Saraswathi Namasthubyam Lyrics in Tamil
ஆன்மீக நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்..! ஒவ்வொரு மனிதருக்கும் கல்வி தான் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. ஏனென்றால் நாம் எவ்வாறு கல்வி கற்கின்றோம் என்பதை பொறுத்து தான் நம்முடைய வாழ்க்கையின் அடுத்தகட்ட நிலை ஆனது இருக்கும் என்று எப்போது நம்முடைய வீட்டில் கூறிக்கொண்டே இருப்பார்கள். ஏனென்றால் யாராலும் விலை கொடுத்து வாங்க முடியாது கல்வியை நாம் கற்கும் போது நமக்கு தேவைப்படும் பொருட்கள் எவ்வளவு விலையாக இருந்தாலும் கூட அதனை நாம் வாங்கி விடலாம். அந்த வகையில் கல்விக்கு சிறந்த ஒரு தெய்வகமாக விளங்கக்கூடியவளே சரஸ்வதி தேவி. வெள்ளை நிற ஆடை அணிந்து தாமரை மலரில் அமர்ந்து ஒரு கையில் செபமாலையும், மற்றொரு கையில் ஏட்டுச் சுவடியினையும், முன்பக்கத்தில் இரண்டு கைகளில் அழகிய வீணையுடன் தோற்றமளிப்பவேளே சரஸ்வதி தேவி. இவ்வாறு தோற்றம் அளிக்கும் சரஸ்வதி தேவிக்கான நமஸ்துப்யம் பாடல் வரிகளை பார்க்கலாம் வாங்க..!
சரஸ்வதி நமஸ்துப்யம் ஸ்லோகம்:
சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி
வித்யாரம்பம் கரிஷ்யாமி சித்திர்பவது மே சதா
சரஸ்வதி காயத்ரி மந்திரம்:
ஓம் வாக்தேவ்யை ச வித்மஹே
பிரஹ்மபத்ன்யை ச தீமஹி
தன்னோ வாணீஹ் ப்ரசோதயாத்
சரஸ்வதி துவாதச நாமாவளி:
ஓம் பாரதியை நமஹ
ஓம் சரஸ்வதியை நமஹ
ஓம் சாரதாயை நமஹ
ஓம் ஹம்ஸவாஹின்யை நமஹ
ஓம் ஜகதிக்யாதாயை நமஹ
ஓம் வாகீஸ்வர்யை நமஹ
ஓம் கெளமார்யை நமஹ
ஓம் பிரம்மசாரின்யை நமஹ
ஓம் புத்திதாத்ரி நமஹ
ஓம் வரதாயின்யை நமஹ
ஓம் க்ஷ்த்ரகண்டா நமஹ
ஓம் புவனேஸ்வர்யை நமஹ
சரஸ்வதி தேவி கவசம்:
சரஸ்வதி என் தலையைக் காக்க..! வாக்கின்
தலைவியாம் வாக்தேவி நுதலைக் காக்க!
விரசு பகவதி கண்ணைக் காக்க..!
நாசி விமலை வாக்வாதினியாள் காக்க..!
வித்தைக்கு உரிய தனித் தேவதை என் உதடு காக்க..!
உயர் புகழ்ப் பிராம்மி பல் வரிசை காக்க..!
மருவும், ஐம், என்றிடுமனு கண்டம் காக்க..!
வாழ் ஹ்ரீமாம் எழுத்து என்றன் பிடரியைக் காக்க..!
எழுத்தான ஸ்ரீம் எந்தோள் காக்க..! வித்யா திருஷ்டாத்மா
என் மார்பில் இருந்து காக்க..! எழுத்து வித்யா ரூபிணி
என் நாபி காக்க! வாணி கரம் காக்க! எல்லா எழுத்தின்
தேவி விழுத்தக என் அடி காக்க..!
வாக்கிற் சென்று மேய அதிட்டான தேவதைதான்
என்றான் மழுத்த உறுப்பு எவற்றினையும் காக்க..! காக்க..!
முன் கிழக்கில் சர்வகண்ட நாசி காக்க..!
அங்கியெனும் திசைக்கண்ணே நின்று பீஜாட்சரி காக்க..!
மந்திரராஜத்தின் தேவி பொங்கு தெற்கிலேயிருந்து காக்க..!
காக்க..! புகல்மூன் அக்கரவிருவாள் நிருதி திக்கில்
தங்கியெனைப் புரந்து அருள்க..! மேற்குத் திக்கில்
சாற்று நாநுனியுறையும் அன்னை காக்க..!
துங்கமிகு சர்வாம்பிகைதான் வாயு துன்னு திசையில்
என்னைக் காக்க..! சத்யவாகினி வடக்கில் காக்க! எல்லா
கலையினிலும் உறைவாள் ஈசானம் காக்க..! நத்து சர்வ
பூசிதையாள் ஊர்த்துவத்தில் நயந்திருந்து காத்தருள்க!
அதோமுகத்தில் புத்தகவாசினியாகும் தேவி காக்க..!
புகழ் கிரந்த பீஜத்தின் உருவாய் நின்றாள்
எத் திசைகளிலும் இருந்து காக்க..! காக்க..!
எளியேனைக் கலைமகள் தான் என்றும் காக்க! காக்க..!
ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அஷ்டகம் பாடல் வரிகள்
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |