வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

சர்வமங்கள மாங்கல்யே பாடல் வரிகள்..!

Updated On: May 8, 2025 5:07 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

Sarva Mangala Mangalye Lyrics in Tamil

ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் கஷ்டங்கள் நீங்கி செல்வ செழிப்பை உண்டாக்கக்கூடிய சர்வமங்கள மாங்கல்யே பாடல் வரிகளை படித்து தெரிந்து கொள்ளலாம். நம் மனது கஷ்டமாக இருக்கும்போது நமக்கு பிடித்த கடவுளை நினைத்து வணங்கும்போது நம் மனதில் உள்ள கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி மனம் அமைதி நிலையை அடையும். அப்போது நமக்கு ஒரு நம்பிக்கையும் உறுதியும் உண்டாகும். அதேபோல் சர்வமங்கள மாங்கல்யே பாடல் வரிகளை உச்சரிப்பதன் மூலம் நம் மனது அமைதி நிலையில் இருக்கும். எனவே இப்பதிவில் சர்வமங்கள மாங்கல்யே பாடல் வரிகள் மற்றும் அதற்கான விளக்கங்களை கொடுத்துள்ளோம் வாருங்கள் படிக்கலாம்.

சர்வமங்கள மாங்கல்யே பாடல் வரிகள்:

சர்வமங்கள மாங்கல்யே பாடல் வரிகள்

ஸர்வ மங்கள மாங்கல்யே சிவே
ஸர்வார்த்த ஸாதகே
ஸரண்யே த்ரயம்பகே கௌரி
நாராயணி நமோஸ்துதே!

ஸ்ரீமன் நாராயண பாடல் வரிகள்

பாடலின் பொருள்:

எல்லா விதமான மங்கலங்களுக்கும் மங்கலமாய் இருப்பவளே.. மங்கலமானவளே..! எல்லா விதமான யாசிப்புகளையும் தருபவளே.. சரணடைய தக்கவளே.. முக்கண்ணனின் மனைவியே..! மஞ்சள் நிறம் உடையவளே..! ஸ்ரீமன் நாரயணனின் தங்கையே..! உன்னை வணங்குகிறோம்.

Sarva Mangala Mangalye Lyrics in English:

Sarva mangala mangalye shive
sarvaartha saadhike
Sharanye trayambake Gauri
Narayani namosthute

பலன்கள்:

இன்றைய காலத்தில் வறுமை என்பது நோயாக இருக்கிறது. எல்லாரும் ஒரே மாதிரியான வாழ்க்கையை வாழுகிறார்களா என்றால் நிச்சயம் இல்லை. ஒருவரிடம் பணம் இருக்கிறது, இன்னொருவரிடம் பணம் நிறைய இருக்கிறது, இன்னும் சிலரிடம் வறுமையாக இருக்கும். இதற்காக நிறைய பரிகாரங்களை செய்வார்கள்.

நாம் என்ன தான் மாடு மாதிரி உழைத்து சம்பாதித்தாலும் பணம் சேருவதற்கு சில அதிர்ஷ்டம் ஆனது கூட இருக்க வேண்டும். அப்போது தான் நாம் சம்பாதிக்கின்ற பணமானது சேரும். நீங்கள் பரிகாரத்திற்காக செலவு செய்யாமல் வீட்டில் இருந்தபடியே மந்திரத்தை சொன்னால் மட்டும் போதும் என்று சொன்னால் செய்யாமல் இருப்பீர்களா! உங்களின் வாழ்க்கையில் உள்ள வறுமை நீங்கி, அதிர்ஷ்டம் கிடைப்பதற்கு மேல் கூறியுள்ள மந்திரங்களை சொன்னாலே போதும்.

தாமரை பூவில் அமர்ந்தவளே பாடல் வரிகள்

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்

 

Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now