சங்காபிஷேக பூஜை
பொதுவாக கோவில்களுக்கு செல்லும்போது அங்கு உள்ள அமைதி நமக்கு நேர்மறையான சக்தியை தரும். இவ்வாறு கோவிஜலுக்கு செல்லும்போது அங்கு நடத்தப்படும் பூஜைகள் அனைத்தும் காணும் போது நமக்கு புண்ணியங்களை வழங்கும். அந்தவகையில் கார்த்திகை மாதம் சிவபெருமானுக்கு உகந்த சோமவார சங்காபிஷேக பூஜை சிறந்தது. சிவபெருமானை வணங்கக்கூடிய, வழிபட கூடிய, மிகவும் முக்கியமான விரதம் கார்த்திகை மாதம் திங்கள் கிழமை அன்று எடுக்கப்படும் சிவன் விரதம், இந்த சோமவார விரதமாகும். சோமவாரம் என்பது திங்கள் கிழமையை குறிக்கும். திங்கள் கிழமை என்பது சந்திரனுக்கு உரிய நாளாகும். அன்றைய தினத்தில் சிவனுக்கு சங்காபிஷேகம் செய்யப்படும் அந்த நிகழ்வை பார்ப்பதால் கோடி நன்மைகள் உண்டு. வாருங்கள் இன்றைய பதிவில் சங்காபிஷேகம் பூஜை பற்றி தெரிந்துகொள்வோம்.
செல்வ நிலையை உயர்த்த சங்காபிஷேக பூஜை:
கார்த்திகை மாதத்தின் திங்கட்கிழமை நாட்களில் சிவாலயங்களில் சங்காபிஷேக பூஜை நடைபெறும்.
கார்த்திகை மாதத்தில் இறைவன் அக்னிப் பிழம்பாக காணப்படுவர். அவரை குளிர்விக்கும் பொருட்டு அவருக்கு சங்காபிஷேக பூஜை செய்வார்கள்.
சோமவார திங்கட்கிழமையில், சிவபெருமானுக்கு சங்காபிஷேகம் செய்வது அந்த பூஜையை தரிசிப்பதன் மூலம் சகல தோஷங்களும் நீங்கி சந்தோசம் பெருகும்.
சிவனாருக்கு சங்காபிஷேகம் செய்வதை தரிசிப்பது நிம்மதியையும் முக்தியையும் வழங்கும்.
சங்கு, செல்வத்தினை குறிக்கிறது. செல்வநிலை உயரவும் முக்தியடையவும் சங்கை கங்கையாக பாவித்து 108 அல்லது 1008 சங்குகள் மூலம் இறைவனுக்கு பூஜை செய்யப்படுகிறது.
சாந்நித்தியம் குடிகொண்டிருக்கும் சங்கு கொண்டு சிவனுக்கு அபிஷேகம் செய்யச் செய்ய, இறைவன் சிவபெருமான் குளிர்ந்து போகிறான். இந்த பூமியைக் குளிரச் செய்கிறான். நம்மை குளிர்விக்கிறார் என்பது ஐதீகம்.
இந்த சங்காபிஷேகத்தில் கலந்து கொள்வதால் வீடு, மனை, வாகனம், திருமணம், தடைகள் அனைத்தும் நீங்கி சகல நம்மைகளும் அடையாளம் என்பது நம்பிக்கை.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |