சங்கடஹர சதுர்த்தி 2025 | Sankatahara Chaturthi 2025 in Tamil
Sankasthi Chaturthi | Sankatahara Chaturthi: அனைத்து நண்பர்களுக்கும் பொதுநலமின் அன்பான வணக்கம்..! இன்றைய பதிவில் 2025-ஆம் ஆண்டிற்கான சங்கடஹர சதுர்த்தி ஒவ்வொரு மாதத்திலும் எந்தெந்த கிழமை, தேதிகளில் வருகிறது என்று தெரிந்துக்கொள்ளலாம். விநாயகப் பெருமானை வழிபாடு செய்வதற்கு பல விரத நாட்கள் இருந்தாலும் நமது கஷ்டங்கள் அனைத்தையும் தீர்க்கக்கூடிய சங்கடஹர சதுர்த்தியில் விரதம் எடுத்தால் அளவுக் கடந்த ஆனந்தத்தையும், சகல செல்வங்களையும் பெறலாம்.
பௌர்ணமிக்கு அடுத்து வரும் நான்காம் நாள் சங்கடஹர சதுர்த்தி (Sankashta Chaturthi) ஆகும். சங்கட என்றால் துன்பம், ஹர என்றால் அழித்தல் என்று பொருளாகும். நம் வாழ்வில் ஏற்படும் அனைத்து விதமான துன்பங்களையும் போக்கும் விரதமே இந்த சங்கடஹர சதுர்த்தி. ஒவ்வொரு மாதமும் வரும் சங்கடஹர சதுர்த்தி நாளில் விரதம் இருந்தால் குடும்பத்தில் சுபிட்சமும், எல்லா செயல்களும் வெற்றியில் முடியும். சரி இப்போது 2025-ம் ஆண்டு முழுவதும் சங்கடஹர சதுர்த்தி எந்தெந்த நாட்களில் வருகிறது என்று விரிவாக இப்போது படித்தறியலாம்..!
Thiruvannamalai Girivalam Dates 2025 |
சங்கடஹர சதுர்த்தி 2025 தேதி மற்றும் நேரம்:
ஆங்கில தேதி | தமிழ் தேதி | கிழமை |
ஜனவரி 17 | தை 4 | வெள்ளிக்கிழமை |
பிப்ரவரி 16 | மாசி 4 | ஞாயிற்றுக்கிழமை |
மார்ச் 17 | பங்குனி 3 | திங்கட்கிழமை |
ஏப்ரல் 16 | சித்திரை 3 | புதன்கிழமை |
மே 16 | வைகாசி 2 | வெள்ளிக்கிழமை |
ஜூன் 14 | வைகாசி 31 | சனிக்கிழமை |
ஜூலை 14 | ஆனி 30 | திங்கட்கிழமை |
ஆகஸ்ட் 12 (மகா சங்கடஹர சதுர்த்தி) | ஆடி 27 | செவ்வாய்க்கிழமை |
செப்டம்பர் 10 | ஆவணி 25 | புதன்கிழமை |
அக்டோபர் 10 | புரட்டாசி 24 | வெள்ளிக்கிழமை |
நவம்பர் 8 | ஐப்பசி 22 | சனிக்கிழமை |
டிசம்பர் 8 | கார்த்திகை 22 | திங்கட்கிழமை |
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |