வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

சந்திர கிரகண நேரத்தில் செய்ய வேண்டியவை

Updated On: September 5, 2025 11:53 AM
Follow Us:
santhira kiragana nerathil seiya vendiyavai
---Advertisement---
Advertisement

சந்திர கிரகண நேரத்தில் செய்ய வேண்டியவை 

சந்திர கிரகணம் ஆனது 2025-ம் ஆண்டிற்கு செப்டம்பர் 7-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று வருகிறது. இந்த  கிரகணமானது கும்ப ராசியில் நிகழ்வதால் ஜோதிடத்தின் படி சில ராசிகள் மாறும் நட்சத்திரங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இந்த கிரகத்தின் தாக்கமானது அதிகபட்சம் 6 மாதங்கள் வரைக்கும் இருக்க கூடும் என்று ஆன்மீகத்தில் கூறப்படுகிறது. 

இந்த பாதிப்பிலிருந்து நம்மை தற்காத்து கொள்ள வேண்டுமென்றால் சந்திர கிரகணம் நடக்கும் நேரத்தில் சில செயல்களை செய்ய வேண்டும். அதுமட்டுமில்லாமல் கிரகணம் முடிந்த பிறகு செய்ய வேண்டிய செயல்கள் என்று இருக்கிறது. அதனை பற்றி தான் இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்ள போகிறோம்.

சந்திர கிரகண நேரத்தில் செய்ய வேண்டியவை:

சந்திர கிரகண நேரத்தில் செய்ய வேண்டியவை 

சந்திர கிரகணம் நேரமானது இரவு 09.56 PM மணிக்கு ஆரம்பித்து நள்ளிரவு 01.28 AM மணிக்கு முடிவடைகிறது. இந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை கீழே பார்த்து அறிந்து கொள்ளுங்கள். 

பொதுவாகவே ஆன்மீகத்தில் சில நேரங்களில் கடவுளை பிரார்த்தி விட்டு கடவுளுக்குரிய மந்திரங்கள் கூறுவதால் பல மடங்கு பலன்களை அள்ளித்தரும். இந்த பலன்கள் ஆனது ஒவ்வொரு நேரத்தில் கூறும் போது ஒவ்வொரு பலனை தரக்கூடும்.  மாலை நேரத்தில் மந்திரங்கள் கூறுவதால் 10 மடங்கு பலனும், அதுவே பிரம்ம முகூர்த்தத்தில் செய்தால் 100 மடங்கு பலனும், பெளர்ணமி, அமாவாசை தினத்தில் செய்தால் 1000 மடங்கு பலனை கிடைக்கும் என்று ஆன்மீகத்தில் கூறப்படுகிறது. 

அதுவே நீங்கள் கிரகண நேரத்தில் கடவுளிடம் பிரார்த்தனை செய்து விட்டு மந்திரங்களை கூறுவதால் பல லட்சம் பலன்கள் கிடைக்கும். அதனால் கிரகண நேரத்தில் எந்த சிந்தனையும் இல்லாமல் கடவுளை மனதார நினையுங்கள். கடவுளிடம் முழுமையாக சரணடைந்து விடுங்கள். உங்களுக்கு இஷ்ட தெய்வத்தை மனதார நினைத்து அவருக்குரிய மந்திரங்களை கூறுங்கள். 

கிரகண நேரத்தில் வீட்டில் ஏதேனும் உணவுகள் இருந்தால் அவற்றில் தர்ப்பை புள் மற்றும் துளசி இலைகளை போடுங்கள். ஏனென்றால் தர்ப்பை புல் மற்றும் துளசி இலைகள்  ஆனது கதிர்வீச்சுகளை தடுக்க கூடிய வல்லமை பெற்றது. 

கிரகணம் முடிந்த பிறகு செய்ய வேண்டியவை: 

கிரகணம் முடிந்த பிறகு செய்ய வேண்டியவை

கிரகணம் முடிந்த பிறகு வீட்டை சுத்தம் செய்து அலசி விடுங்கள். அதனை பிறகு நீங்களும் குளித்து விட வேண்டும். முக்கியமாக நீங்கள் குளிக்கும் தண்ணீரில் கல் உப்பு சிறிதளவு சேர்த்து குளிக்க வேண்டும். இதன் மூலம் கிரகணத்தால் கெட்ட  கதிர்கள் இறந்த நுண் உயிரிகள் ஆனது நம் உடலிலிருந்து நீங்க கூடும். 

அதன் பிறகு கோவிலுக்கு சென்று கடவுளை வணங்கி விட்டு  வாருங்கள். முக்கியமாக சிவன் கோவிலுக்கு சென்று வருவது நல்லது.

சிவன் கோவிலுக்கு சில பொருட்களை தானம் வழங்குவது நல்லது.  இந்த தானத்தில் மூலம் கிரகணத்தின் பாதிப்பு ஆனது அதிகமாக தாக்காமல் தன்னை தற்காத்து கொள்ள முடியும். சிவனுக்கு வெள்ளி, செம்பு அல்லது பித்தளையில் நாகபடம் அல்லது சந்திர பிம்பத்தை தானம் செய்யலாம். இந்த கிரகணத்தின் ராகு கிரஸ்த சந்திர கிரகணம் உருவாகியுள்ளதால் ராகுவிற்காக உளுந்து தானம் செய்ய வேண்டும். சந்திரனுக்காக வெள்ளை துணி, அரிசி, நெய் போன்றவற்றை தானம் செய்யலாம். 

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்

 

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now