Sani Udhayam Palangal 2024 Tamil
இந்த ஆண்டு தொடக்கம் முதல் இறுதி வரை என பல வகையான ஆன்மீக பலன்களை உங்களுடைய ராசி மற்றும் நட்சத்திற்கு ஏற்றவாறு பலன்களை பெற்று இருப்பீர்கள். அந்த வகையில் நன்மை அளிக்கும் விதமாக பலன்கள் வந்து இருந்தால் எந்த விதமான பிரச்சனையும் இருக்காது. அதுவே இவ்வாறு இல்லாமல் கஷ்டம் அளிக்கும் விதமாக பலன்கள் வந்து இருந்தால் அது நமக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாகவே இருக்கும். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் 2023-ஆம் ஆண்டு முடிவடைவதற்கு இன்னும் ஒரு மாதம் மட்டுமே இருக்கும் பட்சத்தில் அடுத்த ஆண்டு நமது ராசிக்கு என்ன மாதிரியான பலன்கள் இருக்கும் என்ற ஆர்வம் இருக்கும். இதன் படி பார்க்கையில் 2024-ஆம் ஆண்டில் சனி பகவானின் உதயத்தால் அதிர்ஷ்டமான பலனை பெறுவதோடு மட்டும் இல்லாமல் நிதிநிலை சிறப்பான பலன்களை பெறப்போகும் ராசிக்காரர்கள் யார் யாரென்று பார்க்கலாம் வாங்க..!
உதயமாகும் சனி பலன்கள் 2024:
2024-ஆம் ஆண்டில் மார்ச் மாதம் சனி பகவான் உதயம் ஆக இருக்கிறார். அந்த வகையில் இவ்வாறு உதயமாகும் சனி பகவானால் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் போய் சேரப்போகிறது என்று விரிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ரிஷிப ராசி:
சனி பகவானின் உதயமானது ரிஷிப ராசியினரை பொறுத்தவரை வெற்றி அளிக்கும் விதமான பலன்களே அளிக்கிறது. அதிலும் குறிப்பாக இதுநாள் வரையிலும் வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு விரைவில் வேலை கிடைக்கும். மேலும் தொழில் மற்றும் வியாபாரத்தில் வெற்றி அளிக்கும் விதமாக லாபம் மற்றும் வருமானம் என இரண்டும் அமையும்.
அதேபோல் நிதிநிலை மேலோங்கி காணப்படுவதனால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரித்து காணப்படும்.
துலாம் ராசி:
துலாம் ராசிக்காரர்களை பொறுத்தவரை இதுநாள் வரையிலும் இல்லாத பல சாதகமான பலன்கள் இருக்கும். மேலும் பொருளாதார நிலை மற்றும் பதவி உயர்வுகள் என இதுபோன்ற வெற்றிகள் அனைத்தும் இந்த சனி பகவான் உதயத்தால் உங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
குடும்பத்தில் ஒற்றுமையும், ஆரோக்கியமும் மேலோங்கி இருப்பதனால் மகிழ்ச்சி தானகவே கிடைக்கும்.
தனுசு ராசி:
வில் போன்ற அமைப்பினை கொண்ட தனுசு ராசிக்கார்களுக்கு மார்ச் முதல் கிடைக்கும் பலன்கள் அனைத்தும் சாதகமாவே அமையும். அதேபோல் வியாபாரத்தில் உங்களுடைய முதலீட்டை காட்டிலும் வருமானம் அதிகரிக்கும்.
மேலும் பணியிடத்தில் உங்களுக்கான அங்கீகாரம் சிறப்பானதாக அமையும். அதோடு மட்டும் இல்லாமல் இத்தகைய உதயம் உங்களது வேலையை சிறப்பாக மாற்றிக்கொடுக்கும் விதமாக உள்ளது.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |