சனி வக்ர பெயர்ச்சி 2023
பொதுவாக ஆன்மிகத்தில் நம்பிக்கை இருப்பவர்களுக்கு ஒவ்வொரு நாளும் என்ன பலன்கள் என்பதை பார்த்து விட்டு தான் அன்றைய நாளை தொடங்குவார்கள். அது போல ஒவ்வொரு பெயர்ச்சியும் ரொம்ப முக்கியமானது, ஒவ்வொரு கிரங்களும் ஒரு ராசியில் குறிப்பிட்ட காலத்திற்கு சஞ்சரிப்பார்கள். அப்படி சஞ்சரிக்கும் போது நன்மை மற்றும் தீமை என இரண்டுமே இருக்கும். அதில் சனி பகவான் முக்கியமாக கிரகமாக கருதப்படுகிறது. சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைந்திருக்கிறார். இதனால் எந்தெந்த ராசிகளுக்கு நன்மை மற்றும் தீமை என தெரிந்து கொள்வோம்.
சனி வக்ர நிவர்த்தி பலன்:
மகரம்:
சனி பகவான் நேரடியாக சஞ்சரிப்பது மகர ராசிக்காரர்களுக்கு சிறப்பானதாக இருக்கும். இதுவரை உங்கள் வராத தொகை கைக்கு கிடைக்கும். மேலும் செல்வ நிலை அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். மேலும் உங்கள் துணையிடம் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நினைத்த காரியங்கள் அனைத்தும் நடக்கும். சனி பகவானுக்கு விளக்கேற்றி பூஜை செய்யுங்கள்.
தனுசு:
சனி பகவான் நேரடியாக சஞ்சரிப்பது தனுசு ராசிக்காரர்களுக்கு பணவரவு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் ஏதும் பிரச்சனை இருந்தால் அவை நீங்கும். உங்களின் உடன் பிறந்தவர்கள் உங்களின் எல்லா செயல்களுக்கும் பக்க பலமாக இருப்பார்கள். வெளியூர் செல்வதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. இதனால் ஆதாயம் கிடைக்கும். மேலும் அனுமானின் மந்திரத்தை மாலை நேரத்தில் சொல்வது நல்லது.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு சனி பகவான் நேரடியாக சஞ்சரிப்பது சிறப்பானதாக இருக்கும். இதுவரை உங்கள் கைக்கு வராத தொகை கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். குறிப்பாக திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
சுக்கிர பெயர்ச்சியால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்ட போகிறது..
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு சனி பகவான் நேரடியாக சஞ்சரிப்பது வேலையில் சிறந்த பலன்களை தரும். உங்களின் எல்லா செயல்களுக்கும் உடன் பிறந்தவர்கள் பக்க பலமாக இருப்பார்கள். உடல்நல பிரச்சனை ஏதும் இருந்தால் அவை இந்த நேரத்தில் தீர்வடையும். அனுமானு கோவிலுக்கு சென்று வரவும்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு வேலைகள் முடிவதற்கு நாட்கள் ஆகலாம். ஆனால் அந்த வேலைகள் ஆனது வெற்றியில் வந்து முடிவடையும். தொழில் செய்பவர்களுக்கு வளர்ச்சி காணப்படும். பணியிடத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கும்.
மேஷம்:
சனி பகவான் நேரடியாக சஞ்சரிப்பதால் மேஷ ராசிக்காரர்களுக்கு பல விதத்தில் நன்மைகள் கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். செல்வ நிலை அதிகரிக்கும். இதனால் வெளிவட்டாரத்தில் உங்களின் மதிப்பு அதிகரிக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும்.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |