தீபாவளி முன் அதிர்ஷ்டம் அடிக்கும் ராசிகள்
இந்த நவம்பர் மாதமானது மிகவும் மங்களகரமான கிரகத்தின் பெயர்ச்சியாக இருக்கிறது. நவம்பர் 3 ஆம் தேதி, சுக்கிரன், சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்குள் சஞ்சரிக்கிறார். அடுத்து, நவம்பர் 4 2023 அன்று, சனி பகவான் தனது நிலையை மாற்றுகிறார். அவர் தற்போது, தனது சொந்த ராசியான கும்பத்தில் பிற்போக்கு நிலையில் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறார். நவம்பர் 4 முதல் நேர் திசையில் பயணத்தை தொடங்கவிருக்கும் சனி பகவான், பலருக்கும் நன்மையை வழங்குவார். சுக்கிர பெயர்ச்சியும், சனி பெயர்ச்சியும் ராசிகளில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இதனால் 4 ராசிகளுக்கு பண மழை பொழிய போகிறது, அவை எந்தெந்த ராசிகள் என்று இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம்.
4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை அடிக்க போகிறது
மகரம்:
சுக்கிரன் மற்றும் சனி சஞ்சாரம் மகர ராசிக்காரர்களுக்கு பெரிய மாற்றத்தை தர போகிறது. சனியின் தாக்கத்தால் உங்களுக்கு பண வந்து கொண்டே இருக்கும். அலுவலங்களில் வேலை பார்ப்பவர்களுக்கு பதிவு உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கும். உங்களின் முன்னோர்களின் சொத்துகளிலிருந்து லாபம் கிடைக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு இருதுவரை கிடைக்காத வகையில் லாபம் கிடைக்கும்.
மிதுனம்:
சுக்கிரன் மற்றும் சனி சஞ்சாரம் மிதுன ராசிக்காரர்களுக்கு நல்ல காலமாக இருக்கும். உங்களின் வேலையில் வெற்றியை அடைவதற்கு கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். உங்களின் வாழ்க்கையில் எதிர்பார்க்காத வகையில் பணவரவு இருக்கும். இதனால் எதிர்காலத்திற்காக பணத்தை முதலீடு செய்வீர்கள். சட்ட வழக்குகள் ஏதும் இருந்தால் அவை முடிவுக்கு வரும்.
இந்த பொருட்களை வைத்திருந்தால் சனியின் பார்வை பட்டு பணக்கஷ்டம் ஏற்படுமாம்..
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் மற்றும் சனி சஞ்சாரம் சாதகமாக இருக்கிறது. உங்களின் உழைப்பிற்கான பலன்கள் கிடைக்கும். நிதிநிலைமையில் முன்னேற்றம் காணப்படும். இதனால் முதலீடு செய்வீர்கள். உங்களின் முன்னேற்ற பாதையில் தடையாக இருந்த விஷயங்கள் நீங்கும் நேரமாக இருக்கிறது. திருமணம் ஆகாதவர்களுக்கு வரன்கள் அமையும்.
மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு நவம்பர் மாதம் சிறப்பானதாக இருக்கும். நீண்ட நாட்களாக கைக்கு வராமல் இருந்த தொகை கிடைக்கும். பணியில் புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும். இவர்களில் வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். செல்வ செழிப்புடன் வாழுவீர்கள்.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |