150 வருடங்களுக்கு பிறகு கிடைக்கும் ராஜ யோகம்
பொதுவாக ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகங்களும் தங்களின் ராசிகளை மாற்றி கொண்டே இருக்கும். அப்படி மாற்றும் போது அவர்களுக்கு நன்மைகளும் நடக்கும், தீமைகளும் நடக்கும். அதில் மார்ச் 15-ம் தேதி செவ்வாய் தனது ராசியை மாற்றி கும்ப ராசியில் பிரவேசித்து ஏப்ரல் 23-ம் தேதி வரை கும்ப ராசியில் இருப்பார்.
சனியும் சுக்கிரனும் ஏற்கனவே கும்ப ராசியில் உள்ளனர். இதன் காரணமாக கும்ப ராசியில் சனி, செவ்வாய், சுக்கிரன் சேர்க்கை உருவாகிறது. இந்த சேர்க்கையானது பலருக்கும் நன்மையை கொடுத்தாலும் சில ராசிகளுக்கு மட்டும் நன்மையை அள்ளி வழங்க போகிறது. அதனை பற்றி காண்போம் வாங்க..
தனுசு:
சனி பகவான், சுக்கிரன், செவ்வாய் இவை மூன்றும் இணைவது தனுசு ராசிகளுக்கு மிகுந்த பலனை அள்ளி தர போகிறது. இதனால் உங்களுக்கு எல்லா விதங்களிலும் சாதகமாக இருக்கும். மேலும் பணியிடத்தில் பதவி உயர்வு கிடைக்கும். காவல் துறை மற்றும் அரசியில் போன்ற துறைகளில் உள்ளவர்களுக்கு இந்த நேரம் சாதகமாக இருக்கும்.
பணவரவு அதிகமாக காணப்படும். இதனால் பணத்தை அதிகமாக சேமிப்பீர்கள். உங்களுடைய குடும்பத்தில் உள்ளவர்களிடம் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். வெளிவட்டாரத்தில் உங்களின் மதிப்பு அதிகரிக்கும்.
ரிஷபத்தில் குரு பெயர்ச்சி அடைவதால் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுகிறது..
கன்னி:
சனி பகவான், சுக்கிரன், செவ்வாய் இவை மூன்றும் இணைவது கன்னி ராசிகாரர்களுக்கு ஏற்றதாக இருக்கும். இந்த நேரத்தில் உங்களுக்கு ஏதும் கடன் ஏதும் இருந்தால் அவற்றில் இருந்து விடுபடுவீர்கள். இதனால் மன அமைதி அடைவீர்கள். பணியிடத்தில் உங்களின் செயலுக்கான அங்கீகாரம் கிடைக்கும். வண்டியில் செல்லும் போது கவனமாக செல்ல வேண்டும்.
மேஷம்:
இந்த பெயர்ச்சியானது மேஷ ராசிக்காரர்களுக்கு சிறப்பானதாக இருக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு எல்லா விதத்திலும் நன்மைகள் நடக்கும். தொழிலில் முன்னேற்றத்தை காண்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். இதனால் உங்களுடைய சேமிப்பை அதிகப்படுத்துவீர்கள். வெளியூரில் வேலை பார்ப்பவர்களுக்கு சாதகமாக இருக்கும்.
உங்களுக்கு ஏதும் ஆரோக்கியத்தில் பிரச்சனை இருந்தாலே அவை நீங்கும். குடும்பத்தில் சில பிரச்சனை ஏற்படும். இதனால் மன அழுத்தத்திற்கு ஆளாகுவீர்கள். ஆனால் கவலை அடைய தேவையில்லை. இந்த பிரச்சனையானது சரியாகிவிடும்.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |