வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

சனி வக்ர பெயர்ச்சியின் அதிர்ஷ்ட மழை..! குடை வேண்டாம் பை எடுத்து செல்லுங்கள் அள்ளி வரலாம்..!

Updated On: June 1, 2023 3:45 AM
Follow Us:
Sani Vakra Peyarchi Palan
---Advertisement---
Advertisement

Sani Vakra Peyarchi Palan

வணக்கம் நண்பர்களே..! ஜோதிட சாஸ்திரத்தில் மொத்தம் 12 ராசிகள் இருக்கின்றன. அப்படி இருக்கும் ஒவ்வொரு ராசிக்கும் 3 நட்சத்திரங்கள் இடம் பெறுகின்றன. அதுபோல ராசிகளில் கிரகங்களின் மாற்றம் என்பது நடந்து கொண்டு தான் இருக்கிறது. கிரகங்கள் அனைத்தும் ஒரே ராசியில் இருப்பதில்லை. ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெறுகின்றன. அப்படி இடம் பெயரும் போது, சில ராசிகளுக்கு நன்மையையும் சில ராசிகளுக்கு தீமையையும் செய்யும்.

அதுபோல தற்போது சனி பகவான் தனது சொந்த ராசியான கும்பத்தில் இருக்கிறார்.  ஜூன் 17, 2023 கும்ப ராசியிலேயே அவர் வக்ர பெயர்ச்சி ஆகவுள்ளார். அதன் பிறகு நவம்பர் 4 ஆம் தேதி சனி வக்ர நிவர்த்தி ஆகி இயல்பு நிலைக்கு திரும்புவார். இதனால் சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் மழையாக பொழியப்போகிறது. இந்த மழையில் நனைய நீங்கள் குடை கொண்டு செல்லவேண்டாம், சாக்கு பை எடுத்து செல்லுங்கள் அள்ளிவரலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl

சனியின் வக்ர பெயர்ச்சி மழையில் நனைய போகிறீர்களா..? 

மிதுன ராசி: 

மிதுன ராசி

சனி பகவான் வக்ர பெயர்ச்சி அடைவதால் மிதுன ராசிக்காரர்கள் தொட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறும். எல்லா வேலைகளிலும் வெற்றி கிடைப்பது நிச்சயம். புதிய வேலையைத் தொடங்க நினைத்தால் இந்த காலம் நல்ல காலமாக இருக்கும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். பணவரவு அளவில்லாமல் சேரும் நேரம் இது. இது உங்களுக்கு பொன்னான காலமாக இருக்கும்.

துலாம் ராசி:

துலாம் ராசி

சனியின் வக்ர பெயர்ச்சி துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு முன்னேற்றம் தரும் பலன்களை அள்ளிதர போகிறது. வேலை தேடிக் கொண்டிருக்கும் நபர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். அலுவலகத்தில் பணிபுரியும் நபர்களுக்கு பதவி உயர்வு, சம்பள  உயர்வு கிடைக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு அதிக லாபம் கிடைக்கும்.

உங்க ராசிக்கு ஏழரை சனி எப்போது முடிவடையும்

மேஷ ராசி:

மேஷ ராசி

மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு சனியின் வக்ர பெயர்ச்சி சிறப்பான பலன்களை தரும் நேரம் இது. அனைத்திலும் நன்மைகள் உண்டாகும். வியாபாரம் செய்பவர்களுக்கு லாபகரமான சூழ்நிலை உண்டாகும். நண்பர்களின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். மேஷ ராசிக்காரர்களுக்கு சாதிக்கும் நேரம் இது.

தனுசு ராசி:

தனுசு ராசி

சனி பகவானின் வக்ர பெயர்ச்சி தொழில் செய்யும் தனுசு ராசிக்காரர்களுக்கு முன்னேற்றமான பலன்களை தரும். வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கும். வியாபாரம் செய்யும் நபர்களுக்கு வருமானம் அதிகரிக்கும்.

கன்னி ராசி:

கன்னி ராசி

கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு கஷ்டங்கள் தீரும் நேரம் இது. வேலை தேடிக் கொண்டிருக்கும் கன்னி ராசிக்காரர்களுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். கடன் பிரச்சனைகள் இருந்தால், அது முழுவதுமாக நீங்கும் நேரம் இது. அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.

இந்த ராசிக்காரர்கள் மே 30 வரை காத்திருக்கவும்..ஏனென்றால் பணமழை பொழிய போகிறது..

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now