சந்தனம் குங்குமம் எங்கே மணக்குது பாடல்..!

Advertisement

Santhanam Kungumam Enge Manakkuthu Song Lyrics

பொதுவாக நாம் ஏதாவது கோவிலுக்கு சென்றலோ அல்லது வீட்டில் ஏதேனும் பூஜை செய்தாலோ என்ன பூஜை செய்கிறோம், எந்த கடவுளை பிராத்தனை செய்கிறோம், என்பதற்கு ஏற்றவாறு தான் மற்ற அனைத்தினையும் செய்வோம். அதன் பார்த்தால் பூஜை செய்யும் போது அந்த கடவுளுக்கு உரிய பாடலை கேட்பது மற்றும் பாடுவது என இந்த முறையினை செய்வது என்பது சாதாரணமான ஒன்று. இதன் படி பார்த்தால் இப்போது கார்த்திகை மாதம் என்பதால் பெரும்பாலான ஆண்கள் ஐயப்பனுக்கு மாலை அணிந்து 48 நாட்கள் விரதம் இருந்த பிறகு மலைக்கு செல்வார்கள்.

இத்தகைய 48 நாட்களும் ஐயப்பனுக்கு உரிய பாடலை பாடவும் செய்வார்கள். அதோடு மட்டும் இல்லாமல் கன்னி பூஜை, பாத பூஜை என இதுபோன்ற பூஜையிலும், ஐயப்பனுக்கு உரிய பாடலான சந்தனம் குங்குமம் எங்கே மணக்குது பாடல் வரிகளை தான் இன்றைய பதிவில் பார்க்கப்போகிறோம்.

சந்தனம் குங்குமம் எங்கே மணக்குது பாடல்:

சந்தனம் குங்குமம் எங்கே மணக்குது பாடல்

சாமியே சரணம் ஐயப்பா..!

சந்தனம் குங்குமம் எங்கே மணக்குது
சபரிமலை அய்யப்பனின் மேலே மணக்குது
சபரிமலை அய்யப்பனின் மேலே மணக்குது
குண்டுமல்லி பூ பூத்து எங்கே மணக்குது
குண்டுமல்லி பூ பூத்து எங்கே மணக்குது
நம்ம‌ குருசுவாமி அவர் மேலே மண‌க்குது

சந்தனம் குங்குமம் எங்கே மணக்குது
சபரிமலை அய்யப்பனின் மேலே மணக்குது

கன்னிச்சாமி பூ பூத்து எங்கே மணக்குது
கனகாம்பரம் பூ பூத்து எங்கே மணக்குது
இங்கே உள்ள‌ கன்னிச்சாமி மேலே மணக்குது
கனகாம்பரம் பூ பூத்து எங்கே மணக்குது
இங்கே உள்ள‌ கன்னிச்சாமி மேலே மணக்குது

சந்தனம் குங்குமம் எங்கே மணக்குது
சபரிமலை அய்யப்பனின் மேலே மணக்குது

மருத‌ மரிக்கொழுந்து எங்கே மணக்குது
மருத‌ மரிகொழுந்து எங்கே மணக்குது
மாளிகபுரத்து அம்மா மேலே மண‌க்குது

சந்தனம் குங்குமம் எங்கே மணக்குது
சபரிமலை அய்யப்பனின் மேலே மணக்குது

ரோஜாப்பூ பூ பூத்து எங்கே மணக்குது
ரோஜாப்பூ பூ பூத்து எங்கே மணக்குது
ராஜாவா மணிகண்டன் மேலே மணக்குது

சந்தனம் குங்குமம் எங்கே மணக்குது
சபரிமலை அய்யப்பனின் மேலே மணக்குது

வாடாத‌ மல்லிகை எங்கே மணக்குது
வாடாத‌ மல்லிகை எங்கே மணக்குது
வல்லவனாம் வாவர் சுவாமி மேலே மணக்குது

சந்தனம் குங்குமம் எங்கே மணக்குது
சபரிமலை அய்யப்பனின் மேலே மணக்குது

மா பலா கொய்யாவும் எங்கே மணக்குது
மா பலா கொய்யாவும் எங்கே மணக்குது
மணிகண்ட‌ சாமி மேலே மணக்குது

சந்தனம் குங்குமம் எங்கே மணக்குது
சபரிமலை அய்யப்பனின் மேலே மணக்குது

தென்னம்பிள்ளை பூ பூத்து எங்கே மண‌க்குது
தென்னம்பிள்ளை பூ பூத்து எங்கே மண‌க்குது
பொன்னம்பல‌ வாசன் அவர் மேலே மணக்குது

சந்தனம் குங்குமம் எங்கே மணக்குது
சபரிமலை அய்யப்பனின் மேலே மணக்குது

பாரிஜாதம் பூ பூத்து எங்கே மண‌க்குது
பாரிஜாதம் பூ பூத்து எங்கே மண‌க்குது
பாட்டு கேட்கும் பக்தர் கூட்டம் மேலே மணக்குது

சந்தனம் குங்குமம் எங்கே மணக்குது
சபரிமலை அய்யப்பனின் மேலே மணக்குது

பன்னீர் அபிஷேகம் எங்கே மண‌க்குது
பன்னீர் அபிஷேகம் எங்கே மண‌க்குது
பதினெட்டு படிகளின் மேலே மணக்குது

சந்தனம் குங்குமம் எங்கே மணக்குது
சபரிமலை அய்யப்பனின் மேலே மணக்குது

அழுதா நதி தீர்த்தம் அது எங்கே மண‌க்குது
அழுதா நதி தீர்த்தம் அது எங்கே மண‌க்குது
ஹரிஹர‌ சுதன் அவன் மேலே மணக்குது

சந்தனம் குங்குமம் எங்கே மணக்குது
சபரிமலை அய்யப்பனின் மேலே மணக்குது

எங்கே ஓடுது எங்கே ஓடுது ஐயப்பன் பாடல் வரிகள்

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement