வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

சனி பகவானின் அதிர்ஷ்டம் இந்த ராசிக்காரர்களுக்கு தான் கிடைக்கபோகுதாம்..! இதுல உங்க ராசி இருக்கானு பாருங்கப்பா..!

Updated On: June 23, 2023 4:50 AM
Follow Us:
sani vakra peyarchi 2023 palangal
---Advertisement---
Advertisement

Sani Vakra Peyarchi 2023 Palangal

சனி பகவான் ஆன்மீகத்தில் ஒவ்வொரு வருடமும் அவருடைய ராசியினை மாற்றி கொண்டே இருப்பார். இவ்வாறு மாறும் போது காலச்சக்கரத்தில் உள்ள ஒவ்வொரு ராசிக்கும் அவர் அவரின் ராசி மற்றும் நட்சத்திரம், கிரகங்களின் அடிப்படையில் பலன்களை வழங்குவார். அந்த வகையில் இந்த வருடத்திற்கான சனி பெயர்ச்சியின் போது சனி பகவான் கும்ப ராசியில் பெயர்ச்சி அடைந்து உள்ளார். இப்போது கும்ப ராசியிலேயே வக்ர நிலையினை அடைய உள்ளார். ஆகவே சனி பகவானின் இத்தகைய வக்ர நிலையினால் 5 ராசிகளுக்கு மட்டும் அதிர்ஷ்டம் பெருகும் வகையில் பலன்களை அளிக்க உள்ளார். அதனால் இன்று சனி பகவானின் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிக்காரர்கள் யாரென்று தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்..!

சனி வக்ர பெயர்ச்சி 2023 பலன்:

மேஷ ராசி:

மேஷம்

சனி வக்ர பெயர்ச்சி ஆனது மேஷ ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அளிக்கும் வகையில் பலன்களை வழங்கப்போகிறது. அதேபோல் பணியிடத்தில் உங்களின் திறமைக்கு ஏற்ற அங்கீகாரம், பண வரவு என அனைத்தும் கிடைத்து மகிழ்ச்சியான வாழ்க்கையாக அமையும். மேலும் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வட்டாரம் என்பது சுமுகமாக காணப்படும்.

கன்னி ராசி:

கன்னி

காலச்சக்கரத்தில் 6-வது ராசியாக அமைந்து இருப்பது தான் கன்னி ராசி. இத்தகைய கன்னி ராசிக்காரர்களுக்கு சனி பகவான் அவருடைய வக்ர நிலையில் வெற்றியினை வழங்கும் விதமாக பலன்களை அளிக்கிறார். 

அதனால் கன்னி ராசிக்காரர்கள் எடுக்கும் முயற்சியில் வெற்றி உண்டாகும். மேலும் தொழில் மற்றும் வியாபாரத்தில் இதுநாள் வரையிலும் காணப்படாத லாபம் மற்றும் வருமானம் கிடைக்கும்.

மிதுன ராசி:

மிதுன ராசிராசியில் 3-வது ராசியாக காணப்படுவது மிதுன ராசி. இத்தகைய மிதுன ராசிக்காரர்களுக்கு அமோகமான பலன்களை சனியின் வக்ர பெயர்ச்சி ஆனது தருகிறது. நீண்ட நாட்களாக வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு விரைவில் வேலை கிடைக்கும் நேரமாக இது உள்ளது. மேலும் கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி மகிழ்ச்சியான வாழ்க்கை உண்டாகும் நேரமாக இந்த காலம் உங்களுக்கு உள்ளது.

தனுசு ராசி:

தனுசு ராசிராசிகளில் வில் போன்ற அமைப்பினை கொண்டதாக இருப்பது தான் தனுசு ராசி. இந்த தனுசு ராசிக்காரர்களுக்கு இனிவரும் காலங்கள் அனைத்தும் சாதகமான நாளாகவே இருக்கிறது.

அதனால் எடுக்கும் புதிய முயற்சி மற்றும் செயலில் எதிர்பாராத வெற்றி கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரமும் சாதமாக அமையும். அதேபோல் நீங்கள் வெளி ஊர் செல்லும் வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால் கவனம் மிகவும் அவசியமாக கருதப்படுகிறது.

ஆண்டியையும் அரசனாக்கும் புத-ஆதித்ய யோகத்தால் அரசனாக போகும் ராசிக்காரர்கள் இவர்கள் தான்

ரிஷப ராசி:

ரிஷப ராசி

சனியின் வக்ர பெயர்ச்சிக்கான அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிகளில் ரிஷப ராசியும் ஒன்று. ரிஷப ராசிக்காரர்களுக்கு இதனால் பொருளாதார நிலை மேம்படும். மேலும் தொழிலில் எதிர்பார்த்த மாதிரியான பலன்கள் கிடைக்கும்.

அதுமட்டும் இல்லாமல் வியாபாரத்தில் போட்டிகள் மற்றும் சவால்கள் அதிகமாக காணப்படுவதால் அதற்கு ஏற்றவாறு செயல்படுவது நல்லது.

சிம்மத்தில் சஞ்சரிக்கும் செவ்வாயால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தான் வெற்றியும், அதிர்ஷ்ட மழையும் பொழியும் 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now