ஜூன் 17-ஆம் தேதி சனியின் வக்ர பெயர்ச்சியால் இந்த ராசிகளுக்கு தான் எல்லா யோகமும் கிடைக்கப்போகிறது..!

சனி வக்ர பெயர்ச்சி 2023

சனி பகவானின் பெயர்ச்சியினை விட சனி பகவானின் பார்வையில் இருந்தோ, வக்ர நிலையில் இருந்தோ யாராலும் தப்பிக்க முடியாது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அதேபோல் சனி பகவான் நமக்கு அளிக்கும் பலன்கள் அனைத்தினையும் நம்முடைய செயல்கள் எவ்வாறு இருக்கிறதோ அதனை பொறுத்தே அளிப்பார் என்ற நம்பிக்கையும் நம்மிடத்தில் இருக்கிறது. அந்த வகையில் பார்த்தோம் என்றால் இந்த வருடத்திற்கான சனி பெயர்ச்சியின் போது சனி பகவான் கும்ப ராசியில் பெயர்ச்சி அடைந்து இருக்கிறார். இதனை தொடர்ந்து ஜூன் மாதம் 17-ஆம் தேதி அன்று சனி பகவான் கும்ப ராசியிலேயே நவம்பர் மாதம் 4-ஆம் தேதி வரை வக்ர நிலையினை அடைகிறார். ஆகவே இத்தகைய வக்ர பெயர்ச்சி காரணமாக உருவாகும் திரிகோண மற்றும் ஷஷ மகாபுருஷ ராஜ் யோகத்தால் 4 ராசிக்காரர்களுக்கு யோகமான பலன்கள் கிடைக்கப்போகிறது. அது என்ன மாதிரியான என்று விரிவாக பார்க்கலாம் வாருங்கள் நண்பர்களே..!

Sani Vakra Peyarchi 2023:

ரிஷப ராசி:

ரிஷபம்

ராசியில் 2-வதாக அமைந்திருக்கும் ரிஷிப ராசிக்காரர்களுக்கு கேந்திர திரிகோண ராஜயோகத்தால் மகிழ்ச்சி அளிக்கும் வகையில் பலன்கள் இருக்கும். தொழில் மற்றும் வியாபாரம் ரீதியாக நினைத்த காரியம் அனைத்தும் வெற்றி அளிக்கும் வகையில் இருக்கும்.

 

மேலும் இந்த நேரத்தில் உங்களுக்கான நிதிநிலை சிறப்பானதாக காணப்படும். அதேபோல் புதிய முயற்சிகள் மற்றும் வேலைவாய்ப்புகள் தேடி வரும் வாய்ப்பும் அதிகமாக உள்ளது.

விருச்சிக ராசி:

விருச்சிக ராசிஜூன் 17-ஆம் தேதி முதல் உருவாகும் ஷஷ மகாபுருஷ யோகத்தால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு பொருளாதார நிலை மேலோங்கி காணப்படும். மேலும் இதுநாள் வரையிலும் காணப்பட்ட சொத்து பிரச்சனை நல்ல முடிவுக்கு வரும்.

 

அதுமட்டும் இல்லாமல் புதிய வீடு, இடம் மற்றும் வாகனம் வாங்கும் யோகமும் உள்ளது. மேலும் குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்து சுமுகமான வாழ்க்கையாக இருக்கும்.

புதன் ரிஷப ராசிக்கு பெயர்ச்சி அடைவதால் சில ராசிகளுக்கு பலன்களை அள்ளி தர போகிறது..

சிம்ம ராசி:

சிம்ம ராசிசிம்ம ராசிக்காரர்களுக்கு 2 யோகத்தினாலும் நல்ல பலன்களை அளிக்கும் வகையில் இருக்கும். நீண்ட நாட்களாக திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைக்கூடி வரும் நிலைமை இருக்கிறது.

 

இதுநாள் வரையிலும் தள்ளிப்போன வேலைகள் அனைத்தும் சுமுகமான முடிவுக்கு வரும். மேலும் செய்யும் வேலையில் பதவி உயர்வு மற்றும் பாராட்டுகளும் கிடைக்கும்.

கும்ப ராசி:

கும்பம் ராசிசனி பகவான் கும்ப ராசியில் வக்ர நிலையினை அடைந்தாலும் கூட இந்த ராசிக்கு வெற்றி பெரும் விதமாக தான் பலன்களை தருகிறார். குடும்பத்தில் உள்ள மனக்கசப்புகள் அனைத்தும் நீங்கி மகிழ்ச்சி நிலவும்.

அதேபோல் நீண்ட நாட்களாக தள்ளிப்போன செயல்களும் வெற்றி பெரும் வகையில் முடிவுக்கும் வரும். பொருளாதரத்தில் மகிழ்ச்சி உண்டாகும். ஆனால் கவனமாக இருக்க வேண்டும்.

துலாம் ராசி:

துலாம் ராசிதுலாம் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அளிக்கும் வகையில் தான் பலன்கள் அனைத்தும் இருக்கும். நீங்கள் செய்யும் முதலீட்டில் நல்ல லாபம் வரும் நேரமாகவும் உள்ளது.

 

 

அலுவகத்தில் உங்களுக்கான அமோகமான நேரமாக இது இருக்கிறது. உங்களின் செயலால் மேல் பதவிக்கு செல்லும் நேரம் அமையும் வாய்ப்பும் இருக்கிறது. மேலும் பணவரவு நல்ல நிலையில் இருக்கும்.

சனியின் வக்ர பெயர்ச்சியினால் நவம்பர் மாதம் வரைக்கும் இந்த ராசிகளுக்கு பண மழை பொழிய போகிறது..

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்