சனி வக்ர பெயர்ச்சி 2023 | Sani Vakra Peyarchi 2023
ஒவ்வொரு ராசிக்கும் சனிபெயர்ச்சி என்பது நடக்கும். அப்படி அந்த மாற்றம் சிலருக்கு நன்மையையும் சிலருக்கு கொஞ்சம் கஷ்டங்களையும் கொடுக்கும். சிலர் நினைப்பார்கள் ஒவ்வொரு கிரங்களும் ஒவ்வொரு வகையான பலன்களை கொடுக்கும். சனி பெயர்ச்சி என்றால் சிலர் பயம் கொள்வார்கள். ஆனால் சனி பகவான் ஒரு நீதிமான். அவர் நீங்கள் செய்தவற்றை வைத்து தான் நன்மை தீமைகளை நமக்கு வழங்குவார். ஆகவே சனி பெயர்ச்சியில் வக்ர சனி பெயர்ச்சி நடைபெறுகிறது. இது என்ன மாதிரியான பலன்களை ராசிகளுக்கு கொடுப்பார் என்பதை பற்றி பார்க்கலாம். அதேபோல் 30 ஆண்டுகளுக்கு பிறகு பத்தில் நுழைந்து தற்போது ஜூன் 17 ஆம் தேதி முதல் வக்ர நிலையில் பெயர்ச்சி அடையப்போகிறார். ஆகவே அனைத்து ராசிக்கும் பலன்களை பார்க்கலாம்.
Sani Vakra Peyarchi 2023:
மீன ராசி:
மீன ராசியை பொறுத்தவரையில் பொருளாதார நிலை மேம்படும். அதேபோல் குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும். இதுவரை இருந்த மன அழுத்தங்கள் விலகி நிற்கும்.
கும்ப ராசி:
வக்ர சனி பெயர்ச்சியானது உங்கள் மீது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். அதேபோல் தேவியில்லாத மன அழுத்தங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஆகவே அதிக கவனம் தேவை.
2023 ஆம் ஆண்டு அடுத்த சனி பெயர்ச்சி யாருக்கு? சனி பெயர்ச்சி இருந்து விடுபடுபவர் ராசி எது ?
மகர ராசி:
மகர ராசிக்கு நிதி நிலையை பொறுத்த வரையில் ஏதும் மாற்றம் ஏற்படும். உங்களுக்கு குடும்ப வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. கண் கலங்கி இதுவரை இருந்த மன அழுத்தம் விலகும்.
தனுசு ராசி
இதுவரை இருந்த அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக முடியும். திடீர் லாபம் அதிகரிக்கும். நிறுத்தப்பட்ட வேலைகள் மற்றும் வருமானம் இதுவரை இல்லாமல் புதிதாக இருக்கும். பதவி, பணம், மரியாதை கிடைக்கும்.
விருச்சிக ராசி:
உங்களின் தனிப்பட்ட வாழ்கையில் உறுதியற்ற நிலையை ஏற்படுத்தும். சனியில் வக்கிர நிலை உங்கள் வாழ்க்கையில் பல்வேறு பகுதிகளில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். ஆகவே கொஞ்சம் கவனம் செலுத்துவது நல்லது.
துலாம் ராசி:
வக்ர பெயர்ச்சி துலாம் ராசிக்காரர்களுக்கு நிதி பிரச்சனைகள் வரக்கூடும். அதேபோல் பூர்வீக சொத்து பிரச்சனைகள் வரக்கூடும்.
கன்னி ராசி:
கன்னி ராசிகாரர்களுக்கு பொருளாதார நிலை மாறுபடும். அதில் உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். திடீர் அதிர்ஷ்டம், பணவரவு காணப்படும் அதேபோல் சேமிப்பு உயரும்.
ஒரு கைப்பிடி கல் உப்பு போதும் 10 நாட்களில் நீங்கள் நினைத்த காரியம் நிறைவேற
கடக ராசி:
கடக ராசிக்கு அஷ்டம சனி காலமாக இருப்பதால் மிகவும் கவனமாக இருப்பது நல்லது. ஒவ்வொரு செயலிலும் கவனம் அவசியம். குடும்ப உறுப்பினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பலாம். ஆகவே மற்றவர்களுடன் பேசும் போது கவனம் தேவை.
சிம்ம ராசி:
சிம்ம ராசிக்கு வக்கிர சனி பெயர்ச்சி மங்களகரமானதாக கருதப்படுகிறது. இதுவரை தடைபட்ட வேலைகள் நடக்கும். வியாபாரம் தொடர்பான துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
மிதுன ராசி:
சனியின் வக்ர பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு நிதிப் பிரச்சனைகளில் இருந்து நிவாரணத்தை தருவார். அதேபோல் வருமானம் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றத்திற்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி ஏற்படும்.
ரிஷப ராசி:
வக்கிர பெயர்ச்சி ரிஷப ராசிக்கு நலன் பலன்களை அளிக்கும். உங்களின் பொருளாதார நிலை மேம்படும். பெரிய முன்னேற்றம் காணப்படும். கொடுக்கல் வாங்கல்களுக்கு ஏற்ற நேரம். கடன் தொல்லையிலிருந்து விடுபடுவீர்கள்.
மேஷ ராசி:
மேஷ ராசிக்கு பணவரவு சாதகமாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும். புதிய ஆதாரங்கள் மூலம் பணம் கிடைக்கும். நம்பிக்கை அதிகரிக்கும். உங்களின் பணிகளின் பாராட்டுக்கள் கிடைக்கும். உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் வரலாம். ஆகவே ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
சனியின் வக்ர பெயர்ச்சியால் 6 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்க போகிறது.. உங்க ராசி இருக்கா
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |