வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

மீனத்தில் சனியும் ராகுவும் சேர்வதால் இந்த 5 ராசிகளுக்கு கஷ்ட காலம் தான்.!

Updated On: February 20, 2025 2:43 PM
Follow Us:
Sani Rahu Serkai 2025 in Tamil
---Advertisement---
Advertisement

Sani Rahu Serkai 2025 in Tamil | சனி ராகு சேர்க்கை 2025

ஆன்மீக வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் இந்த ஆண்டு சனி இராகு சேர்க்கை எப்போது நடைபெறுகிறது.? எந்த ராசியில் நடைபெறுகிறது.? சனி ராகு சேர்க்கையினால் 12 ராசிகளில் எந்த ராசிக்கு கஷ்டகாலம் வரப்போகிறது என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம். மார்ச் 29 ஆம் தேதி அன்று, மீன ராசியில் சனி மற்றும் ராகுவின் சேர்க்கை நடைபெற இருக்கிறது. இந்த சேர்க்கை மார்ச் 29 முதல் மே 18 வரை நீடிக்கும்.

Sani Rahu Serkai in Pisces in Tamil – மார்ச் 29 முதல் மே 18 வரையிலான காலக்கட்டங்களில் 12 ராசிகளில் 5 ராசிகள் மட்டும் பாதகமான விளைவுகளை சந்திக்க நேரிடும். இந்த காலத்தில் இவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். எனவே, சனி ராகு சேர்க்கையினால் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் யார் யார் என்பதை பின்வருமாறு படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

Sani Rahu Serkai 2025 Dates Tamil:

 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் மீன ராசியில் சனி-ராகு சேர்க்கை நிகழும். மார்ச் 29 தொடங்கி மே 18 வரை மீன ராசியில் சனி-ராகு சேர்க்கை இருக்கும். சனி கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். மீன ராசியில் ஏற்கனவே ராகு இருக்கிறார் . எனவே, மார்ச் 29 ஆம் தேதி இரவு 11:01 PM மணிக்கு, சனியும் ராகுவும் மீன ராசியில் இணைந்து மே 18 அன்று மாலை 4:30 மணி வரை சேர்ந்து இருப்பார்கள். அதன் பிறகு, ராகு மீன ராசியை விட்டு வெளியேறி கும்ப ராசிக்குள் நுழைவார். இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். ஆனால், இந்த 5 ராசிக்கு மட்டும் மிகுந்த பாதிப்பினை ஏற்படுத்தக்கூடும்.  

60 ஆண்டுகளுக்கு பிறகு 2025 -ல் மகா சிவராத்திரியில் உருவாகும் யோகம். இந்த 3 ராசிக்கு இனி அதிர்ஷ்டம் மட்டுமே.!

கன்னி:

 sani rahu serkai 2025 in tamil

சனி ராகு சேர்க்கை கன்னி ராசிக்காரர்களுக்கு தேவையற்ற செலவுகளை ஏற்படுத்தி தரும். பொறுப்புகள் அதிகரிக்கும். இதனால் அதிக சசுமை உண்டாகும். நிதிநிலைமை மோசமடைய வாய்ப்புள்ளது. வரவை மீறிய செலவு உண்டாகும். உங்கள் முடிவுகள் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தி தரும். பணியிடம் மற்றும் தொழிலில் வேலை அதிகமாக இருக்கும். லாபம் என்பதே இருக்காது.

கடகம்:

 sani rahu serkai 2025 dates tamilகடக ராசிக்காரர்களுக்கு சனி ராகு சேர்க்கை உடல் நலத்தில் பாதிப்பினை ஏற்படுத்தக்கூடும். மேலும் தொழில் மற்றும் வியாபாரத்ததில் தாக்கத்தை ஏற்படத்தலாம். எனவே, தொழில் அதிக கவனம் தேவை. முக்கியமாக முதலீட்டு விஷயங்களில் அதிக கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் மற்றவர்களுடன் வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆக மார்ச் 29 முதல் மே 18 வரை கடக ராசிக்காரர்கள் அனைத்திலும் கவனமாக இருக்க வேண்டும்.

கும்பம்:

 சனி ராகு சேர்க்கை 2025

கும்ப ராசிக்காரர்களுக்கு சனி ராகு சேர்க்கை ஆனது, உங்கள் மதிப்பையும் மரியாதையும் இழக்க செய்யலாம். ஆகையால், இக்காலத்தில் உங்கள் நடத்தை மற்றும் வார்த்தைகளை குறைத்துக்கொள்வது நல்லது. சனி ராகு சேர்க்கை உங்களின் குடும்பம் மற்றும் வேலை, தொழில் போன்றவற்றில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தலாம். கணவன் மனைவி இடையே சண்டைகளும் வீண் விவாதங்களும் உண்டாகும். இக்காலத்தில் நீங்கள் சரியான முடிவை எடுக்க இயலாது.

மீனம்:

sani rahu serkai 2025 in tamil

மீன ராசியில் சனி ராகு சேர்க்கை நடைபெறுவதால், உங்கள் உடல் நலத்தில் பாதிப்புகள் ஏற்படக்கூடும். முக்கியமாக எலும்பு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படலாம். பணியிடத்தில் சில ஏமாற்றங்களை சந்திக்க நேரிடும். செலவுகள் அதிகமாக இருக்கும். சேமிப்பு குறையும். சனி ராகு சேர்க்கை உங்களை அதிகம் பாதிக்காமல் இருக்க சிவபெருமானை வழிபடுங்கள்.

விருச்சிகம்:

sani rahu serkai in pisces in tamil 2025

சனி ராகு சேர்க்கை விருச்சிக ராசிக்காரர்களுக்கு குடும்ப உறவுகளில் சில பிரச்னைகளை ஏற்படுத்தலாம். முக்கியமாக வாழ்கை துணையுடன் வாக்குவாதங்கள் உண்டாகும். துணையுடன் தேவையற்ற பேச்சுக்களை தவிர்க்க வேண்டும். வெளியில் செல்லும்போது கவனம் தேவை. குறிப்பாக வாகனத்தில் செல்லும்போது கூடுதல் கவனம் தேவை. ஆரோக்கியத்திலும் சில பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துங்கள்.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now