ஆளாகுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் மனம் விட்டு பேச வேண்டும். இந்த நேரத்தில் நீங்கள் முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும்.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |