சனியன் என்ற சொல்லால் நமக்கு இவ்ளோ பாதிப்பா!
அனைவருக்கும் கோவம் வருவது என்பது பொதுவான ஒன்று. சிலர் காரணத்துடன் சண்டைபோடுவார்கள் சிலர் சின்ன சின்ன விசயத்திற்கு கூட கோவப்படுவார்கள். அப்படி கோபத்தை வெளிப்படுத்தும் பொழுது அவர்கள் தன்னயேமறந்து சில வார்த்தைகளை விட்டுவிடுவார்கள். அது அடுத்தவர்களை பாதிக்கும் என்று கூட தெரியாமல் பேசிவிடுவார்கள். பிறகு நாம் அப்படி எல்லாம் பேசினோமா என்று நெனைத்துப்பார்ப்பார்கள். அப்படி பேசும் சில வார்த்தைகள் சில நேரத்தில் அவர்களுக்கே பாதிப்பு ஏற்படுத்தும் அளவிற்கு வந்துமுடிந்துவிடும்.
அப்படிப்பட்ட எல்லாருக்கும் எளிதில் வாயில் வரக்கூடிய வார்த்தையான சனியனே என்ற வார்த்தைக்கான அர்த்தத்தையும் நாம் இன்னொரு நபரை திட்டினாள் அல்லது இன்னொருவர் நம்மை இந்த வார்த்தை பயன்படுத்தி திட்டினாள் என்ன விளைவுகளை சந்திப்பீர்கள் என்று இந்த பதிவில் பார்ப்போம்.
சனியனே வார்த்தையின் அர்த்தம்
முதலில் நாம் பயன்படுத்தும் அனைத்து வார்த்தைக்கும் அர்த்தத்தை தெரிந்து பேசினால் கூடுமான அளவிற்கு நமக்கு ஏதும் பிரச்சனைகள் ஏற்படாது.
இப்போதெல்லாம் சனியனே என்று திட்டுவது சாதாரணமாகிவிட்டது, விளையாட்டிற்குக்கூட நண்பர்களுக்குள் இந்த வார்த்தை பயன்படுத்துவார்கள். இதனுடைய அர்த்தத்தை அவர்கள் உணர்ந்தாள் அப்படி சொல்லமாட்டார்கள்.
நம்மெல்லாம் கேளிவிப்பட்டிருப்போம் இப்படி சனியனே திட்டுனா சனிபகவான் நம்மள வச்சி கேலிபன்றாங்கனு அவருடைய முழு பார்வையும் அவங்க மேலே திருப்பிடுவாருனு. கோவில்ல கூட சனிபகவான நேரடியா பார்த்து கும்பிடமாட்டாங்க, அப்படி பண்ண அவருடைய முழு பார்வையும் நம்ம மேலே வந்திடும்னு ஒரு பயம் தான்.
வீட்டில் வைக்க கூடாத சாமி படங்கள்..!
Saniyan Meaning in Tamil
சனிபகவான் என்றால் எல்லாருக்கும் ஒரு பயம்தான், ஏன்னா போறபோக்குல ஒரு காட்டுக்காட்டிட்டு போய்டுவாருனு நம்புறாங்க.
பொதுவாகவே சனிகிரகத்த மந்தமான கிரகம்னு சொல்லுவாங்க ஏன்னா, மற்ற கிரகத்த பொறுத்தவகையில் இது சூரியனை பொறுமையாதான் சுற்றிவருமா. அப்படி சுத்திவரப்ப ஒரு மனிதனோட பொதுவான பண்புகளான எண்ணம், சொல் மற்றும் செயல ஆக்கரமிப்பாராம்.
அப்படி சனிபகவான் யாரை ஆக்கரமிக்கிறாரோ அவரோட எண்ணம் மற்றும் சொல்லில் அவருடைய பிரதிபலிப்பு இருக்குமாம். ஒருவருடைய வார்த்தையிலிருந்து சனி என்று வந்து விட்டால் அவருடைய வாழ்க்கைல தாங்கிக்கொள்ள முடியாத அளவிற்கு பாதிப்பு ஏற்படுமா.
தவளை தன் வாயால் கெடும்னு சொல்ற மாதிரி, இப்படி பட்ட வார்த்தைகளை பயன்படுத்திவிட்டு அப்றம் ஏன் அனுபவிக்கனும். அதனால ஒவ்வொரு வார்த்தைளையும் கவனம் தேவை.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |