Sani Vakra Nivarthi Palangal in Tamil
பொதுவாக நம்மில் பலருக்கும் ஜோதிட சாஸ்திரத்தின் மீது மிகுந்த நம்பிக்கை உள்ளது. அதனால் நாம் அதில் கூறும் அனைத்தையும் நம்புவோம். அதேபோல் ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்களும் நமது வாழ்க்கையில் மிகவும் முக்கியமான பங்கினை வகிக்கின்றது. அவற்றால் தான் நமது வாழ்க்கை இயக்கப்படுகிறது என்றும் கூறப்படுகிறது. அதனால் நவகிரகங்கள் தங்களது ராசி அல்லது நட்சத்திரத்தை மாற்றம் செய்தால் நமது வாழ்க்கையில் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. அதேபோல் தான் ஜூன் 17 ஆம் தேதி, சனி தனது சொந்த ராசியான கும்பத்தில் வக்ர பெயர்ச்சி அடைந்தார். நவம்பர் 4 அன்று சனிபகவான் வக்ர நிவர்த்தி அடைய போகின்றார். இதனால் ஏற்படும் தாக்கம் பன்னிரண்டு ராசிக்காரர்களுக்கும் கிடைக்கும். ஆனால் ஒரு சில ராசிக்காரர்களுக்கு கூடுதலான பலன்கள் கிடைக்கும். அவை எந்தெந்த ராசிக்காரர்கள் அவர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதையெல்லாம் பற்றி விரிவாக இன்றைய பதிவில் காணலாம் வாங்க..
சனியின் வக்ர நிவர்த்தியால் அதிர்ஷ்டகாரர்களாக மாற போகும் 3 ராசிக்காரர்கள்:
பொதுவாக மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கும் சனி பகவான், நீதியின் கடவுள் என அழைக்கப்படுகிறார். இவர் அனைத்து கிரகங்களிலும் மிக முக்கியமான கிரகமாக உள்ளார்.
இவர் ஜூன் 17 ஆம் தேதி 30 ஆண்டுகளுக்குப் பிறகு சனி கும்ப ராசியில் பெயர்ச்சி ஆனார். இந்த பெயர்ச்சியில் சனி பகவான் வக்ரம் அடைந்தார். இந்த வக்ர நிலை வருகின்ற நவம்பர் 4-ஆம் தேதி நிவர்த்தி அடைந்து ஷஷ மஹாபுருஷ ராஜயோகம் உருவாக போகின்றது.
இதனால் அனைத்து ராசிக்காரர்களுக்கும் அதிக நன்மைகள் நடக்கும். ஆனால் குறிப்பிட்ட 3 ராசிக்காரர்களுக்கு மட்டும் மிக மிக அதிக நன்மைகளை பெற போகின்றார்கள்.
அவை எந்தெந்த ராசிக்காரர்கள் அவர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதையெல்லாம் பற்றி விரிவாக இங்கு காணலாம்.
கடன் தொல்லை தங்க முடியலையா அப்போ இதை மட்டும் ஒரு முறை செய்யுங்க போதும்
ரிஷபம்:
நவம்பர் 4-ஆம் தேதி உருவாகின்ற ஷஷ மஹாபுருஷ ராஜயோகத்தால் ரிஷப ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அதிக அளவு முன்னேற்றம் ஏற்படும். அதிலும் குறிப்பாக தொழிலில் பலமான முன்னேற்றம் ஏற்பட்டு பண வரவு அதிகரிக்கும்.
மேலும் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உடல்நலத்தில் இருந்த குறைபாடுகள் நீங்கும்.
சிம்மம்:
ஜோதிட சாஸ்திரப்படி சனியின் வக்ர நிவர்த்தியால் உருவாகும் ஷஷ மஹாபுருஷ ராஜயோகம் சிம்ம ராசிக்காரர்களுக்கு ராஜ யோகா பலன்களை அளிக்கும். அதாவது இந்த நேரத்தில் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன்-மனைவி உறவு வலுப்பெறும்.
அதுமட்டுமின்றி பொருள் ரீதியான இன்பங்களும் பெருகும். அதே நேரத்தில், பொருளாதார ரீதியாகவும் நன்மைகள் கிடைக்கும். சர்ச்சைக்குரிய விஷயங்களில் வெற்றி கிடைக்கும்.
மேஷத்தில் உருவாகும் மகா தன ராஜயோகம் இதனால் அதிர்ஷ்டத்தை தன்வசமாக்க போகும் 3 ராசிகள்
கும்பம்:
இந்த சனி பகவானின் வக்ர நிவர்த்தி கும்ப ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பல வித நற்பலன்களை அள்ளித்தர போகின்றது. இந்த காலம் கும்ப ராசிக்காரர்களுக்கு சுபகாலமாக இருக்கும்.
மேலும் கும்ப ராசியில் தான் சனி சஞ்சரிப்பதால் கும்ப ராசி மக்களிடம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். இந்த நேரத்தில் கூட்டுத்தொழிலில் மகத்தான வெற்றி கிடைக்கும்.
தீராத கடனும் தீர ஆடி மாதத்தின் செவ்வாய் கிழமை தோறும் பூஜை அறையில் இதை மட்டும் செய்யுங்கள் போதும்
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |