Sani Vakra Nilai Palangal
ஆன்மீகத்தை பொறுத்தவரை சனி பெயர்ச்சி என்பது முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. இதன் படி பார்க்கும் போது சனி பகவான் அனைத்து ராசிகளுக்கும் என்ன மாதிரியான பலன்களை அளிக்கப்போகிறார் என்ற ஆர்வம் மற்றும் பயம் ஆனது அனைவருக்கும் இருக்கும். ஏனென்றால் சனி பகவான் பார்வையில் இருந்தோ, வக்ர நிலையில் இருந்தோ தப்பிக்க முடியாது என்று கூறுவார்கள். அதே சமயம் சனி பகவான் சில ராசிகளுக்கு வெற்றிகரமான பலன்களை அளித்து வாழ்க்கையில் முன்னேறவும் செய்வார். ஆகவே இன்று சனியின் வக்ர நிலை ஆனது ஜூன் மாதம் 17-ஆம் தேதி முதல் அக்டோபர் மாதம் 17-ஆம் தேதி வரை நீடிக்கிறது. இந்த நிலை காரணாமாக 2 விதமான யோகங்கள் உண்டாகி 12 ராசிகளில் 4 ராசிகளுக்கு மட்டும் வெற்றிகரமான பலன்கள் கிடைக்க உள்ளதாக ஆன்மீகத்தில் சொல்லப்படுகிறது. ஆகவே அது எந்தந்த ராசிகள் என்று விரிவாக தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்..!
சனி வக்ர நிலை:
மேஷ ராசி:
ராசியில் முதல் ராசியாகிய மேஷ ராசிக்காரர்களுக்கு சனியின் வக்ர நிலையானது சாதகமான பலன்களை அளிக்கும் வகையில் இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இதுநாள் வரையிலும் காணப்படாத நல்ல லாபம் இருக்கும். மேலும் பொருளாதார நிலை மேலோங்கி காணப்படும்.
அதேபோல் புதிய முயற்சிகள் வெற்றி அளித்து குடும்பத்தில் மகிழ்ச்சியினை ஏற்படுத்தும் என்று ஜோதிடத்தின் படி கூறப்படுகிறது.
சிம்ம ராசி:
இத்தகைய காலம் ஆனது சிம்ம ராசிக்காரர்களுக்கு எதிர்பார்த்தை விட மகிழ்ச்சியான பலன்களை அளிக்கும் விதமாக காணப்படுகிறது. பண வரவு அதிகமாக இருப்பதால் புதிய முதலீடுகள் செய்யும் வாய்ப்புகளும் உண்டாகும். மேலும் பணியிடத்தில் சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு போன்றவை உண்டாகும் வாய்ப்புகளும் இருக்கிறது.
செவ்வாய் பெயர்ச்சியால் இந்த ராசிக்காரர்களுக்கு வாழ்க்கை அமோகமாக மாற போகிறது.. |
ரிஷப ராசி:
சனியின் வக்ர நிலை ஆனது ரிஷப ராசிக்காரர்களுக்கு வெற்றிகரமான பலன்களை அளிக்கும் என்று ஆன்மீகத்தில் கூறப்படுகிறது. இதுநாள் வரையிலும் இல்லாத நல்ல முயற்சி ஆனது தொழில் மற்றும் வியாபாரத்தில் இருக்கும். மேலும் இதனால் நிதிநிலையும் உயரும்.
மேலும் குடும்பத்தில் ஒற்றுமை மற்றும் மகிழ்ச்சி நிலவும் நேரமாக இந்த வக்ர நிலையானது இருக்கிறது.
மிதுன ராசி:
மிதுன ராசிக்காரர்களுக்கு இத்தகைய காலம் ஆனது நல்ல முன்னேற்றத்தினை அளிக்க கூடியதாக உள்ளது. அதேபோல் தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களின் விடா முயற்சி ஆனது வெற்றியினை தேடித்தரும் வகையில் இருப்பதாக ஜோதிடத்தில் சொல்லப்படுகிறது.
அதுமட்டும் இல்லாமல் திடீரென்று பண வரவும் அதிகரித்து காணப்படும்.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |