சனி வக்ர நிவர்த்தி
சனி பகவான் ஒரு ராசியில் சஞ்சரிக்கும் போது நீண்ட காலம் எடுத்து கொள்வார். இவர் சஞ்சரிக்கும் போது அந்த ராசியில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். தற்பொழுது சனி பகவான் கும்ப ராசியில் வக்கிரமாக இருக்கிறார். சனி பகவான் அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி மாலை 7:12 நிமிடங்களுக்கு அதாவது தசரா அன்று சனி கும்பத்தில் வக்கிர நிவர்த்தி அடைகிறது. நவராத்திரியின் இறுதி நாளான தசரா அன்று இந்த வக்கிர நிவர்த்தி நடைபெறுவது மிக மிக சுபிட்சமானதாக கருதப்படுகிறது. இந்த வக்ர நிவர்த்தியால் மூன்று ராசிகளுக்கு எதிர்பார்க்காத நன்மைகள் கிடைக்க போகிறது. அவை எந்தெந்த ராசிகள் என்று இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம்.
சனி வக்ர நிவர்த்தியால் அதிர்ஷ்டம் பெற போகும் ராசிகள்:
கும்பம்:
சனி வக்ர நிவர்த்தி கும்ப ராசிக்காரர்களுக்கு சாதகமானதாக இருக்கிறது. நெனெகல் எந்த செயல் வேண்டுமானாலும் இந்த காலத்தில் தைரியமாக செய்யலாம். இந்த காலம் உங்களுக்கு அதிர்ஷ்டம் வாய்ந்ததாக இருக்கும். வீட்டில் பணவரவு அதிகரிக்கும். நீங்கள் ஏதும் புதியதாக தொடங்க வேண்டும் என்று நினைத்தால் விஜயதசமி அன்று தொடங்கலாம்.
ராகு கிரகம் ராசியை மாற்றுவதால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு நல்ல காலம்..
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு சனி வக்ர நிவர்த்தி சாதகமானதாக இருக்கிறது. உங்களுடைய திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியாக நடந்து கொள்வீர்கள். இதுவரை உங்களின் வாழ்க்கை இருந்ததை விட வளர்ச்சி அடையும். வெளிவட்டாரத்தில் உங்களின் மதிப்பு அதிகரிக்கும். வீட்டில் பணவரவு அதிகரிக்கும், இதனால் எதிர்கால பயன்பாட்டிற்காக பணத்தை அதிகமாக சேமிப்பீர்கள்.
ஏதேனும் நீங்கள் நோய்களில் பாதிக்கப்பட்டிருந்தால் அதிலிருந்து விடுபடுவீர்கள். மேலும் சட்ட வழக்குகள் ஏதும் இருந்தால் அவை முடிவுக்கு வரும்.
ரிஷபம்:
சனி வக்ர நிவர்த்தி ரிஷப ராசிக்காரர்களுக்கு சிறப்பானதாக இருக்கும். இதுவரை உங்கள் வாழ்க்கையில் எதுவும் தடங்கள் இருந்தால் அவை நீங்குவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. வெளிவட்டாரத்தில் உங்களின் மதிப்பு அதிகரிக்கும்.
வீட்டில் நிதிநிலைமை மேம்படும். வியாபாரம் செய்பவர்கள் இந்த நேரத்தில் முதலீடு செய்வதற்க்கு உகந்த காலமாக இருக்கிறது.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |