Sani Vakra Peyarchi 2024
ஆன்மீக நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்..! 2023-ஆம் ஆண்டு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான அனுபவங்களை அளித்து இருக்கும். அதில் நன்மைகள் மற்றும் தீமைகள் என இது மாதிரியான பலன்கள் தான் இருந்து இருக்கும். அதன் படி பார்த்தால் ஆன்மீக ரீதியாகவும் பலருக்கும் பல மாதிரியான பலன்கள் வாழ்வில் கிடைத்து இருக்கும்.
அதாவது சனி பெயர்ச்சி, குரு பெயர்ச்சி, சூரிய பெயர்ச்சி மற்றும் சுக்கிரன் பெயர்ச்சி என பல வகையான கிரகங்களின் மாற்றமும் நிகழ்ந்து இருக்கிறது. இத்தகைய பெயர்ச்சியில் எதில் பயம் இருக்கிறதோ, இல்லையோ ஆனால் சனி பகவான் மீது மட்டும் அதிகப்படியான பயமானது இருக்கும். ஏனென்றால் சனியின் பெயர்ச்சி, சனி வக்ர பெயர்ச்சி மற்றும் சனி பார்வை என இவற்றில் எல்லாம் நம்முடைய ராசி மற்றும் நட்சத்திரத்திற்கு என்ன பலன்கள் வரப்போகுது என்ற குழப்பம் இருக்கும். அந்த வகையில் சனியின் வக்ர பெயர்ச்சியால் கஷ்டத்தை அனுபவிக்கப்போகும் ராசிக்காரர்கள் யார் என்பதை விரிவாக பார்க்கலாம் வாங்க..!
சனி வக்ர பெயர்ச்சி 2024 பலன்கள்:
2023-ஆம் ஆண்டிற்கான சனி பெயர்ச்சின் போது சனி பகவான் கும்ப ராசியில் பெயர்ச்சி அடைந்தார். அந்த வகையில் கும்பத்தில் இருந்து கொண்டே ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் ஒவ்வொரு மாதிரியான பலன்களை அளித்தார்.
அந்த வகையில் தற்போது 2024-ஆம் ஆண்டின் முதலிலேயே, அதாவது ஜனவரி மாதத்தில் சனி பகவான் பிற்போக்கு நிலையில் இருப்பார் என்று கூறப்படுகிறது. அதனால் 12 ராசிகளில் 2 ராசிக்காரர்களுக்கு மட்டும் சற்று கஷ்டமான பலன்கள் இருப்பதாக ஜோதிடத்தின் படி கூறப்படுகிறது.
கடக ராசி:
ராசியில் 4-வது ராசியான கடக ராசி சனி பகைவனின் பிற்போக்கு நிலையினை பாதிக்கப்பட இருக்கிறாரகள். ஆகையால் எந்த செயலை செய்தாலும் அதில் கவனம் மற்றும் எச்சரிக்கை என இரண்டுமே இருத்தல் வேண்டும்.
மேலும் பொருளாதார நிலை மிகவும் குறைவான ஒன்றாகவே அமையும். உங்களது குடும்பத்தில் உள்ளவர்கள் மற்றும் உங்களின் உடல்நிலை என் இரண்டிலுமே அதிக கவனம் செலுத்துவது நல்லது.
மகர ராசி:
மகர ராசிக்காரர்களை பொறுத்தவரை அதிகமாக மன உளைச்சலுக்கு உள்ளாகுவர்கள். இதனை வீண் விவாதங்களும், சண்டைகளும் ஏற்படும் வாய்ப்புகள் இருப்பதாக ஜோதிடத்தில் கூறப்படுகிறது. மேலும் இந்த நேரத்தில் வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாக இருக்ககூடிய ஒன்றாகவே அமையும்.
விருச்சிக ராசி:
சனியின் பிற்போக்கு நிலையினை விருச்சிக ராசிக்கார்களுக்கு எதிர்பார்த்த மாதிரியான பலன்கள் கிடைக்காது. அதனால் எதையும் விடா முயற்சியுடன் செய்வதே நல்லது. மேலும் இந்த நேரத்தில் அதிகமாக பொறுமை மற்றும் கவனம் என இரண்டையும் கடைப்பிடிக்க வேண்டியது மிகவும் அவசியம்.
மீன ராசி:
மீன்களை அமைப்பாக கொண்ட மீன ராசிக்கார்களுக்கு இனி வரும் காலங்கள் கோபத்தை உண்டாகக்கூடிய காலமாக தான் அமையும். அதனால் எந்த சூழலிலும் கோபத்தை தவிர்ப்பது மிகவும் நல்லது.
மேலும் ஆரோக்கியத்தில் சிறிதளவு குறைபாடு இருப்பதாகவும் ஆன்மீகத்தின் படி சொல்லப்படுகிறது. ஆகையால் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை.
கும்ப ராசி:
கும்ப ராசியில் சனி பகவான் சஞ்சரித்து கொண்டு இருந்தாலும் கூட கும்ப ராசிக்காரர்களுக்கு எதிர்பார்த்த மாதிரியான பலன்கள் எதுவும் அந்த அளவிற்கு கிடைக்கவில்லை. ஆகையால் செய்யும் செயலில் கவனத்தை கடைபிடித்து கொள்ளுங்கள்.
ஆனாலும் கூட பொருளாதாரம் ரீதியாக உங்களது வாழ்வில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |