சனி மற்றும் சந்திரன் சேர்க்கை
சனி பகவான் ஒரு ராசியில் 2 1/2 ஆண்டுகள் பயணிக்க கூடியவர். ஒவ்வொரு கிரகங்களும் தங்களின் ராசியை மாற்றி கொள்ளும் போது ஒவ்வொரு பலனை ஏற்படுத்துவார்கள். தற்போது சனி பகவான் மீன ராசியில் பயணித்து வருகிறார். இதே நேரம் ஆகஸ்ட் 12-ம் தேதி சந்திரன் மீன ராசியில் பயணிக்க போகிறார். இந்த இரண்டு கிரகங்களின் சேர்க்கையால் மோசமான விஷ யோகம் உருவாகவுள்ளது. இந்த யோகத்தின் தாக்கமானது அனைத்து ராசிகளின் தாக்கம் இருந்தாலும் சில ராசிகளுக்கு மட்டும் வாழ்க்கையில் கஷ்டத்தை கொடுக்க போகிறது. அவை எந்தெந்த ராசிகள் என்று இந்த பதிவின் முழுமையாக பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.
மீனம்:
மீன ராசியில் முதல் வீட்டில் சனி மற்றும் சந்திரனின் சேர்க்கையானது நிகழ்கிறது. இதனால் நீங்கள் அலுவலகத்தில் வேலை பார்த்து கொண்டிருந்தால் உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்காது. திருமணம் ஆனவர்களுக்கு துணையிடம் பிரச்சனை ஏற்படக்கூடும். இந்த நேரத்தில் யாருடனும் வாக்குவாதத்தில் ஈடுபடாதீர்கள். பொறுமையாகவும், அமைதியாகவும் பேச வேண்டும். நீங்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டால் அவர்களுடன் நல்லுறவை பராமரிக்க முடியாது. உங்களுடைய எந்த செயலுக்கும் யாரும் பக்க பலமாக இருக்க மாட்டார்கள். இதனால் தனிமையில் இருப்பது போல் உணருவீர்கள். ஆரோக்கியத்தில் தீராத பிரச்சனை வரக்கூடும்.
சிம்மம்:
சனி பகவான் சந்திரனின் சேர்க்கையானது சிம்ம ராசியில் 8-வது வீட்டில் உருவாகவுள்ளது. இந்த நேரத்தில் அலுவலகத்தில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். உங்களின் பணிகளை குறித்த நேரத்தில் முடிக்க முடியாது. இதனால் மேல் அதிகாரிகள் உங்களை கண்டிக்க நேரிடும். மேல் அதிகாரிகளுடன் சண்டை ஏற்பட வாய்ப்புள்ளது. பணத்தை கவனமாக கையாள வேண்டும். ஏனென்றால் பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. அதுமட்டுமில்லாமல் விலை உயர்ந்த பொருட்களை கவனமாக வைத்து கொள்ள வேண்டும். மற்றவரை நம்பி விலை மதிப்புள்ள பொருள் மற்றும் பணத்தை கொடுக்காதீர்கள். ஆரோக்கியத்தில் பிரச்சனை ஏற்படும். இதனை அலட்சியம் செய்யாமல் தகுந்த மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும்.
500 ஆண்டுகளுக்கு பிறகு 4 கிரகங்கள் வக்ரமாவதால் அதிர்ஷ்ட கதவு திறக்க போகிறது
மேஷம்:
சனி மற்றும் சந்திரனின் சேர்க்கையானது மேஷ ராசியில் 12-வது வீட்டில் உருவாகவுள்ளது. இந்த நேரத்தில் நீங்கள் எந்த செயல் செய்தாலும் அதற்கு சாதகமான பலனை கொடுக்காது. பணியிடத்தில் பணிகளை குறித்த நேரத்தில் முடிக்க முடியாது. நீங்கள் பணியில் முழு கவனத்தை செலுத்த வேண்டும். ஏனென்றால் நீங்கள் செய்யாத தவறுக்கு உங்கள் மேல் பலி வரக்கூடும். இந்த நேரத்தில் அதிகமாக செலவு வரக்கூடும். உங்களின் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். நெருங்கிய உறவாக இருந்தால் கூட இந்த நேரத்தில் கடன் கொடுக்காதீர்கள். ஆரோக்கியத்தில் பிரச்சனை வரக்கூடும். இதனை மன அழுத்தத்திற்கு ஆளாகுவீர்கள்.
| இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |












